பின்பற்றுபவர்கள்

திங்கள், 17 அக்டோபர், 2016

ஏ கே 47(??!!...)

எண்ண எண்ண  இனிக்குது... 
நண்பர்களே,

தலைப்பில் உள்ள  பொருளுக்கும் உபதலைப்பில் உள்ள கருத்திற்கும் ஏணி போட்டாகூட எட்டாத தூரத்திலுள்ள இந்த இரு துருவ சொற்கள் எப்படி இன்றைக்கு பதிவின் தலைப்புகளாயின என்ற கேள்வி எழுவது வாஸ்த்தவம்தான்.  

திரு. எம்ஜிஆர்  நடித்த திரைப்படத்தின் ஒரு பாடலின் பல்லவியின் முதல்வரி நம் பதிவின் உபதலைப்பை சார்ந்தே ஆரம்பிக்கும் பிறகு அந்த பல்லவியின் கடைசி வார்த்தையில் அஞ்சி ரூபா...என முடியும்.

என்னங்க இன்றைக்கும் சம்பந்தமே இல்லாம ஏதேதோ சொல்லிக்கொண்டே போகின்றீர்கள் இன்றைக்காவது கொஞ்சம் சம்பந்தத்தோடு ஏதாவது சொல்லுங்க என்று நீங்கள் கேட்பது எனக்கு கேட்கிறது.

அது வேறு ஒன்றுமில்லை.

கடந்த மாதம் (செப்டம்பர்) இங்கிலாந்தின் பிரதான வங்கியான Bank   of  England , நாட்டில் புழக்கத்தில் இருக்கும் பழைய ஐந்து பவுண்டு நோட்டுக்களை மாற்றிவிட்டு புதிய நோட்டுகளை அச்சடித்து வெளி இட்டு இருக்கின்றது.

பழைய நோட்டுகள் காகிதத்தால் ஆனதாக இருப்பதால் எளிதில் கிழிந்துபோகிறது, நீண்ட நாள் உபயோகத்திற்கு உகந்ததாக இல்லை என்ற காரணத்தால் இந்த புதிய ஐந்து  பவுண்டு நோட்டுகளை புதிய தொழில் நுட்பத்துடன் பாலிமர் எனும் ஒருவகை பிளாஸ்டிக் தன்மையுடன் தயாரித்து வெளி இட்டு இருக்கின்றது.

இந்த புதிய வகை ரூபாய் நோட்டுகள் தண்ணீரில் நனைத்தாலும் நனையாது, எத்தனை கசக்கினாலும் கசங்காது.

தப்பித்தவறி பாக்கட்டில்  உள்ள பணத்தை  எடுக்காமலேயே துவைக்க நேரிட்டாலும் ரூபாய் நோட்டுக்கு  ஒன்றும் ஆகாதாம்.

இந்த புதிய வகை ரூபாய் நோட்டுகள் சுமார் 440 மில்லியன் அச்சடிக்கப்பட்டு புழக்கத்தில் விடப்பட்டுள்ளன. 

இதில் சீரியல் எண்களாக AA01 000001 என்று  ஆரம்பித்து பின்னர் AB , AC ... இப்படியாக  அச்சடித்து இருக்கின்றனர்.

அப்படி அச்சடிக்க பட்ட ரூபாய் நோட்டுகளில் fancy எண்களாக கருதப்படும் AA001 எனும் வரிசையில் AK47 எனும் எண்ணுள்ள  ஐந்து ரூபாய் நோட்டுக்கு  வெளி  சந்தையில் பெரிய வரவேற்பு இருக்கின்றதாம்.

Image result for new 5 pound note with AK47 series

அந்த குறிப்பிட்ட ஐந்து ரூபாய் நோட்டுக்கு அதிகபட்சம் £ 80,000 வரை கொடுக்க ஒரு சிலர் காத்திருக்கின்றார்களாம்.

எனவே எல்லோரும் தங்களிடம் உள்ள நோட்டுகளின் எண்களை உற்று பார்த்தபோது , அப்படிப்பட்ட அதிர்ஷ்ட்ட ரூபாய் நோட்டு தன்னிடம் இருப்பதை கண்டு  E-Bay மூலம் சுமார் £80,000. ரூபாய்க்கு ஒருவர் விற்றும் இருக்கின்றார் என்ற செய்தி இப்போது வெளி வந்திருக்கின்றது.

அதே போல மற்ற சில எண்களுக்கும் பெரிய வரவேற்பும் பெரு மதிப்பும் , கிராக்கியும் ஏற்பட்டிருக்கின்றதாம்.

இப்படி தான் வைத்திருக்கும் ஏதேனும் ஒரு ஐந்து ரூபாய்  நோட்டு வசீகர எண்ணுடன் இருந்தால் எப்படி இருக்கும் என்று எண்ண எண்ண இனிக்குது  என்பதைத்தான், இந்த பதிவின் வாயிலாக பதிவு செய்தேன்.

என்னிடமும் சில நோட்டுக்கள் உள்ளன, அவை AK 47 ஐ விட கூடுதல் மதிப்புடன் அச்சடிக்கப்பட்டுள்ளது  இருந்தாலும்  அதற்கு ஒன்றும் பெரிய வரவேற்பு இல்லை, அது AK50.  

இப்போ சொல்லுங்க AK 47 னு போட்ட தலைப்பு OK தானே? 

குறிப்பு: ரூபாய் நோட்டு என்று இந்த பதிவில் வரும் அத்தனையும் இங்கிலாந்தின் நாணயமான பவுண்டையே குறிக்கும்.

சரி வந்ததும் வந்துட்டிங்க .. அந்த பழைய பாட்டையும் கொஞ்சம் கேட்டுவிட்டு போங்க.



நன்றி 

மீண்டும் ச(சி)ந்திப்போம்

கோ


4 கருத்துகள்:

  1. நண்பரே என்னிடமும் ஐந்து ரூபாய் நோட்டு இருக்கின்றது அனுப்பி வைக்கவா ? ஆனால் அதில் இங்கிலாந்த் என்பதற்கு பதில் இந்தியா என்று பிரிண்டிங்க் ஆகி இருக்கின்றது எல்லாமே 'இ' தானே....

    பதிலளிநீக்கு
  2. நண்பரே,

    வருகைக்கு மிக்க நன்றி.

    உங்களிடம் இருக்கும் அந்த ஐந்து ரூபாய் நோட்டை நேரடியாக bank of England க்கு அனுப்பி வையுங்கள் பிறகு உங்கள் புகழும் செல்வாக்கும் இங்கிலாந்து முழுவதும் ஒரே இரவில் உயர்ந்துவிடும்.

    கூடவே மறக்காம உங்க புகைப்படத்தையும் இணைத்து அனுப்புங்கள் , இங்கிலாந்து மக்களுக்கு உங்களை ரொம்ப பிடித்துவிடும்,பார்லிமென்ட் வளாகத்தில் மகாத்மா காந்தியின் சிலைக்கு அருகில் உங்களின் சிலையையும் அமைக்க கூடும்.

    கோ

    பதிலளிநீக்கு