மணக்குமா? இனிக்குமா?
நண்பர்களே,
இது என்ன தலைப்பு?
மாற்றான் தோட்டத்து மல்லிகை என்றுதானே கேட்டிருக்கின்றோம்.
சரிதாங்க, நானும் மல்லிகை என்றுதான் சில நாட்கள் வரை கேட்டிருந்தேன்.
ஆனால் சமீபத்தில் ஊருக்கு சென்றபோதுதான் இந்த மல்லிகாவை குறித்து அறிந்து சுவைத்தேன்.
என்ன சுவைத்துகூட விட்டீரா?
ஆமாங்க.
இப்போ நம்ம ஊரில் சரியான மாங்காய் சீசன் என்பது நாம் அறிந்ததே.
இந்த வருடம் சந்தைக்கு வந்த மாங்காய்களில் ஒருவகை மாங்காய்க்குத்தான் இப்படி பெயர் வைத்துள்ளனர். மல்லிகா என்று.
(இது வேற ரகம் - ஒருவேளை கனகவோ?)
.
சுவைமிக்க அந்த மாம்பழம் நண்பரின் தோட்டத்தில் இருந்து கொண்டு கொடுக்கப்பட்டது.
எந்த மானுடனும் இதுவரை கண்டிராத சுவைகொண்ட இந்த மாம்பழத்தின் சுவையினை தேனுடன் தான் ஒப்பிட வேண்டும் அத்தனை இனிப்பு.
மல்கோவா மாம்பழத்தை விட மூன்று மடங்கு பெரிது.
ஒரு பழத்தை துண்டுதுண்டுகளாக அரிந்தால் குறைந்த பட்சம் பத்துபேர் வரை சுவைக்கலாம் இந்த மல்லிகாவை.
அதன் விதையும் மிக மிக தட்டையாகவே உள்ளதால் சதை பிடிப்பு அதிகம்.
ஊரில் இருந்து திரும்பி வரும்போது கொண்டுவந்து அரிசி மூட்டையில் வைத்து பழுக்க வைத்து பதம் பார்த்தோம். ஆஹா.... என்னே சுவை.
வேண்டுமென்றால் கண்டுபிடித்து சுவைத்துப்பாருங்கள் மல்லிகாவை.
நன்றி.
மீண்டும் ச(சி)ந்திப்போம்
கோ