மூச்சுக்கு முப்பத்தெட்டு தடவைகள், நம் கலாச்சாரம், பண்பாடு, நாகரீகம், பாரம்பரியம் என்று சில விஷயங்களை பேசும் நாம் பல விஷயங்களில் பழமையை விட்டு வெகுதூரம் வந்துவிட்டோம் என்பதை நினைத்து பார்க்க கூட மறந்து போய்விட்டோம்.
தேம்ஸ் கரை தாண்டா புரண்டோடும் நதி வெள்ளம் ஜதி பாடும் பின்னணி தாளம் கேட்டு பிண்ணப்பட்ட இந்த பதிவினில் கொஞ்சம் பதியுங்கள் உங்கள் பார்வைகளை, பகிருங்கள் உங்கள் உறவுகளோடு இந்த கோர்வைகளை.
தமிழர் திருநாள் அல்லது உழவர் திருநாள் அல்லது அறுவடை திருநாள், அல்லது நன்றியின் நன்னாள் என்று வரபோகும் தை பொங்கல் திருநாளை எத்தனை விதங்களில் அழைத்தாலும் அவை அத்தனையும் ஒட்டு மொத்தமாக இன்பத்தை நம் இதயங்களில் பொங்கச்செய்யும் மகத்துவ நிறைவையும் குதூகல மகிழ்வையும் கொடுக்கும் , இயற்கையோடு இயைந்த ஒரு உன்னதமான பண்டிகை பொங்கல் திருநாள்.