பின்பற்றுபவர்கள்

சனி, 28 நவம்பர், 2015

மழைக்குள் குடை

மனசுக்குள் அடை

நண்பர்களே,

கடந்த சில வாரங்களாக அடாது பெய்துகொண்டிருக்கும்  மழையின் காரணமாக பல இன்னல்களுக்கும் இடர்களுக்கும், தாங்கொண்ணா துயரங்களுக்கும் ஆளான தமிழக மக்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்து கொள்கிறேன்.

வெள்ளி, 27 நவம்பர், 2015

முதல்வர் முன்னிலையில் "கோ"வின் மேடைபேச்சு. - 4


வாகை சூடும் உன் வாசல் தேடும்....

தொடர்கிறது....

முதலில் இருந்து வாசிக்க  முதல்வர் முன்னிலையில் "கோ"வின் மேடைபேச்சு.-3 சொடுக்குங்கள்

அடுத்ததாக மொழிப்பற்று:

நாம் எந்த மொழியினராக இருந்தாலும் அவரவர் தாய் மொழியினை மதிக்கவும் , அவற்றை பேசவும் , எழுதவும் படிக்கவும் தெரிந்து வைத்திருப்பது அவசியம்.  நாமே நம் தாய் மொழியின் மீது நாட்டம் குறைந்தவர்களாக இருப்பின் வேறு எவர் நம் மொழியை கொண்டாடுவர்.

வியாழன், 26 நவம்பர், 2015

முதல்வர் முன்னிலையில் "கோ"வின் மேடைபேச்சு. - 3

மெய்பொருள் காண்பது அறிவு!

தொடர்கிறது....

முதலில் இருந்து வாசிக்க  முதல்வர் முன்னிலையில் "கோ"வின் மேடைபேச்சு -  சொடுக்குங்கள்

அவையில் கூடி இருக்கும் அன்பிற்கினிய  தம்பி தங்கைகளே, உங்களோடு மூன்று செய்திகளை கூறி விடைபெறலாம் என நினைக்கின்றேன், அவற்றுள் முதன்மையானதும் நான் மிக முக்கியமானதாக கருதுவதும் " தேசபற்று".

புதன், 25 நவம்பர், 2015

முதல்வர் முன்னிலையில் "கோ"வின் மேடைபேச்சு. - 2

தவப்புதல்வனுக்கு தலை வணக்கம்


தொடர்கிறது....

முதலில் இருந்து வாசிக்க  முதல்வர் முன்னிலையில் "கோ"வின் மேடைபேச்சு சொடுக்குங்கள்.

மேடையில் கற்றறிந்த பெரியயவர்களுக்கு நடுவில் பிரதான இருக்கையில் அமர்ந்தபடி அரங்கில் கூடி இருந்த அறிவார்ந்த பெரியோர்களையும் நாளைய சமுதாயத்தின் சிற்பிகளாகிய இன்றைய மாணவ மாணவியரை பார்ப்பது ஒரு த்ரில்லான அனுபவமாக இருந்தது.

செவ்வாய், 24 நவம்பர், 2015

முதல்வர் முன்னிலையில் "கோ"வின் மேடைபேச்சு.



என்னவென்று நானுரைப்பேன்?

நண்பர்களே,

எமது முந்தைய பதிவான ஒரு கல்லில் மூன்று மாங்கனிகளில் இறுதியில், என்னுடைய கல்லூரி பழைய மாணவர் பேரவையில் இருந்து அழைப்பு வந்ததா என்பதை பிறகு சொல்கிறேன் என்று முடித்திருந்தேன்.

ஞாயிறு, 22 நவம்பர், 2015

"வாலைப்பல தோலு வலுக்கி விலுந்த ஆலு"

பெண்ணே உன் மேல் பிழை (இல்லை) 

நண்பர்களே,

தமிழை தாய் மொழியாக கொண்டிருக்கும் (நம்மில்) பலரும்  தமிழ் எழுத்துக்களை அவற்றிற்குறிய ஓசையுடன் உச்சரிக்காமல் தமிழை அதன் சுவையை நச்சரிக்கும் வண்ணம் உச்சரிக்கும்போது கேட்பதற்கு கொஞ்சம் கஷ்டமாகத்தான்  இருக்கின்றது.

வியாழன், 19 நவம்பர், 2015

"நூறாண்டுகாலம் வாழ்க"

டும் ...டும் ...டும் 

நண்பர்களே,

எல்லா திருமண விழாக்களில் வாழ்த்தி பேசும் பெரியவர்கள், மணமக்கள், பதினாறும் பெற்று நூறாண்டுகள் வாழ்க என வாழ்த்துவதை நாம் கேட்டிருப்போம்.  அதுதான் மரபு ரீதியான திருமண வாழ்த்தும்கூட.