பின்பற்றுபவர்கள்

செவ்வாய், 3 அக்டோபர், 2017

தங்கைக்கொரு கீதம்.......

தரம் கெட்ட ராகம்... 

நண்பர்களே,

பேச்சுக்கு பேச்சு நாகரீகம், கலாச்சாரம், பண்பாடு , மேடை நாகரீகம் என்று பேசும் சில அதிமேதாவிகளின் உள்ளத்தின் நிறைவினை அவர்கள்
அறியாமலேயே அம்பலத்தில் அவர்கள் வாயிலேயே அம்பலப்படுத்தும்படி சிலருக்கு சந்தர்ப்பங்கள் வாய்த்துவிடுவது அவர்களின் முகத்தில் அவர்களே கரியை  பூசிக்கொள்வதற்கு சமமாகும்.

சக ஆண்களை கொச்சையாக நான்கு  சுவற்றுக்குளாக பேசுவதே தவறு- அநாகரீகம் என்று நாகரீக உலகத்தில் எல்லோரும் நினைப்பதும் பேசுவதும் எழுதுவதும் நிகழ்ந்து கொண்டிருக்க, பெண்களை கொச்சைப்படுத்தி அதுவும் ஊடகங்களின் வாயிலாகவும் , பொது மேடை களின் வாயிலாகவும் , வாயிற்கு வந்ததெல்லாம் சொல்லி, ஒருமையில் விளித்து பேசி அவமானப்படுத்துவது   - அவர்களின் வயது, நிறம், உயரம், கூந்தல், ஆடை,படிப்பு, அறிவு, வேலை, தொழில்,பொருளாதார  அந்தஸ்த்து போன்றவற்றை விமர்சிப்பது  என்பது ஏற்றுக்கொள்ள முடையாதது.

தாம் பல கலை  வித்தகரானாலும் , பட்ட மேற்படிப்பு படித்ததாக பறை சாற்றிக்கொண்டாலும், தம்மிடம் தன்னம்பிக்கை தறிகெட்டு வழிந்தோடுவதாக தம்பட்டம் அடித்துக்கொண்டாலும், ஆன்மீக பாதையில் பயணிப்பதாக சொல்லிக்கொண்டாலும்  , எதுகை மோனை என்ற பெயரில் பொருத்தமில்லாத சொற்கலவையினை உபயோகிப்பதால், தாம் என்ன பேசினாலும் தமக்கு கைதட்டும் அறிவிலிகள் தம்மை சூழ்ந்திருப்பதாலும் , வறுமையின் பிடியிலிருந்து விடுபட்டு  விட்டோம் ,தாம் இப்போது உலகறிந்த ஒரு ஒப்பற்ற மனிதர்(??) என்ற சிந்தை வளர்ந்துள்ளதாலும்  ஒரு சிலர் தன்னிலை மறந்து , இடம் பொருள் ஏவல்களை பொருட்படுத்தாமல் தமக்கு வயதிலும் வாய்ப்பிலும் , வசதியிலும் இளையவராகவோ , புதியவராகவோ இருப்பவர்களை பொதுமேடையில் வைத்து பலர் முன்னிலையில் , ஏக வசனத்திலும் ஒருமையில் பேசும் மனிதர்கள் அருவெறுக்கத்தக்கவர்களாக முத்திரை குத்தபடுவார்கள்.

மறந்தும்  பெண்களை தொட்டுக்கூட பேசமாட்டேன் அவர்கள்மீது அத்தனை மரியாதை கொண்டவராக சொல்லிக்கொள்பவர்கள் பெண்களுக்காக எத்தகைய இடத்தை தம் சிந்தையிலும் எண்ணங்களிலும் மனதிலும் வைத்திருக்கின்றனர் என்பது, அவர்களின் சுயரூபம் வெளிக்கொண்டு வந்துவிடும்.

தலை கணம்  என்பது தலைக்கு மேலே வளர்ந்து படர்ந்திருக்கும் தலை முடியின் பாரத்தால் வருவதில்லை, தான்தான் ஒரு அஷ்டாவதானி, தனக்குத்தான் எல்லாம் தெரியும் தனக்கு முன்னால் மற்றவர்கள் எல்லாம் திறமை அற்றவர்கள் என்று எஎண்ணிக்கொண்டிருப்பவர்கள்தான் உண்மையிலேயே தலைகனம் மிக்க வர்கள்.

தமக்கு "பேர்" ஆசை இல்லை என்று சொல்லுபவர்கள், தங்கள் பெயரை மேடையில் சிலர் சொல்லாமல் விட்டுவிட்டதை பெரிதாக எடுத்துக்கொள்ளமாட்டார்கள்.

தன் பெயர் சொல்லப்படவில்லை என்பதற்காக hysteriaவால் பீடிக்கப்பட்ட   மன நோயாளியைப்போல்    ருத்த்ர தாண்டவம் ஆடுபவர்கள் எத்தனை பேராசை காரர்கள் என்பது இப்போது உலகம் அறிந்திருக்கும்.

இடையில் எந்த மொழியின் வார்த்தைகள் என யூகிக்கமுடியாதபடி  ஆஅஹ்ஹ்.. ஊஹ்ஹ்ஹ.. என்றுகூட சொல்கின்றனர் -   இது எதன் வெளிப்பாடு?.

தான் தம்மைவிட எளியவரை மட்டம் தட்டி அவமானப்படுத்துவதாக எண்ணி அவர்களே அவர்கள் மீது களங்கத்தை வாரி பூசிக்கொண்டதுமில்லாமல், பார்ப்பவர்களை முகம் சுழிக்க செய்ததோடும் அல்லாமல், துப்பினால் துடைத்துக்கொள்ளக்கூட முடியாதளவிற்கு அளவிற்கு பெரும் காறித்துப்பல்கள்  உலகலாவிய மக்களிடமிருந்து பொழிந்துகொண்டிருப்பதைசம்பந்தப்பட்டவர் அறிந்திருப்பாரா என தெரியவில்லை.

இனி பொது மேடை அல்லது உலக மக்கள் பார்க்கக்கூடிய காட்சி   ஊடகத்தின் வாயிலாக நிகழ்ச்சி நடத்துபவர்கள், தாங்கள் அழைக்கும் சிறப்பு(!!) விருந்தினர் எத்தனை  பெரிய "கொம்பனாக" இருந்தாலும் , முன்னதாகவே அவர்கள் தங்கள் பேச்சுக்களில் யாரையும் தனிப்பட்ட விதத்திலோ, அல்லது மரியாதை குறைவாகவோ, அல்லது ஒருமையிலோ அல்லது ஏக வசனத்திலோ, அல்லது யாருடைய ஜாதி மத மொழி இன உணர்வுகளை கொச்சை  படுத்தும்விதமாக பேசக்கூடாது என சொல்லிவைப்பது நல்லது..

அப்படியும் அவர்கள் தங்கள் வரம்பை மீறும்போது அந்த நிகழ்ச்சி நேரடியான ஒளிபரப்பாக இருந்தாலும் அதனை உடனே  நிறுத்துவது நாகரீக  ஊடக தர்மமாக  கருதப்படும்.

சமீபத்தில் காண நேர்ந்த ஒரு காணொளி நிகழ்ச்சியின் பாதிப்பின் தாக்கம் இந்த பதிவு,  மற்றபடி யாரையும் தாக்கும் பதிவல்ல.

தலைமுடியில் இருக்குதுப்பார் பொடுகு -  அவர்க்கு
தலைக்குள்ளே இருக்கும்(!!) அளவு கடுகு. 

தங்கச்சிக்கு வைக்க நினைத்தார் ஆப்பு, 
தரணிக்கெல்லாம்  நல்ல செய்தி  "பீப்பு". 

உறவைக்காத்த கிளிக்குசொன்னார் பாடம் -இப்போ
உடைந்து கலைந்து போனதவர் வேடம். 

அழகு நிலா உடைத்து செய்வார்  மாலை
அமாவாசையில் ஏது உமக்கு  வேலை.. 

அடுக்கு மொழி சொல்லுவதை விடுத்து - நல்ல 
அர்த்தமொழி   சொல்லப்பழகு  அடுத்து.

மைக்கை பார்த்தால் மணிக்கணக்கில் லெக்ச்சருங்க..
மான தமிழனென்றால் ஈன பேச்சை விட்டுருங்க.

தங்கைக்கொரு கீதம் பாடும் "வெண்ணை". - தானே 
தலையில் வாரி போட்டுக்கொண்டார் மண்ணை.

பரட்டைதலை தாஸு - இனி 
பக்குவமா நாக்கை அடக்கி  பேசு"

பதிவு கொஞ்சம் நீண்டுபோச்சு (மனம்) ஆறவில்லை..
இதுக்குமேல எழுத எனக்கு நேரமில்லை.

(அட.. நமக்கும்  வரும்போல...... . )

நன்றி.

மீண்டும் ச(சி)ந்திப்போம்

கோ 

8 கருத்துகள்:

  1. இவன் நானும் இருக்கேன் அப்படினு அப்பப்ப கூவிக்கிட்டே திரியிறான்...

    நண்பரே விடுகதை போட்டு இருக்கிறேன் வந்து விடை சொல்லுங்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இப்படிதான் தங்களின் இருப்பை மக்களுக்கு நினைவூட்டவேண்டுமா?..... அநாகரீக செயல்.

      வருகைக்கு மிக்க நன்றி நண்பா.

      கோ

      நீக்கு
  2. அந்த வெண்ணை கொஞ்ச நாளாவது வாயை அடக்கி கொள்ளும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் என் எண்ண ஓட்டத்தை அங்கீகரித்ததற்கும் மிக்க நன்றிகள்.

      கோ

      நீக்கு
  3. பதில்கள்
    1. ஆமாம் ஐயா... வருகைக்கும் பதிவை ஆமோதித்ததற்கும் மிக்க நன்றிகள்.

      கோ

      நீக்கு
  4. கோ! நீங்களும் அவரைப் போலவே எழுதியது மிகவும் சிறப்பு என்றாலும் அந்த ஆளுடன் உங்களை ஒப்பிட்டுப் பார்க்க மாட்டோம்!! அவரைப் பற்றி எல்லாம் எழுதி பேசுவதே வேஸ்ட் என்றும் தோன்றுகிறது.... எனக்குத் தோன்றியது அங்கிருந்த மேடையில் இருந்தோரும் சரி பார்வையாளர்களில் இருந்தோரும் சரி யாருமே குரல் எழுப்பாதது வியப்பு. ஓ அதுவும் அவை நாகரீகம் கருதியோ?!!! எதற்கெல்லாமோ கூட்டத்தில் குரலெழுப்பி மேசையில் தட்டி, கல்லெறியும் மக்கள் இந்த நிகழ்வில் தங்கள் எதிர்ப்பை நாகரீகமாக, பொலைட்டாக வெளியேறியேனும் தெரிவித்திருக்கலாம்...அப்போ எல்லோருமே அவரது கருத்தை ஆதரித்தது போல அல்லவா இருக்கிறது?! இல்லையா...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் தங்களின் ஆதங்கம் புரிகிறது. புரிகிறது.

      நானும் அப்படிதான் நினைத்தேன், எதற்கெல்லாமோ எதிர்ப்பை காட்டும் நம் சமூக அமைப்புகள் இதற்கு ஏன் ஒரு சிறிய அளவில்கூட குரல் கொடுக்க வில்லையென்று.

      சில பொதுநல வழக்குகளை நீதி மன்றங்கள் தாமாகவே முன் வந்து பதிவு செய்து விசாரிக்கும்போது இந்த விஷயத்தில் அமைதியாய் இருப்பது ஏன் என்று தெரியவில்லை.

      ஓரளவிற்கு புகழ்பெற்று சமூகத்தில் பிரபலமாக அறிமுகமாகி இருக்கும் பெண்களுக்கே இந்த கதி என்றால், பாமர, ஏழை , குக் கிராமத்து மக்களுக்கு என்ன கதி?

      கோ

      நீக்கு