வருவாரா...??
நண்பர்களே,
முன் பதிவை வாசிக்க....ஷோலேக்கு பீச்சே..க்யா ஹே??
இத்தனை தூரம் சொல்லிகொண்டுவந்த எந்த திரைப்படங்களில் ஒன்றைக்கூட , சாதாரண திரை அரங்குகளிகூட நான் இதற்குமுன் பார்த்ததே இல்லை என்பதால் மட்டுமின்றி தொழில்நுட்ப கலவையும் என் பிரமிப்பிற்கு காரணமாக அமைந்துவிட்டது.
எங்கு பார்த்தாலும் ஹிந்தி திரை உலகம் சம்பந்தபட்ட அவதார புருஷர்களான அமிதாப் பச்சன் துவங்கி , தர்மேந்திரா, அம்ஜத்கான், சஞ்சீவ்குமார், ஷாருக்கான், சல்மான்கான், ஹிருத்திக்ரோஷன் வரை பல பாலிவுட் பிரபலங்களின் பிரமாண்ட புகைப்படங்கள், கட் அவுட்டுகள், ஆளுயர உலோக சிலைகள், திரை காட்சிகள், மேடை நாடகங்கள், விற்பனை பொருட்கள் பாடல்கள், நடனங்கள், பதாதைகள் என நிறைந்திருந்த அந்த வளாகம் 1.7மில்லியன் சதுர அடியில் பம்பாய் பாலிவுட்டின் வர்ண ஜாலங்களை ஒரே வளாகத்தில் கண்டு களித்து பிரமிக்கும்படியாக அமைக்கப்பட்டிருக்கும் Bollywood theme park ஹிந்தியரின் பெருமைமட்டுமல்ல அது இந்தியாவின் பெருமையும் கூட.
இத்தனையையும் கண்டு மனம் குதூகலித்து மகிழ்ந்திருந்தாலும் , இதுபோல் நம்மவூர் கோலிவுட் திரை பிரம்மாண்டங்களையும் , திரையுலக ஜாம்பவான்களின் திரைபடங்களையும் , நம் தமிழ் கலாச்சாரத்தின் பிரதிபலிப்பாக திகழும் பல சிறந்த பட காட்சிகளையும் , நாடகங்களையும் , பாடல்களையும் உலக மக்கள் கூடும் இதுபோன்ற தீம் பார்க்குகளில் அமைத்தால் எப்படி இருக்கும் என்ற சிந்தனையும் என் மனதில் தோன்றியது.
இப்படி எனக்கு தோன்றிய சிந்தனையின் வெளிப்பாடுபோலவே அங்கு வந்திருந்த பல தமிழ் சகோதர சகோதரிகள் வாய்விட்டே பேசிக்கொண்டு இருந்தனர்.
அதில் முக்கிய கேள்வி, இதுபோன்ற உலக தரம் வாய்ந்த இந்த பாலிவுட் தீம் பார்க்கை போல கோலிவுட் தீம் பார்க்கும் அமைந்து அதில் 7 பரிமாண திரைப்படங்களில் ரஜினி வருவாரா என்பதுதான்.?
தமிழ் நாட்டில் மூலை முடுக்குகளிலெல்லாம் கேட்கப்படும் பல மில்லியன் (???!!!) டாலர்களுக்கு ஒப்பாக, மாநில எல்லை கடந்து தேசீயம் முழுவதும் கேட்கப்படும் கேள்வி சூப்பர் ஸ்டார் ரஜினி வருவாரா? என்பது.
இப்போது இதே கேள்வியினை துபாயில் கேட்டபோது ஆச்சரியமாக இருந்தது.
அதில் ஒரு இளைஞர் , "இதுபோன்று பல மடங்கு அதி நவீன தொழில் நுட்பத்துடன் நம்ம ஊர் கோலிவுட் பிரமாண்டங்களும் விரைவில் வரும். அதில் எம் ஜி ஆர், சிவாஜி, ஜெமினி வரிசையில் நம்ம சூப்பர் ஸ்டார் ரஜினியும் வருவார், கண்டிப்பாக வருவார்" என்று பெரும் நம்பிக்கையுடன் சொல்ல எல்லோரும் மகிழ்ச்சி ஆரவாரம் செய்ய வளாகத்தின் தூரத்து மூலையில் இருந்து அலங்கார மேடையில் நடனக்கலைஞர்களின் நடனத்திற்கான அடுத்த பாடலாக "லுங்கி டான்ஸ்" பாடல் ஒலிக்க கூடி இருந்த தமிழ் உள்ளங்கள் உவகையால் "பொங்கி" வழிந்தன.
மேடையில் தோன்றி நடித்தது மட்டுமல்லாமல், வெளி அரங்க மேடையில் நடமாடிய சல்மான் கானின் டூப்ளிகேட் நடிகருக்கு என் அன்பையும் பாராட்டையும் அவரது கைகளை குலுக்கி தெரிவித்துவிட்டு , வாசல்வரை வழி நெடுகிலும் பின்னணி ஹிந்தி பாடல்களுக்கேற்ப சிறப்பாக நடனமாடி மகிழ்வித்து வழி அனுப்பி வைத்த முப்பதிற்கும் மேலான ஆண் பெண் நடன கலைஞர்களோடு இணைந்து புகைப்படமும் எடுத்துக்கொண்டு இரவு சுமார் பனிரெண்டு மணிக்கு அவ்விடம் விட்டு வெளியில் வந்தேன்.
அடுத்த மாதம் ஓராண்டு நிறைவு செய்யபோகும் இந்த பாலிவுட் தீம் பார்க்கிற்கு எமது வாழ்த்துக்கள்.
அடுத்து என்ன எங்கே?......
நன்றி.
மீண்டும் ச(சி)ந்திப்போம்.
கோ
வித்தியாசமான, ரசிக்கும்படியான இடத்திற்கு அழைத்துச் சென்றமைக்கு நன்றி.
பதிலளிநீக்குவருகைக்கு மிக்க நன்றி ஐயா.
நீக்குகோ
ரஜனி வருவார் என்றதும் ஓ இன்று அரசியல் பதிவு என்று நினைத்து வந்தால்....துபாயில் பாலிவுட் பதிவு விரைவில் கோலிவுட்டும் வரும் என்பது சந்தோஷம். ரொம்ப ஆச்சரியம் என்னவென்றால் வளைகுடா நாடுகளில் நம் கேரளத்தவர்தான் அதிகம். அப்படி இருக்க மல்லுவுட் வராமல் போனது எப்படி?!!! வியப்புதான்...
பதிலளிநீக்குபுகைப்படம் எடுத்துக் கொண்டால் மட்டும் போதுமா இங்கு பகிரமாட்டீங்களோ!!
உண்மையாகவா சொல்கின்றீர்கள், இதை அரசியல் பதிவென நினைத்தாக நீங்கள் சொல்வது உண்மையா... நம்பவே முடியலே.
நீக்குஇந்த ஒருமுறையேனும் என்னுடைய பதிவு எதைப்பற்றி என்று உங்களால் யூகிக்க முடியாமல் போனது எனது வெற்றிதான்(!!!!).
வருகைக்கு மிக்க நன்றிகள்.
கோ