இதயத்தில் குளுமை!!.
நண்பர்களே,
முன் பதிவினை வாசிக்க பார்க்கும் இடமெங்கும் பரவசம்...பார்க்கும் இடமெங்கும் பரவசம்...
அழகாக அமைக்கப்பட்ட காட்சிதொகுப்பும் பின்னணி இசையும் பிரமாண்ட தயாரிப்பும் புரட்சிகர இளைஞனாக நடித்த அமீர்கானின் நடிப்பும் திகைப்புடனான அற்புதம் என்றே சொல்ல வேண்டும்.
லகான் என்ற அந்த திரைப்பட காட்சிகளின் பிரமாண்டம் இன்னமும் என் பிரமிப்பை குறைக்கவில்லை.
லகான்....யாரும் இதனை மிகான்.
லகான்....யாரும் இதனை மிகான்.
அடுத்து பார்த்த குறும்படம் ஏற்கனவே பார்த்த ஏழு பரிமாண குறும்படத்தை போன்றே கூடுதலான தொழில் நுட்பத்துடன் வடிவமிக்கப்பட்டிருந்த திரைப்படம் கிரிஷ்.
இந்த திரைப்படம் , உண்மையிலேயே, கர்ப்பிணிகள், இதய பலவீனமானவர்கள், உயரங்களை கண்டால் பயப்படுபவர்கள் Acrophobia (ride) இருப்பவர்கள் கண்டிப்பாக இந்த குறும்படத்தை இந்த மோஷன் ஸ்டிமுலேட்டர் திரையரங்கில் பார்ப்பதை தவிர்க்கவேண்டும்.
இவற்றை படம் என்று சொல்வதைவிட ஒரு ரோலர் கோஸ்டர் பயணம் அல்லது சவாரி என்றுதான் சொல்லவேண்டும்.
இறுக்கமாக அணியப்பட்ட பாதுகாப்பு இருக்கைகளில் அமர்ந்துதான் இதனை பார்க்க வேண்டும். இதை காண பிரத்தியேக கண்ணாடிகள் தேவை இல்லை.
எல்லோரும் அரங்கத்தில் அமர்ந்தபின்னர் அனைவரது பாதுகாப்பு கணனியின் உதவியுடன் உறுதி செய்தபின்னர் காட்சிகள் துவங்குகின்றன.
இடையில் யாருக்கேனும் அசௌகரியங்களோ, மேற்கொண்டு பார்க்க கூடாதபடி மயக்கமோ, தயக்கமோ, மனதினில் குழப்பமோ...வானங்களை, கடல்களை, மலைகளை, பள்ளத்தாக்குகளை கடந்து , பறந்து , சீறிப்பாயும் காட்சிகளினூடே நாமும் இணைந்து பயணிக்கும்படியான இந்த அனுபவத்தால் நடுக்கமோ, திகிலோ பயமோ ஏற்பட்டால், பாதுகாப்பு அதிகாரிகள் அந்த குறிப்பிட்ட நபரின் விருப்பத்திற்கேற்ப அவரை வெளியேற்றி விடுகின்றனர்.
இயற்கைக்கு அப்பாற்பட்ட அதீத சக்தியினை தனது தந்தையிடமிருந்து சுவீகரித்துக்கொண்ட ஒரு இளைஞனின் வீர தீர சாகச காட்சிகளின் தொகுப்பாக நவீன யுக்திகளை உட்புகுத்தி எடுக்கப்பட்ட ஏழு பரிமாணப்படமாகிய இந்த க்ரிஷ் ஏற்கனவே வெளிவந்து சக்கை போடு போட்டு இந்திய / ஹிந்திய ரசிகர்களின் மத்தியில் ஆரவாரத்தையும் பெரும் அதிர்வலைகளையும் ஏற்படுத்தி வசூலில் சாதனை படைத்த "கோய் மில் கயா." என்ற படத்தின் தொடர் கதையாக வடிவமைக்க பட்ட இந்த திரைப்படத்தின் சில காட்சிகளின் தொகுப்புதான் இந்த குறும்படம்.
எத்தனையோ மோஷன் ஸ்டிமுலேட்டர் படங்களை நயாகரா, பாரீசு , லண்டன், மால்டா போன்ற இடங்களில் பார்த்திருந்தாலும் இந்திய திரைப்படங்களின் காட்சிகளை இத்தனை அதி நவீன தொழில் நுட்பத்துடனான ஏழு பரிமாண காட்சிகளாக இதற்கு முன் பார்த்ததில்லை.
காண்போரின் ஹிருதயத்தை கொள்ளை கொள்ளும் ஹிருத்திக் ரோஷன் very apt for this motion.
அடுத்து என்னை பிரமிக்க வைத்த நிகழ்ச்சிகளும் காட்சிகளும் ஒரு சிறிய இடைவெளிக்கு பின்....
அதுவரை..
நன்றி.
மீண்டும் ச(சி)ந்திப்போம்
கோ
முப்பரிமாணக் காட்சி கண்டதுண்டு...ஆனால் 7 பரிமாணக் காட்சி கண்டதில்லை. உங்கள் பதிவு காணத் தூண்டுகிறது...மால்களில் இருக்கும் காண வேண்டும்..
பதிலளிநீக்குகீதா: நான் கண்டதுண்டு. இங்கு சென்னையில் மால்களில் குறும்படம் 15 நிமிடம் 20 நிமிடம் என்று நாமும் அதனூடே சென்று மிகவும் நன்றாக இருக்கும். கல்ஃபோர்னியாவில் 17 வருடங்களுக்கு முன் 9 மாதங்கள் இருந்த போதும் கண்டதுண்டு. டெக் ம்யூஸியத்தில். அருமையாக இருக்கும். ஆனால் உங்கள் விவரணம் வழி அறிவது துபாயில் இன்னும் சிறப்பாக இருக்கும் போல...காத்திருக்கிறோம் அடுத்தபதிவிற்கு...
தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றிகள்.
நீக்குநீங்கள் அனைத்திலும் - அனைவருக்கும் முன்னோடி என்பது பெருமைக்குரிய விஷயம்.
உங்களிடமிருந்து கற்க வேண்டியவை ஏராளம்.
வாழ்த்துக்கள்.
கோ