பின்பற்றுபவர்கள்

வியாழன், 12 அக்டோபர், 2017

உள்ளே! வெளியே!!


சிஸ்டம் சரி இல்லைதான்.

நண்பர்களே, 

கட்டுப்படுத்தமுடியாத கலவரங்கள் நிகழும்போதும், விலைவாசி கிடுகிடு என்று உயரும்போதும், கொடிய நோய்க்கிருமிகள் பரவி மக்களின் இயல்பு
வாழ்வும் மக்களின்  மேலான உயிர்களின்  இழப்பின்போதும் ஆளும் அரசாங்கத்தை எதிர்த்து குரல் கொடுப்பவர்கள் சொல்லுகின்ற "ஞாயமான" குற்றச்சாட்டு, "அரசு இயந்திரம் சரியாக இயங்கவில்லை", " சிஸ்டம் சரியில்லை" என்பவையே.

தலைப்பையும் உட் தலைப்பையும் பார்த்தவுடன் உங்களின் கற்பனை குதிரைகள் தறிகெட்டு ஓடி பல செய்திகளை உங்களுக்கு கொண்டுவந்து சேர்த்திருக்கும்.

ஆனால் இங்கே  உள்ளே வெளியே  என்று சொல்வதும்  சிஸ்டம் சரியில்லை என்று சொல்லுவதும் இங்கிலாந்தில் இன்று நடந்த ஒரு நிகழ்வினை முன்வைத்து  சொல்லப்படும் குற்றச்சாட்டு.

அப்படி என்ன நிகழ்ந்தது?

இன்று மத்திய உணவு இடைவேளையின்போது அருகிலிருக்கும் வங்கிக்கு சென்று காசோலைக்கொடுத்து பணம் பெற்றுக்கொண்டேன்.

பணத்தின் காகித நாணயத்தின்  எண்ணிக்கையையையும் அதன் கூட்டு தொகையையும் சரி பார்த்தேன்.

அடுத்து பிளாஸ்டிக் பைகளில் போட்டு கொடுக்கப்பட்ட உலோக  நாணயங்களை எண்ணி பார்க்காமலேயே பையில் வைத்துக்கொண்டு அலுவலகம் வந்து சேர்ந்தேன். அவை சரியாக , இயந்திரம் கொண்டு எண்ணி சீல் வைக்கப்பட்டிருந்ததால்.  

அலுவலகம்  வந்தவுடன்  பெட்டகத்தில் வைக்கும்முன் மீண்டும் எண்ணி பார்த்தேன், காகித பணம் சரியாக இருந்தது.

வழக்கமாக இருபது உலோக நாணயங்கள் போடப்பட்டு  இருக்கும் அந்த பிலாஸ்டிக் கவரில் இருந்த பணத்தை எண்ணி பார்க்கையில் இருபதிற்கு பதிலாக பத்தொன்பது நாணயங்கள் மட்டுமே இருந்தன.

மீண்டும் மீண்டும் எத்தனை முறை எண்ணினாலும் பத்தொன்பது நாணயங்களே இருப்பதை அறிந்து, மீண்டும் வங்கிக்கு சென்று முறை இட்டேன்.

அவர்கள் அந்த பண மூட்டையை(!!)  உலோக நாணயங்களை அதன் எடையைக்கொண்டு அதன் மதிப்பை கணக்கிடும் இயந்திரத்தின் மேல் வைத்து பார்த்தனர்.

அந்த இயந்திரம்  இருபது  என காட்டியது.

சரியாகத்தான் இருக்கின்றது என்றார்.

அதெப்படி இருபதாக இருக்க முடியும் நான் பல  முறை எண்ணி பார்த்தேனே, பத்தொன்பதுதானே இருந்தது?

இப்போது அந்த காசாளர் நாணயங்களை வெளியில் எடுத்து ஒவ்வொன்றாக எண்ணி பார்த்தார்.

அவருக்கும் பத்தொன்பது நாணயங்களே எண்ணிக்கையில் இருந்தன.

அவருக்கும்  பெரும் குழப்பம்.

இப்போது மீண்டும் ஒரு நாணயத்தை கூடுதலாக அந்த பிளாஸ்டிக் பையில் போட்டு என்னிடம் கொடுத்து, தவறு எங்கோ நிகழ்ந்துவிட்டது, மன்னிக்கவும் என கூறி பண மூட்டையை என்னிடம் கொடுத்தார்.

அதை வாங்கும் முன் , அவரிடம் மீண்டும் அதை அந்த இயந்திரத்தில் வைத்து சரி பார்க்க சொன்னேன்.

என்ன ஆச்சரியம், அந்த இயந்திரம் இப்போது காட்டிய தொகை பதினெட்டு.

எங்கள் இருவருக்கும் ஒன்றும் புரியவில்லை.

"உள்ளே" ஒன்று இருக்க  "வெளியே" ஒன்று காட்டுகிறதே இந்த இயந்திரம் என்ன காரணமாக இருக்கும்?

பிறகு ஒருவழியாக அந்த காசாளர் யூகத்தின் அடிப்படியில் சொன்ன தகவல் ஏற்கும்படியாக இருந்தது.

அதாவது சமீபத்தில் இங்கிலாந்து  தேசீய வங்கி , தற்போதும் புழக்கத்தில் இருக்கும்,   அதே சமயத்தில்  இன்னும் சில நாட்களில் தகுதி இழக்கப்போகின்ற பழைய ஒரு பவுண்ட் நாணயத்திற்கு மாற்றாக புதிய  பவுண்ட் நாணயங்களை விநியோகித்து வருகின்றது.

இரண்டிற்கும் எடையில் சிறிது வித்தியாசம் இருப்பதாலும் , நாணயத்தை எடை பார்த்து மதிப்பு சொல்லும் இயந்திரங்கள் இந்த புதிய நாணயத்தின் எடைக்கு தகுந்தாற்போல் வடிவமைக்காமல் (configuration) இருப்பதனாலும், பழைய நாணயங்களோடு புதிய நாணயங்களையும் சேர்த்து மதிப்பு பார்க்கப்படுவதாலும் , இயந்திரம் குழம்பிப்போய் தப்புத்தப்பாக மதிப்பு காட்டிக்கொண்டு இருக்கின்றது.

உள்ளே ஒன்று இருக்க வெளியில் ஒன்று காட்டும் இந்த எடைபார்க்கும் கருவியின்  (கம்பியூட்டர்) சிஸ்டம் சரியில்லாத  இந்த உண்மையை வங்கி நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு வந்த எனக்கு பாராட்டும் நன்றியையும்  தெரிவித்தார் அந்த வங்கி மேலாளர்.

Image result for old and new english 1 pound coin

எப்படியோ எனக்கு சேரவேண்டிய அந்த ஒரு பவுண்ட் நாணயம் சரியாக வந்து சேர்ந்த மகிழ்சியிலும் ஒரு மாபெரும் கண்டுபிடிப்பை உலகுக்கு உணர்த்திய பெருமிதத்துடன் வங்கி விட்டு வெளியில்வந்தேன்.

நன்றி.

மீண்டும் ச(சி)ந்திப்போம்

கோ

10 கருத்துகள்:


 1. என்னது பாராட்டும் நன்றியும் மட்டும்தானா கஞ்சப் பயலுவ தப்பை கண்டு பிடிச்சு சொன்னதற்காக ஒரு நூறு பவுண்ட் உங்களுக்கு தந்திருக்கனும்.... ச்சே இன்னும் அந்த மோசமான நாட்டில் இருக்காமல் வேறு நாட்டிற்கு சென்று விடுங்க

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சிஸ்டம் சரி இல்லை என்று சொன்னதை , உண்மை என்று உணர்ந்து அதை பெருந்தன்மையுடன் ஏற்றுக்கொண்டு, மன்னிப்பும் , பாராட்டும் தெரிவித்த நாட்டையே மோசமான நாடு என்றால், எதுவுமே சரி இல்லாததை எத்தனையோ பேர்கள் சொல்லியும், தான் பிடித்த முயலுக்கு மூணே முக்கால் கால்கள்தான் என ஒற்றை காலில் நின்று , பதவி நாற்காலியில் இடம் பிடிப்பதில் மட்டுமே அடம் பிடிக்கும் நாடுகளை(??) என்னவென்று சொல்வீர்கள்?

   வருகைக்கு மிக்க நன்றிகள்.

   கோ

   நீக்கு
 2. ஒரு பெரிய உண்மை. உங்களின் நிதானமும், வங்கியின் பொறுப்பும் தெளிவைத் தந்தமையறிந்து மகிழ்ச்சி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்

  1. ஐயாவிற்கு அநேக வணக்கங்கள்.

   வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றிகள் ஐயா.

   கோ

   நீக்கு
 3. பதில்கள்
  1. வருகைக்கு மிக்க நன்றிகள் திரு கரந்தையார் அவர்களே.

   கோ

   நீக்கு
 4. எங்கள் ஊராக இருந்தால் "இங்கேயே பொட்டலத்தைப் பிரித்து எண்ணிப்பார்த்திருக்க வேண்டும். நாங்கள் சரியாகத்தான் கொடுத்தோம்" என்றுசொல்லியிருப்பார்கள்! எடை போட்டு, அதுவும்(இத்தனை நாட்கள்) சரியாக இருந்ததும் ஆச்சர்யம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்

  1. வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றிகள் ஸ்ரீராம்.

   ஆமாம் நீங்கள் எதை பற்றி சொல்லுகின்றீர்கள்? யாமறியோம் பராபரமே!!

   கோ

   நீக்கு
 5. ஸ்ரீராம் சொல்லிவிட்டார்..எங்க ஊர் வங்கி பற்றி!!ஹாஹாஹா...பணத்தை எண்ணும் மெஷின் தெரியும் இது நாணயங்களை எடை வைத்து சரியாகச் சொல்லும் மெஷின்...சாத்தியம்தான்...பிரிட்டிஷ்காரர்கள் நம்மை ஆட்சி செய்தவர்க்ள் இல்லையா...நம்மூரில் அப்போது கிராமத்தில் பெரியவர்கள் சும்மா கையில் தூக்கிப் பார்த்தே கரெக்டாகச் சொல்லிவிடும் வித்தகர்களைப் பார்த்திருப்பார்கள். தங்கள் ஊர் போனதும் அதை வைத்து மெஷின் கண்டுபிடித்துவிட்டார்கள் பாருங்கள்....

  சுவாரஸ்யமான நிகழ்வு...தங்களுக்குப் பாராட்டும் நன்றியும் தெரிவித்திருப்பது எல்லாம் இங்கு பிரிட்டிஷ் ஆட்சி செய்தாலும் நம் மக்கள் கற்காத ஒன்று!!

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும் தங்கள் கருத்திற்கும் மிக்க நன்றிகள்.

   கோ

   நீக்கு