பின்பற்றுபவர்கள்

செவ்வாய், 3 பிப்ரவரி, 2015

வைதேகி காத்திருப்பாள் -பாகம் - 3

காலம் கனிந்தது!!!!!

தொடர்கிறது....

முதலில் இருந்து படிக்க  இங்கே சொடுக்கவும். வைதேகி காத்திருப்பாள்.

 "இன்னொருமுறை..."

"ம்ம்.."

"ராகவா....ராகவா...."

என்ன குரல் கொஞ்சம் கரடு முரடாக கேட்கிறது...

அதுவும் என்ன இத்தனை முறை கூப்பிடுகிறாள்  என்று யோசிக்கும்போது ....

இன்னும் அழுத்தமாக - கொஞ்சம்  அதட்டலாக,

"ராகவா.... டேய் ராகவா.."

என்ன டேய் ராகவாவா?

"டேய்  ராகவா...எம்மா  நேரம் எய்ப்பினுகீறேன் .. இன்னும் என்னடா தூக்கம்..? சீக்கிரம்  எய்ந்துற்றா, உன்ன பாக்க நம்ம இங்லீ(பீ)ஸ் வாத்தியார் துளசி சாரும்  , கணக்கு வாத்தியார்  ஜெயகுமார் சாரும்  வந்து கீறாங்க."

அப்போ வைதே....?

"இவங்க எதுக்கு வந்திருக்காங்க?"

"ஆங்..  உன்னாண்ட ஏதோ  சொல்லனும்னு  வந்தாங்களாம்."

துடிச்சி புடிச்சி, மொகத்த கழுவிக்கொண்டு வெளியில் வந்த ராகவனை துளசி வாத்தியாரும், ஜெயகுமார் வாத்தியாரும் கட்டி பிடித்து இன்று வெளி வந்த "+2 " ரிசல்ட்டில்  மாநிலத்திலேயே முதல் 10 இடங்களை பிடித்த மாணவர்களுள் இவர்கள் இருவரும் ஆசிரியர்களாக இருக்கும் பள்ளி மாணவனான ராகவனும் ஒருவன் என்பதால் வீட்டுக்கு வந்து நேரில் வாழ்த்த வந்ததாக சொல்ல ராகவனின் அம்மாவுக்கு பெருமிதத்தில் கண்களில் இருந்து ஆனந்த கண்ணீர் கரை புரண்டு ஓடியது.

ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன் மகனை .....ஆன்றோர் பாராட்டும்போது....ஆனந்த கண்ணீர்தானே கரைபுரளும்?துளசி வாத்தியார் வாங்கிவந்த அல்வா வை பிரித்து அதில் ஒரு துண்டை ராகவன் வாயில் போட்டு தனது மகிழ்ச்சியை தெரிவிக்க, ஜெயகுமார் சார் தமக்கு பிடித்த டாக்டர் பி ஜே அப்துல் கலாம் எழுதிய க்கினி சிறகுகள் புத்தகத்தை பரிசாக கொடுத்து வாழ்த்தினார். "அல்வா" கொடுத்தவருக்கும் புத்தகம் கொடுத்தவருக்கும் ராகவன் நன்றி சொன்னான்.தகவல் அறிந்த அக்கம் பக்கத்து வீட்டினர் அனைவரும் ராகவனை வெகுவாக பாராட்டினர்.இதற்கிடையில் அபுதாபியில் இருந்து விடுமுறையில் வந்திருந்த ராகவனின் தாய்மாமன் தகல் அறிந்து ஆளுயர  மாலையுடன் வந்து, "மாப்பள , ரொம்ப சந்தோசம்டா (சந்தோஷத்தைதான் - இப்படி சந்தோசம்னு சொல்றாரு).எம் பொண்ணு உனக்குதாண்டா , நீ என்ன வேணும்னாலும் படிடா, மாமன் இருக்கேண்டா."என சொல்லி மாலை அணிவிக்கின்றார்., ராகனும் மாமாவின் காலை தொட்டு வணங்க ராகவனை தூக்க குனிந்த தாய் மாமனின் தலையில் இருந்த தொப்பி கீழே விழுகின்றது.

வந்திருந்த இரண்டு ஆசிரியருக்கும் ராகவன் நன்றி சொல்லி அவர்களின் ஆசியையும் பெறுகின்றான்.

அப்போது துளசி வாத்தியார் தனது மனதுக்கு ரொம்ப நெருக்கமான, பண்டித மாமுனி மகேஷ்வர பட்டாச்சாரியார்  எழுதிய  ஒரு புத்தகத்தை தமது அன்பு பரிசாக ராகவனுக்கு கொடுக்கின்றார். 

அதை பவ்வியமாக வாங்கி பார்த்த ராகவனுக்கு பெரிய மகிழ்ச்சி, ஏனெனில் ஜெயகுமார் வாத்தியார் போலவே இவரும் புத்தகத்தின் உள் அட்டையில் தமது  புகைப்படம் ஒட்டி அதில் "அன்பு மாணவன் ராகவனுக்கு, வாழ்த்துக்களும் ஆசியும்" என்று எழுதி கையொப்பம் இட்டிருந்ததுதான். 


அந்த புத்தகத்தின் பெயர் "கீதா உபதேசம்"மேற்கொண்டு எந்த உதவி வேண்டுமானாலும் தங்களை அணுகும்படி ராகவனின் அம்மாவிடம் சொல்லிவிட்டு ஆசிரியர்கள் புறப்பட

"இவங்க ரெண்டுபேரும்தான் ராகவனுக்கு இங்லீசும் கணக்கும் இலவசமா டூஷன் சொல்லிகொடுத்த மவராசனுங்கோஅவங்க புள்ளகுட்டிங்களுக்கு புண்ணியமா இருக்கும், நல்லா இருக்கணும்" என தன் அபுதாபி தம்பியிடம் சொல்லிக்கொண்டே தன் கண்களை முந்தானை நுனியில் துடைத்துகொள்கிறார்.

ராகவனுக்கு அப்போது தான்  பேசின் ப்ரிட்ஜி ஸ்கூல் , நுங்கம்பாக்கம் காலேஜி டி, கார்பரேட் கம்பனி, வைதேகி ...இதெல்லாம் நேற்று இரவு முனைவர் அப்துல் கலாம், பள்ளி-கல்லூரி மாணவ மாணவியரிடம் உரையாற்றிய உரையாடலின் தொகுப்பான "கனவு காணுங்கள்" புத்தகத்தை படித்து அப்படியே தூங்கியதன் விளைவாக வந்த கனவு என்று புரிந்தது. அடப்பாவமே.

பிறகு குளித்து முடித்து  அபுதாபி மாமன் தனக்கு அணிவித்த மாலையை அப்பா  படத்துக்கு சாற்றி வணங்கிவிட்டு, அம்மாவிடம் சொல்லிவிட்டு தனது தலைமை ஆசிரியரை காண செல்லும்போது மூடபடாத இருந்த அல்வா டப்பாவை மூடி வெறும் கையோடவா போவ? இதை கொண்டுபோய் அவருக்கும் உன்னோட சிநேகிதங்களுக்கும் கொடு என சொல்லி அம்மா கொடுத்த அந்த இனிப்பு டப்பாவை வாங்கிக்கொண்டு வாசற்படி தாண்டும்போது அந்த டப்பாவை பார்த்து மனதுக்குள் சிரித்துக்கொண்டான் அந்த சிரிப்பு அவன் உதட்டிலும் வழிந்தது.

அதற்குக் காரணம் அந்த டப்பாவில் இருந்த பெயர்.

அப்படி என்ன பெயர்?

அசல் நெய்யினால் சுகாதார முறையில் தயாரிக்கப்பட்ட காரம் மற்றும் இனிப்பு பலகாரங்களுக்கு சிறந்த இடம்.......

" வைதேகி ஸ்வீட் ஸ்டால்"


இது பிப்ரவரி மாதம், பள்ளி கல்லூரி மாணவ மாணவர்களுக்கு தேர்வு நெருங்கும் சமயம், எனவே தங்களின் கனவுகளை மூட்டை கட்டி வைத்து விட்டு, நமது பெற்றோரின், கஷ்டங்களையும் அவர்களின் உழைப்புகளையும், அவர்களின் தியாகங்களையும் நினைத்து அவர்களின்  ஞாயமான  கனவுகளை நிறைவேற்றிட, கடினமாக - கவனமாக படித்து, வரபோகின்ற தேர்வுகளில் மகத்தான வெற்றி பெற்று வாழ்வில் பல சிகரங்களை அடைய மனதார வாழ்த்துகின்றேன்

படிப்பும் அறிவும் கடின உழைப்பும் இருந்தால் நமக்காக எத்தனையோ வைதேகிகள் காத்திருப்பார்கள், மாணவியருக்கும் அப்படியே.
முதலில் படிப்பு.


நண்பர்களே,

சில நாட்களுக்கு முன் நமது வாசக நண்பரிடமிருந்து வந்த கடிதத்தில் அவரது தேர்விற்கு இன்னும் ஒரு சில மாதங்களே உள்ளன என தெரிவித்திருந்ததின் அடிப்படையில் அமைந்ததுதான் இந்த கற்பனை பதிவுபின் குறிப்பு: ராகவனின் அம்மாவுக்கு ஒரு  சந்தேகம், தனது தம்பிக்கு இருக்கறது ரெண்டும் ஆம்ல சிங்கங்கள் தானே, பின்ன எப்படி எம்பொண்ணு உனக்குத்தான் என்று சொன்னான், ஒரு வேல அபுதாபில ......கொஞ்சம் அப்பிடி இப்பிடி......சேச்சே ....அப்படியெல்லாம் இருக்காது.

(அப்போ இப்படி இருக்குமோ?  தான் சமீபத்தில் ஜெர்மனி  போனப்போ வாங்கி வந்த விலை உயர்ந்த பென்(PEN) உனக்குதான்னு சொல்றதுக்கு பதில் பொண்ணுன்னு வாய்தவறி சொல்லிட்டாரோ?  ஆமாங்க அப்படித்தான் இருக்கும்

நன்றி!


மீண்டும் (சி)ந்திப்போம்.


கோ

11 கருத்துகள்:

 1. பாராட்டுக்கள் சார்.

  எதிர்பாராத முடிவு!!!

  கதையை ரசித்தேன்:-).

  ***

  சமீபத்தில் வெலியான எஸ்ஜே சூர்யா அவரோட படம் இசை தாக்கத்தால
  எழுதிய பதிவு போல இருக்கே:-)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பதிவை ரசித்து பாராட்டியமைக்கு மிக்க நன்றி மகேஷ்.

   நீங்கள் சொன்ன எஸ் ஜே சூரியாவின் படம் பார்க்கவில்லை , மேலும் அதன் கதை என்னவென்றும் தெரியாது.

   பதிவின் இறுதியில் சொல்லியதுபோல் பரீட்ச்சைக்கு இன்னும் ஓரிரு மாதங்களே உள்ளன என்று ஒரு வாசகர் சொன்னதன் பேரில் எழுந்த கற்பனை புனைவு தான் அது.

   அந்த வாசகர் யார்????? அவர் திருப்தியில் வசிக்கும்...(பண்டித மாமுனி) மகேஷ் (வர பட்டாச்சர்யார்).

   வெற்றி சிறக்க வாழ்த்துக்கள்.

   நட்புடன்

   கோ

   நீக்கு
 2. கல்யாணச் சாப்பாடு, முகூர்த்தம் என்று வந்தால்....அட ட்விஸ்டி விட்டீர்களே! ஹஹ அதுவும் எங்களையும் இதில் நுழைத்து....நண்பரே! இப்படி எல்லாம் எங்களைக் கௌரவிப்பதைக் கண்டு மனம் மிகவும் மகிழ்கின்றது. தங்களின் அன்பிற்கு எல்லையே இல்லாமல் அடைக்கும் தாழ் இல்லாமல் ...மெய்சிலிர்க்க வைக்கின்றது. கோடானு கோடி நன்றிகள்! வேறு வார்த்தைகள் இல்லை உணர்வுகளில்....

  அது சரி துளசி ஹல்வா கொடுக்கின்றாரா.....ஹஹஹஹ அதற்கு அர்த்தம் வேறு நண்பரே ஹஹஹஹஹஹ்....ராகவன் திருநெல்வேலி இல்லைதானே!??? ஹஹ

  அடேங்கப்பா நாங்க இதுவரைக் கேள்வியே படாத அது என்ன...."பண்டித மாமுனி மகேஷ்வர பட்டாச்சாரியார் " ஹஹஹ ...மாட்டி விட்டுராதீங்க நாங்க ஏதோ சாமிஜி சிஷ்யர்களோனு....எல்லாரும் நினைச்சுடப் போறாங்க...ஹஹஹஹ

  அட கீதா எங்கப்பா உபதேசம் செஞ்சாங்க.....கீதாக்கு உடான்ஸ் விடறதும், கலாய்க்கறதும் தான் தெரியும்.....பரவாயில்லை துளசி வாத்தியாரா இருந்துகிட்டு அல்வா மட்டும்தான் கொடுத்தாரான்னு பார்க்கும் போது ....கீதா உபதேசம் நு புத்தகம் கூட கொடுத்து....ஹஹஹ...கலாய்த்தல் அபார்ட்....

  அருமையான ட்விஸ்டுடன் எதிர்பார்க்காத முடிவுடன் ஒரு நல்ல கற்பனை விரிந்த கதை நண்பரே! மிகவும் ரசித்து வாசித்தோம்....எங்களையும் உட்படுத்தி எழுதியமைக்கு மிக்க நன்றி! நன்றி! பலமுறை சொல்வோம்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பு நண்பர்களே,

   பதிவை பாராட்டியமைக்கு மிக்க நன்றி.

   கதையில் ஒரு ட்விஸ்ட் இருந்ததாக சொன்னீர்கள், ஆமாம், எது எழுதினாலும் ஒருசில முந்திரி (கொட்டைகள்) பழங்கள்(!!??) முன்கூட்டியே முடிவை அனுமானிப்பதால் இந்த முறை இப்படி.

   நினைப்பதெல்லாம் நடந்து விட்டால்.....

   வாத்தியார் அல்வா கொடுத்தார் என எழுதியதற்கு வேறு அர்த்தம் என சொன்னதன் அர்த்தம் புரியவில்லை கொஞ்சம் இடம் சுட்டி பொருள் விளக்கம் தந்தால் புரிந்துகொள்ள ஏதுவாக இருக்கும்.

   இதில் நன்றி சொல்ல என்ன இருக்கின்றது, நட்பு ரீதியாக சில நேரங்களில் அப்படி தானாக அமைவதுண்டு.

   பண்டித மாமுனி மகேஷ்வர பட்டாச்சாரியார் யார்?

   அவர் ஒரு மகரிஷி, ஏழு மலைகளால் சூழப்பட்ட ஒரு குகையில் கடந்த 1500 வருடங்களாக தவமிருப்பவர்.

   அவரை தரிசிக்க நீங்கள் ஏழு கடல்களை தாண்டி , எட்டு காடுகளை கடந்து ... எல்லாம் செல்லவேண்டியதில்லை.

   கொஞ்சம் கண்ணை மூடி மனதை ஒருநிலை படுத்தி வடமேற்கு திசை பக்கம் திரும்பி துளசி மாடத்தை வலமிருந்து இடப்பக்கமாக மூன்றுமுறையும், இடமிருந்து வலமாக மூன்றுமுறையும் சுற்றி பின்னர் 'கோ' மந்திர ஸ்லோகங்களை மனசுக்குள்ளேயே தினமும் காலை மாலை ஒரு ஐந்து நிமிடங்கள் போல ஒரு நாற்ப்பது நாட்களுக்கு விரதம் இருந்து தியானித்தால் நாற்பதாவது நாள் இரவு சரியாக 12.00 மணிக்கு அவர் உங்களுக்கு தரிசனமாவார், நல்லது நடக்கும்.

   கீதா உபதேசம் என்பது துளசி வாத்தியாருக்கு இறை வாக்குபோல என்பதால் அந்த இறை வாக்கை அருள்வாக்காக தனக்கு பிடித்தவர்களுக்கு அவர் கொடுப்பது வழக்கம். ஆமாம் அவரை உங்களுக்கு தெரியுமா?

   கதையில் வரும் ட்விஸ்ட்டுதான் அல்வாவோ? -உங்களுக்கு -007

   நட்புடன்

   கோ

   நீக்கு
  2. அன்பிற்கினிய நண்பர்களே,

   கதையில் வரும் ட்விஸ்ட் சொல்லும் பாடம்:

   வாழ்க்கை ஒரு வட்டம் இங்க (எப்பவோ ) தோக்கறவன் (இப்பவாவது !!) ஜெயிப்பான் என்பதும்,

   எல்லோரும்(007) எல்லா விஷயத்திலும், எல்லா நேரங்களிலும் சரியாக நினைக்க முடியாது என்பதுதானே.

   எங்களுக்கும் காலம் வரும்...(இப்போ வந்துச்சில்ல) எப்பிடி........?

   வருகைக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி.

   கோ

   நீக்கு
 3. படிப்பும் அறிவும் கடின உழைப்பும் இருந்தால்
  முன்னேற்றமே
  நன்றி நண்பரே

  பதிலளிநீக்கு
 4. திரு கரந்தையார் அவர்களுக்கு,

  பதிவை பாராட்டியமைக்கு மிக்க நன்றி.

  ஆமாம் நீங்கள் சொல்வதுபோல் படிப்பும் கடின உழைப்பும் இருந்தால் வெற்றி நிச்சயம்.

  அப்படியே பல ஆன்றோர்களின் அறிவுரைகளும் அந்த பதிவில் வருகின்ற நல்ல ஆசிரியர்கள் போன்றோரின் வழிகாட்டுதலும் அமைந்தால் வருகின்ற வெற்றியை யாரால் தடுக்க முடியும்.

  நட்புடன்

  கோ

  பதிலளிநீக்கு
 5. நண்பரே ராகவனின் தாய்மாமன் அபுதாபியில்தான் இருக்கின்றாரா ? அவருடைய முகவரி தந்தால் தொ(ல்)லைபேசியில் பேசிக்கொ(ல்)வேன்.

  பதிலளிநீக்கு
 6. விலாசமோ, தொலைபேசி எண்ணோ தெரியாது, அவர ஒரே ஒரு முறைதான் பார்த்த ஞாபகம், அதனால அவரின் அடையாளம் வேணும்னா சொல்றேன் - பதிவிலேயே சொன்ன மாதிரி அவரோட தலைல எது இல்லனாலும் கண்டிப்பா தொப்பி இருக்கும். போதுமா?

  நட்புடன்

  கோ

  பதிலளிநீக்கு
 7. கோ,
  உறுதியா முடிவு செஞ்சுட்டேன்
  நான்,,,,,,,,,,,,,
  எப்பவும் கோ இப்படித்தான் என்று,,,,,,,,,,
  வேறு என்ன செய்ய முடியம்,

  பதிலளிநீக்கு
 8. ஆமாங்க,

  எப்பவும் ஒரே மாதிரியா இருக்கனும்னுதான் முயற்ச்சிக்கின்றேன்.

  வருகைக்கு மிக்க நன்றி

  கோ

  பதிலளிநீக்கு