பின்பற்றுபவர்கள்

திங்கள், 2 பிப்ரவரி, 2015

வைதேகி காத்திருப்பாள் - பாகம் 2

மனம் திறந்தது மலர் தூவியது.

தொடர்கிறது....முதலில் இருந்து படிக்க  இங்கே சொடுக்கவும். வைதேகி பாகம் 1

"சார்... பிளீஸ் .. நான் சொல்லவந்தது......, எப்படி சொல்றதுன்னு ... தெறி...."

"மிஸ் ரமணன் ..சொல்லுங்க தயங்காம."

"சார் நான் உங்கள ரொம்ப நாளா ...."

"ரொம்ப நாளா... சொல்லுங்க."

"அது வந்து ....... எப்படி......" (மனதில் தைரியத்தை வரவழைத்துக்கொண்டு)

"ஐ லவ் யூ சார்!!!!!!!!" என மிகவும் சன்னமான குரலில், நடுக்கத்துடன் வார்த்தைகள் நழுவி  குழைய ஒரு வழியாக கூறிவிட்டாள்"வாட்?"

"சார் ... சார்... ப்ளீஸ் போன வச்சிடாதீங்க.."

"சார் உங்க கிட்ட இத ரொம்ப நாளாவே சொல்லனும்னு நினைத்து ,  வெக்கத்தினாலேயும் கொஞ்சம் தயக்கத்தாலேயும் உங்ககிட்ட நேர்ல சொல்லாம மனசுக்குள்ளேயே வைத்திருந்தேன்."

"இப்போ இந்த ப்ராஜெக்ட் முடிச்சி வந்தவுடன் வீட்ல திருமண ஏற்பாடு செய்வதாக சொல்றாங்க, அதான் இனியும் தாமதிக்காம இத உங்ககிட்ட சொல்லனும்னு இப்பவே போன் பண்றேன்."

"மிஸ் ரமணன்,  எனக்கு வர போற மனைவியை குறித்து எந்த எதிபார்ப்பும் கற்பனையும் இல்ல, இப்போகூட உங்க போன் வரதுக்கு முன்ன எங்க அம்மா என்கிட்டே அரைமணி நேரமா, என் கல்யாண விஷயமாகத்தான் பேசிகொண்டிருந்தார்கள், அவர்களும் இன்னும் பத்து நாட்களுக்குள் பதில் சொல்லனும்னு சொல்லி இருக்காங்க."

"நல்லா யோசித்துதான் சொல்றீங்களா?."

"பல நாட்களாக, மாதங்களாக, வருடங்களாக யோசித்துதான் சார் சொல்றேன், இட்ஸ் வெரிமச் ட்ரூ அண்ட்  டிவைன் சார்."

"இப்  யூ வான்ட் மீ டு ப்ரூவிட் பை எனி மீன்ஸ் , ஐ வில்.

"நோ நோ.....இதுக்கு உங்க வீட்ல சம்மதிப்பாங்களா?"

"உங்கள அவங்க நேர்ல பார்க்கலையே தவிர, உங்களபத்தி நான் அடிக்கடி வீட்ல பேசறத வச்சி உங்கள அவங்களுக்கு நல்லாவே தெரியும் சார்."

"என்ன பத்தி என்ன அப்படி நீங்க வீட்ல அடிக்காடி பேசி இருக்கீங்க."


"இல்ல சார், நம்ம ஆபீஸ் விஷயங்கள நான் வீட்ல அப்பா அம்மா கிட்ட சொல்லும்போது கூட வேல செய்றவங்களோட பேருங்கள சொல்லி நடந்த சில விஷயங்கள சொல்லுவேன் அதுல உங்க பேர்தான் ரொம்ப சொல்லி இருக்கேன்." 

"உண்மையிலேயே உங்களுக்கு என்னை புடிச்சிருந்தா நீங்க ஊரிலிருந்து வந்த பிறகு எங்க வீட்ல இருந்து உங்க வீட்டுக்கு வந்து முறைப்படி பேச சொல்றேன்."

வைதேகிக்கு நம்பவே முடியவில்லை... 

"சா....ர்...., நிஜமாத்தான் சொல்லறீங்களா?  என்னால நம்பவே முடியல."

"இதுல விளையாடறதுக்கு என்ன இருக்கு... நான் எப்பவுமே மனசுல தோன்றுவதைத்தான் பேசுவேன்."

"நீங்க உங்க மனச போட்டு குழப்பிக்காம ப்ரோஜக்ட் வேலைய நல்ல படியாக முடிச்சிட்டு வாங்க., விஷ் யு ல் தா பெஸ்ட் அண்ட் ஹேவ் ப்ளசன்ட் அண்ட் சேப்  ஜெர்னி நல்லா தூங்கி ரெஸ்ட் எடுங்க" 

 இப்போ இவளுக்கு தூக்கம் எப்படி வரும்?

"சார் நான் கண்டிப்பாக நியூசிலாந்து போகனுமா?".... என கொஞ்சலாக கேட்க்க..


"என்ன இப்பவந்து இப்படி கேக்கறீங்க, கண்டிப்பாக போய்தான் ஆகணும் , யு நோ த இம்ப்பார்டன்ஸ் அண்ட் த சீரியஸ்ஸ்." 

"எனக்கு அங்கே போய் எப்படி இரண்டு வாரம் இருக்கபோறேன்னே தெரியல."


"ப்ளீஸ் மிஸ் ரமணன், பி போகஸ்ட், டூ அன் இம்ப்ரசிவ் ஜாப்., ஐ கேன்,, ஐ மீன்... எனக்கு புரியுது உங்க மனநிலை."


"சார்..  நான் எப்பவுமே உங்க பேர முனுமுத்துக்கொண்டே இருப்பேன், நோட் புத்தகத்தில் கிறுக்கிக்கிக்கொண்டே இருப்பேன் ..ஒரே ஒரு முறை உங்கள பேர் சொல்லி கூப்பிட்டுக்கட்டுமா?"

"ம்ம் கூப்பிட்டுக்குங்க."

 "ரா.....கவா..."

அதுவே ஒரு யாழில் இசைத்த ராகமாகத்தான் அந்த  காதல் குரல் அவன் காதில் கேட்டது.

என்ன இனிமையான குரல்  இவளுக்கு, இத்தனை நாட்களாக இதை கேட்க்காமல் இருந்து விட்டோமே.

"இன்னொருமுறை கூப்பிட்டுக்கட்டுமா?"

"ம்ம்..."

"ராகவா...."
  
"இன்னொருமுறை..."

"ம்ம்...."

அவள் சொல்ல சொல்ல இவனும் அவளின் பெயரை யாருக்கும் கேட்க்காத படி மனதுக்கும் செல்லமாக வைதேகி... என சொல்லி பார்த்துக்கொண்டான்.சரிங்க பாவம் சின்னஞ்சிறுசுங்க எதோ தனியா மனச தொறந்து பேசிக்குனு இருக்கட்டுங்க.

நமக்கு அடுத்தவங்க பேசறத ஒட்டு கேட்க்கறதெல்லாம் கொஞ்சம் கூட பிடிக்காது.

அதனால  நான் உங்கள நாளை சந்திக்கிறேன்.


தொடரும்....

கோ.

7 கருத்துகள்:

 1. கதை வேகம் பிடிக்கும் இடத்தில் ஸ்பிட் ப்ரேக்கரா
  தொடரும்.... போட்டுட்டீங்கலே சார்:-) அவ்வ்
  நானும் நாலை வர்ரேன்:-)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மகேஷ்,

   பிரேக்க தளர்த்திவிட்டு, கொஞ்சம் வேகம் கூட்டியிருக்கேன்.

   படித்துவிட்டு பதில் அனுப்புங்கள்.

   அவ்வளோ இன்னா ஆர்வம் வைதேகிமேலே , அவதான் வேற ஒருத்தருக்கு ஒகே சொல்லிட்டாளே, நடுவுல உங்களுக்கு என்ன அவமேல ஒரு இது?

   ஓ கோ... கத அப்படிபோகுதா?

   நட்புடன்,

   கோ

   நீக்கு
 2. திரு கரந்தையார் அவர்களுக்கு,

  வருகைக்கும், தொடர்வதற்கும் மிக்க நன்றி.

  தொடர்ந்து கருத்துக்களை அனுப்புங்கள்.

  நட்புடன்

  கோ

  பதிலளிநீக்கு
 3. அருமை! ஆஹா! ஆமாம் அவங்க என்ன வேணா பேசட்டும்...இரண்டாவதை வாசிக்கும் போது சுபம் போலத் தெரிகின்றது....ம்ம்ம்ம் 3 வது கல்யாணச் சாப்பாடா!!!? போறோம் முகூர்த்த நேரம் முடிவதற்குள்!....

  பதிலளிநீக்கு
 4. அன்பு நண்பர்களே,

  பதிவை பாராட்டியமைக்கு மிக்க நன்றி.

  கல்யாண சாப்பாட்டை எதிர்பார்க்கும் உங்களுக்கு ஒரு அல்வா கூடவா கிடைக்காமல் போகும்.

  முகுர்த்தநேரம் தவறினாலும் பந்திக்கு முந்த பாருங்கள்.

  பொறுத்திருந்து கடைசி பாகத்தையும் படித்துவிட்டு வாருங்கள்.

  நட்புடன்

  கோ

  பதிலளிநீக்கு