பின்பற்றுபவர்கள்

புதன், 18 பிப்ரவரி, 2015

நடந்தது என்ன - 2

அதன் பின்னணி...

தொடர்கிறது.......

முதலில் இருந்து படிக்க இங்கே  சொடுக்கவும்.

ஈ மெயிலில் வந்திருந்த செய்தி....

"பிரைவேட் அண்ட்  கான்பிடன்ஷியல்"

காணவில்லை .- Missing...

பெயர் :சோபியா

வயது:21

சுருட்டை முடி , கீழ் உதட்டில் மச்சம் ......

கடைசியாக பார்த்தது:கடந்த வெள்ளிக்கிழமை 5.30 மணி.

 போன்ற விவரங்களோடு , இது சாரா பாக்ஸ்டன்(Sarah  Baxton ) சார்பாக அனுப்பப்பட்ட செய்தி என்றும் தகவல் - குறிப்புகள் தெரிந்தவர்கள் அவற்றை ஈமெயில் மூலமாக இல்லாமல் நேரடியாக எஸ்டேட் மேனேஜர் பால் கார்னியரிடம் (Paul  Garnier ) தொடர்புகொண்டு தகவல் சொல்லவும்.என்றிருந்தது.

அடடா என்ன ஆனது சோபியாவுக்கு?  சாராவும் சோபியாவும் "நெருங்கிய" நண்பர்களாச்சே எப்போதும் ஒன்றாக இருப்பார்களே, இன்னும் சொல்லபோனால் அவர்கள் இருவரும் சில விஷயங்களில்(??) கொஞ்சம் நெருக்கமானவர்கள்.

இருவரும் பெண்களே என்றாலும் அவர்கள் கொஞ்சம் அப்படித்தான்.

பல நேரங்களில் அலுவலக ஓய்வு அறையில், கம்யூனிட்டி அறையில், கிச்சனில்,சில சமயங்களில் சாராவின் மேசையில்கூட இவர்கள் நெருக்கமாக  இருந்ததை பலரும் பார்த்திருக்கின்றனர்.

இப்போது திடீரென காலையில் வீட்டில் பார்த்த தொலைகாட்சியில் வந்த இரண்டாவது செய்தியும், காலையில் வரும்போது பார்த்த போலீஸ் செக்கப்பும் சக அலுவலர்கள் லிப்டில் முனுமுனுத்ததும் ஒவ்வொன்றாக நினைவுக்கு வர விஷயம் கொஞ்சம் விபரீதம்தான் என்பதை உணர முடிந்தது.

இதற்கிடையில் பலரோடு ரகசியமாக பேசி பார்த்ததில் வெள்ளிக்கிழமை மாலை ஏறக்குறைய அந்த தளத்தில் இருந்த எல்லோரும் சென்றுவிட்டிருந்த சமயத்தில் சாராவும் சோபியாவும் நெருக்கமாக சாராவின் மேசை அருகே இருந்ததாகவும் சோபியாவை சாரா தனது இரண்டு கைகளாலும் அணைத்தபடி தனது உதட்டோடு.........(பிளீஸ் இந்த பதிவில் இவற்றை எழுத வேண்டாம் நீங்களே புரிந்துகொள்ளுங்கள்)  - இருந்ததை  துப்புரவு தொழிலாளி ஒருவர் பார்த்ததாக செய்தி கிடைத்தது.

உடனே செக்யூரிட்டி மூலம் அந்த துப்புரவு தொழிலாளரின் ஏஜெண்டை தொடர்பு கொண்டு அவரை அலுவலகம் அழைத்துவந்து விசாரித்ததில் அவன் கட்டிடத்தின் ஏழாவது மாடியில் இருக்கும் ஒரு இருட்டறையின் மூலையில் இருந்தகுளிர் சாதனபெட்டிபோன்றிருந்த ஒரு பெட்டியை திறக்க   அதில் சோபியா தலைகீழாக வெளிறிய உடலோடு அதிலிருந்த கம்பியில் தொங்கிக்கொண்டிருந்ததை கண்டு எஸ்டேட் மேனேஜர் அதிர்ச்சி அடைந்து இங்கே எப்படி  என விசாரிக்க:

Image result for pictures of one to one enquirer

பதட்டத்துடன் அந்த துப்புரவு தொழிலாளி நடந்தவற்றை விவரிக்க தொடங்கினான்.

தொடரும்......

ச(சி)ந்திப்போம்

கோ

7 கருத்துகள்:

 1. பதில்கள்
  1. தனப்பால்,

   வருகைக்கும் காத்திருத்தலுக்கும் நன்றி.

   கோ

   நீக்கு
 2. பதில்கள்
  1. திரு கரந்தையார் அவர்களுக்கு,

   காக்கவைக்காமல் இதோ உங்களுக்கான தொடர்.

   நீக்கு
 3. வருகின்றோம் அடுத்த பதிவிற்கு நடந்தது என்ன என்று அறிய...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க வாங்க - உங்கள் கருத்து என்னவென்று சொல்லுங்க.

   நீக்கு
 4. 007 க்கு வேலை ? ம்ம்ம் சாரா, சோஃபியா மர்மம்....தொடர்கின்றோம்...இதோ அடுத்த பதிவிற்கு ....

  பதிலளிநீக்கு