பின்பற்றுபவர்கள்

புதன், 29 ஜூலை, 2015

"தங்கமே! வைரமே!!"

 புள்ளி வச்சி படிக்கனும். !!

நண்பர்களே,

பொதுவாக, பெற்றோர்கள் தங்கள்  குழந்தைகளை கொஞ்சும்போது, முத்தே மணியே, தங்கமே , வைரமே என்று கொஞ்சுவதை கேட்டு இருப்போம்.

செவ்வாய், 28 ஜூலை, 2015

"கலாமுக்கு (கண்ணீர்) சலாம்"

இற(ர)ங்கல் வேண்டி........

மேதகு எங்கள் மேன்மையின் நாயகனே......
உமக்கு இரங்கல் தீர்மானம் ....

திங்கள், 27 ஜூலை, 2015

"காலம் மாறிபோச்சு"


புரிஞ்சிக்கவே முடியல.....

நண்பர்களே,


சின்ன வயதில் உணராமல்  
நாம் எதை செய்தாலும்

வெள்ளி, 24 ஜூலை, 2015

"ஐந்து பைசா ஆஸ்பத்திரி"

"Money"த நேயம்!!

நண்பர்களே,

உலகத்தில் எங்கு பார்த்தாலும் புது புது வியாதிகள் தினந்தோறும் தோன்றிக்கொண்டே இருக்கின்றன.

வியாழன், 23 ஜூலை, 2015

"இரவல் வாங்கவில்லையே"


சுதந்தர தின வாழ்த்துக்கள்!!

Image result for picture of indian national flag

பார்புகழும் பாரத நாடு
யார் விதைத்தார் அதற்க்குக் கேடு
எங்கும் எதுவும் லஞ்சத்தோடு ; அதை
எடுத்துப்போட்டால் நமக்கேது  ஈடு?

அரசியல் எனும் சந்தன குளத்தை
நரகல் சாக்கடை ஆக்கியது யார்
அரைவேக்காட்டு அரசியல் தரகர்
அவரே காரணம்  அவனியில் கடையர்.

வளங்களை சரியாய் பகிர்தல் வேண்டும்
நிலங்களை நித்தம் பயிரிடல் வேண்டும்
தரிசு நிலங்களை வீடாக்கலாம் - பயிர்
விளையும் நிலங்களை வீணாக்கலாமா?

அந்நியன் நம்மை ஆட்டிப்படைத்தது 
அன்றைக்கே முடிந்தது நாற்பத்தேழோடு
இன்னும் எவரேனும் வாலாட்ட முனைந்தால்
அன்றைக்குத் தெரியும் இந்தியர் யாரென்று.

இரவில் வாங்கினோம் சுதந்தரம்
இல்லை என்று மறுக்க வில்லை - ஆனால்
இரவல் வாங்கவில்லையே 
எவர்க்கும் திருப்பிக் கொடுக்க?

காஷ்மீர் என்ன பஞ்சு மிட்டாயா
கோஷமிடுவோர்க்கு எல்லாம்  கிள்ளி கொடுக்க?
ரோஷமுள்ள இந்தியர் எவரும் ரொம்பப்
பாசமுடனதை பராமரிக்க வேண்டும்.

பட்டொளி வீசி பறந்திடும் கொடியை
பார்க்கையிலே நெஞ்சில் பரவசம் -அதில்
சட்டென வந்து மலர் முகம் காட்டி 
சரித்திரம்  சொல்லும் பலர்முகம் 

குருதியும் வேதனை சொல்லொன்னா துயரும்
கொட்டி கொடுத்தே  எல்லையில் 
உறுதியும் வலிமையையும் உரமென இட்டு 
காத்து நிற்கும் வீரனே- உனக்கின்று 

வீர வணக்கம் மட்டும் சொன்னால்
விடியுமா நாளை எம் பொழுது- இனி 
வாரம் ஒருமுறை உமக்காய் நாங்கள்
வேண்டுவோம் இறையடி தொழுது.


எண்ணம் உதிர்த்தவை நிஜம்தானே - அதை
எழுத்தில் வடித்ததுவும் முறைதானே
என்ன யாம் உரைப்பது சரி தானே? - நமை
எதிர்ப்"போர்" முகத்தில் கரிதானே?

வாழ்க பாரதம்!

ஜெய் ஹிந்த்.

இந்த வரலாற்று சிறப்பு மிக்க நன்னாளில் பிறந்த நாள் காணும் என் இதயத்திற்கும் என் வாழ்க்கைக்கும் மிகமும் நெருக்கமான என் அன்பிற்குரிய என் பெரிய அக்கா அவர்களுக்கும் ஏனைய அனைவருக்கும் இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள்.

நன்றி 

மீண்டும் ச(சி)ந்திப்போம்

கோ

"கலர்முகம் கரிமுகம்"

ஸ்மைல் ப்ளீஸ்....!!!!

தொடர்கிறது.....

முதலில் இருந்து வாசிக்க நரிமுகம் மறைமுகம்

ஒருவேளை தன் மனைவியின் புகைப்படத்தை பலர் பார்க்கும் படி முகப்பில் மாட்டி வைக்க பிடிக்கவில்லைபோலும்; அதற்காக ஏன் என் காலை பிடித்து கெஞ்ச வேண்டும் என்று புரியாத முதலாளியிடம்,

புதன், 22 ஜூலை, 2015

"நரிமுகம் மறைமுகம்!"

நாணயம் - நாணயம் !!!


தொடர்கிறது.....

முதலில் இருந்து வாசிக்க "மறுமுகம் அறிமுகம் "

இவர்கள் ஆர்டர் செய்த பொட்டலங்களை விட எண்ணிக்கையில் ஒரு பொட்டலம் கூடுதலாக இருந்தது.