பின்பற்றுபவர்கள்

வெள்ளி, 8 நவம்பர், 2024

டால்பின் சாகசம்!

தரமான சம்பவம்  !!

நண்பர்களே,

பயணம்  தொடர்கிறது...

முன் பதிவுகளை காண மலை மழலைகள்.  

அடுத்ததாக, தங்கி இருந்த ஹோட்டல் அறையிலிருந்து  வெளியில் கிளம்பலாம் என்று நினைத்து தரை தளத்திற்கு வரும் வேளை  வானம் மேகமூட்டத்துடன் கரம் சேர்ந்து  பிசு பிசு வென்ற மழை தூறலை  பூமி மீது தூவிக்கொண்டிருந்தது.

வெள்ளி, 1 நவம்பர், 2024

மலை மழலைகள்!

வினோத சிதறல்கள்!!

நண்பர்களே,

பயன்படுத்திவிட்டு தூக்கி எறியப்பட்ட பிளாஸ்டிக் பாட்டில்கள்,பிளாஸ்டிக் பைகள்,காகிதங்கள், சிகரெட் துண்டுகள், கண்ணாடி பாட்டில்கள் அதுவும் உடைக்கப்பட்டு சில்லு சில்லுகளாக சிதறிக்கிடக்கும் பாட்டில்கள், அறுந்துபோன செருப்புகள்,

புதன், 30 அக்டோபர், 2024

கருங்கடல் ஓரத்தில் ...

அருங்காட்சி!!

நண்பர்களே,

பயண செய்திகள் தொடர்கின்றன...

முன் பதிவுகளை வாசிக்க....கருங்கடல் கண்ணாயிரம்

ஜார்ஜியாவின்  கடற்கரை நகரமாகிய படுமியில் காணவேண்டிய பல  விடயங்கள் பரவி இருந்தாலும் அவை அத்தனையையும் கண்டு மகிழ மனமெல்லாம் ஆசையாக இருந்தாலும் , நேரம் காலம் அடுத்தடுத்த பயண திட்டங்களால் அதிகவனமாக தேர்ந்தெடுக்கப்பட்டு பார்த்து ரசித்த ஒரு சிலவற்றை மட்டுமே இப்பதிவுகள் வாயிலாக மீண்டும் நினைவுபடுத்திக்கொள்ள விழைகிறேன்.

செவ்வாய், 29 அக்டோபர், 2024

கருங்கடல் கண்ணாயிரம்

 படகுப் பயணம் ! 

நண்பர்களே,

சமீபத்தில் வெளியிடப்பட்ட தொடர்பதிவின் முதல் பாகத்தில் குறிப்பிட்டது போல், ஜார்ஜியாவின்  தலைநகர் திப்லிசியிலிருந்து சுமார் 360 கி மீ தூரத்தில் கருங்கடற்கரையில் அமைந்திருக்கும் இயற்கை எழில் கொஞ்சும் அழகிய நகரமான படுமிக்கு சுமார் 5 மணிநேரம் பயணிக்க கூடிய அடுக்கு மாடி தொடர் வண்டியில் பயணித்தேன்.

வியாழன், 24 அக்டோபர், 2024

விமான பயணத்தில்...4

விளங்காத உண்மைகள் 

நண்பர்களே,

முன் பதிவை வாசிக்க...விமான பயணத்தில்...3

அப்படி என்ன?  அடுத்த ஒரு மணி நேரத்தில் ஊர் வந்து சேர்வோம் என்ற அனைத்து பயணிகளின்  மனதிலும் , இதுவே நமது கடைசி பயணமோ என்று எண்ணுகின்ற அளவிற்கு  நடுவானில்  திடீர் என ஏற்பட்ட வானிலை மாற்றத்தினால் பலமான கடும் காற்று வீசியதால் விமானம் இடது வலது என இரண்டு பக்கங்களும் நிலை தடுமாறி பயணிகள் இப்படியும் அப்படியும் சாய பெரும்பாலானவர்கள் கூக்குரலிட்டு தங்கள் அச்சத்தை வெளிப்படுத்த, கேப்டனிடமிருந்து வந்தது அந்த  அவசர செய்தி.

புதன், 23 அக்டோபர், 2024

விமான பயணத்தில்...3

விளங்காத உண்மைகள் 

நண்பர்களே,

முன் பதிவை வாசிக்க விமான பயணத்தில்...2

மூடா விழிகள், அங்கிருந்த தகவல் பலகைகளில், அடுத்து  புறப்படவிருக்கும் பல விமானங்கள் குறித்த செய்தியினை மாறி மாறி காட்டிக்கொண்டிருந்தன, சோர்வுற்ற என் மனதை மேலும் மேலும் வாட்டிக்கொண்டிருந்தன.

செவ்வாய், 22 அக்டோபர், 2024

விமான பயணத்தில்...2

விளங்காத உண்மைகள்.

நண்பர்களே,

முன் பதிவை வாசிக்க விமான பயணத்தில்...

விமான நிலையத்தில் இருந்த தகவல் பலகை சொல்லிய கேட் எண் பிரகாரமான இடத்திற்கு வந்து அங்கிருந்த  டிக்கெட் மற்றும் கடவு சீட்டு  பரிசோதகரை  அணுகி எனக்கான விமான போர்டிங் கார்டை கேட்டேன்.