பின்பற்றுபவர்கள்

செவ்வாய், 17 மே, 2022

ஏறி இறங்கி பார்த்தது.

இதயத்தில் இன்பம் சேர்த்தது.

நண்பர்களே,  

லண்டனில் இருந்து  கிளாஸ்கோ வரை மேற்கொண்ட சொகுசு இரவு ரயில் பயணம் குறித்ததான எமது பதிவை பார்த்திருப்பீர்கள். பார்க்கதவர்கள் , பார்க்க விரும்பினால்  தண்டவாளம் ஏறிய வண்டவாளம் ! (koilpillaiyin.blogspot.com) சென்று பார்த்துவிட்டு தொடரவும்.

ஞாயிறு, 15 மே, 2022

தண்டவாளம் ஏறிய வண்டவாளம் !

மயில்  பயணம்!

நண்பர்களே,   

வண்டவாளம் என்ற பதத்தை   பொதுவாக "யோகியதை" என்ற அர்த்தத்தில் தான் பயன்படுத்துவார்கள். அந்த யோகியதை என்பது எப்போதும் எதிர்மறையான குணநலனை மட்டுமே குறிப்பதாக அமைந்துவிடுகிறது. அதை  ஏன் நேர்மறையான குணநலனை குறிக்க பயன்படுத்தக்கூடாது?

அப்படி  தண்டவாளம் ஏறி பயணித்த பயணத்தின் நேர்மறையான  "வண்டவாளம்" தான் இந்த  பதிவு.  

செவ்வாய், 26 ஏப்ரல், 2022

அசட்டை !!

ஸ்டைலு.. ஸ்டைலுதான்...
நண்பர்களே,

அரை மனிதர்களாக (ஆடை இல்லாது) வாழ்ந்துகொண்டிருந்த மனிதன் நாளடைவில் , காய் கனிகளை கிழங்குகளை  மட்டுமே தாவரங்களில் இருந்து பறித்தெடுத்து உணவிற்காக பயன்படுத்தியவன் , அதன் இலைகளையும் தழைகளையும் மரத்தின் பட்டைகளையும் எடுத்து இனி நாம் அரை மனிதன் அல்ல என்று தனது அரையில் - இடுப்பில்  கட்டிக்கொண்டு வாழ ஆரம்பித்தான்.

சனி, 23 ஏப்ரல், 2022

சிங்க குகைக்குள்ளே ....

 சிங்கிளாக!!!

 நண்பர்களே,

பல நாட்கள்  பசியோடு உறுமிக்கொண்டே இருக்கும் சிங்கத்தின்  குகைக்குள் ஒரு மனிதன் செல்வதாயின் அதற்கு பெருந்துணிச்சலும் அதீத  மன தைரியமும் இருக்கவேண்டும்.  

செவ்வாய், 15 மார்ச், 2022

தில்லான மேகனாம்பாள்.

"தில் தில் தில் மனதில்" 

நண்பர்களே,

தமிழக பாரம்பரிய கலைகளான நாதஸ்வரம்  வாசிப்பையும்  பரதநாட்டிய கலையையும் பெருமைப்படுத்தும் வகையில், நகைச்சுவையையும் அதனுள்  ஒரு காதல் கதையையும் புகுத்தி , சிறப்பான நடிப்பு திறனையும் புடமிட்டு மெருகேற்றி 1968ல், திரு ஏ பி நாகராஜன் திரைக்கதை - இயக்கத்தில், திரு கே வி மகாதேவன் இசையமைப்பில் உருவாக்கப்பட்ட  , தமிழ் திரை உலகவரலாற்று சுவடியில் ஆழமாக சுவடு பதித்த திரைப்படம், தில்லானா மோகனம்பாள் என்பது எல்லோரும் அறிந்தததே.

வியாழன், 20 ஜனவரி, 2022

தாலிக்கு தங்கம்!!

"பணத்துக்கு  பங்கம்".

நண்பர்களே,

மணமகன் அல்லது மணமகள் இல்லாமல் கூட திருமணங்கள் நடந்தாலும் நடக்கலாம், ஆனால் தங்கம் இல்லாமல் எந்த திருமணத்தையும் நினைத்துப்பார்க்க முடியுமா என்றால் சந்தேகமே.

வெள்ளி, 31 டிசம்பர், 2021

பூச்செண்டு கொண்டுவா!!

புன்னகை  மொண்டு வா .

"நலம் கூட்டி வளம் செழிக்க 

வரவேண்டும் இப்புத்தாண்டு.

உலவுகின்ற நோய்த்தொற்று 

உலககன்று செல்லவேண்டும்.