நீரால் சூழப்பட்ட வெனிஸ் நகர்ப்புற குட்டி குட்டி தீவுகள் கால்வாய்களாலும், சிறிய சிறிய பாலங்களாலும் இணைக்கப்பட்டிருப்பதை நேரில் பார்க்கும் போது உள்ளத்தில் ஏற்படுகின்ற உற்சாக பெருவெள்ளத்தை என்னவென்று நானுரைப்பேன்.
உருட்டிய விழிகளோடு சில பகுதிகளும், வசீகரிக்கும் பார்வைகளோடு வேறு சில பிராந்தியங்களும் , கண்ணீரோடு வேதகனைகளோடு வேறு பல பிரதேசங்களும், கந்தக புகைகளையும் அமில நெடிகளையும் மடியில் சுமந்தவண்ணம் வேறு சில நிலப்பரப்புகளுமாக....
மிதி வண்டிகள் இல்லை, ரிக்கஷாக்கள் இல்லை, இரு சக்கர மோட்டார் வண்டிகள் இல்லை, கார்கள் இல்லை, பஸ்கள் இல்லை, லாரிகள் இல்லை , ரயில்கள் இல்லை, குதிரை வண்டிகள் இல்லை, மாட்டு வண்டிகள் இல்லை அட ஒரு ஆட்டோ கூட இல்லைங்க.