பின்பற்றுபவர்கள்

செவ்வாய், 31 டிசம்பர், 2024

இனிய புத்தாண்டு!!


வாழ்த்துகள்

நண்பர்களே,

உலகெங்கிலும் வாழும் அனைத்து நண்பர்களுக்கும் எமது இனிய புத்தாண்டு நல்  வாழ்த்துக்கள். 

வருடந்தோறும் வழக்கமாக  வருவது புத்தாண்டு- வந்து 

பெரும் மகிழ்வை பெரும்பாலோருக்கு தருவது புத்தாண்டு.

கொண்டாட்டம் குதூகலத்தை  கொடுத்திடும் புத்தாண்டு 

கொடியெனவே பிணைந்திடனும்   தொடர் இன்பம்  நம்மோடு.

நம்பிக்கை சாரல் நம் எண்ணங்களில் நலமுடனே  தூரட்டும் 

நாள்தோறும்  புது வாழ்வு நமை நித்தம் வந்து சேரட்டும். 


எல்லோருக்கும் எல்லாமும்  பரனிடம்  யாசிப்போம்  - அது 

எப்போதும் எதார்த்தத்தில் சாத்தியமா யோசிப்போம் 

இருப்பதை முழுமனதுடன் ஏற்று நன்றி பல  சாற்றுவோம் 

இருள் நீங்கி இன்பம் சூழ நல் ஒளி தீபம் ஏற்றுவோம். 

சென்ற ஆண்டைவிட இப்புத்தாண்டில் தூய   மாற்றங்கள்  துளிர்க்கட்டும் 

நினைப்பிலுள்ள ஞாயமான நம் சுக  கனவுகள்  பலிக்கட்டும்.


இழந்துவிட்ட பல உறவுகளின் நினைவலைகள் ஓயட்டும்  

இருப்பவரின் இதயங்களில் இன்பத்  தேனாறு பாயட்டும்.

ஆள்பவரின் மனதினிலே கரிசனைகள் பூக்கட்டும் - அவர்கள் 

மன்னரல்லர் சேவகர்கள் எனும் நினைப்பு தலை தூக்கட்டு.

ஆழ்கடனில்  தத்தளிபோர்   வாழ்வு நிலை மாறட்டும் 

கடனில்லா, நோயற்ற  சுக  வாழ்வு நம்மை வந்து சூழட்டம்.


புத்தாண்டிலும் நம் உறவு புது பொலிவுடன் தொடரட்டும்.

வாழ்த்துகளுடன்,

மீண்டும் ச(சி)ந்திப்போம்.

கோ.



4 கருத்துகள்:

  1. தனபால்,

    தங்களின் புத்தாண்டு வாழ்த்து செய்தி வாசித்து மகிழ்ந்தேன்.

    தங்களுக்கும் தங்களின் குடும்பத்தினருக்கும் இனிய புத்தண்டு வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  2. சிறப்பு புத்தாண்டு வாழ்த்துகள் நாங்களும் வலைப்பக்கம் உள்ளோம் அரசே

    பதிலளிநீக்கு
  3. வணக்கம்.

    வருகைக்கும் தொடர் இருப்புக்கும் மிக்க நன்றிகள்.

    பதிலளிநீக்கு