பழைய காலத்து மனிதர்களுள் பெரும்பான்மையானவர்கள், சூது வாது தெரியாத வெள்ளந்தி மனிதர்களாக வாழ்ந்திருந்தனர் என்பதை வரலாறுகளும், வழி வழியாக சொல்லப்பட்ட உண்மை சம்பவங்கள் மூலமும் நாம் அறிவோம்.
சமீபத்தில் ஊரில் தங்கி இருந்த நாட்களில் மிக முக்கியமான வேலைகள் இருந்தபோது மட்டுமே வெளியில் சென்று வந்தேன் மற்றபடி வீட்டிலேயே குடும்பத்தினருடன் தங்கி இருந்தேன்.
பேருந்தில் பயணித்துக்கொண்டே, அக்கம் பக்கம் என்ன நடக்கின்றது என்று கொஞ்சம் கண்களை அகல விரித்து ஆழ்ந்து கவனித்துக்கொண்டே பயணத்தை தொடர்ந்த எனக்கு பல விஷயங்கள் பார்வையில்பட்டு மறைந்தாலும் ஒரே ஒரு காட்சி மட்டும் மனதில் புகுந்து கொஞ்சம் சிந்திக்க தூண்டியதின் விளைவே இந்த பதிவு.