எனது முந்தைய பதிவான, "குடைக்குள் மழயில்" எங்களுடன் எங்கள் வீட்டருகே இருந்த ஒரு ரிக்க்ஷா காரர் வந்தார் என குறிப்பிட்டிருந்தது, உங்களுக்கு நினைவிருக்கும் என நினைக்கின்றேன்.
நேற்றைய எமது - பாட்டு பாட - "வா" எனும் பதிவில், சமீபத்தில் நான் கலந்துகொண்ட ஒரு கிறிஸ்மஸ் கீத இன்னிசை நிகழ்ச்சியில் நான் ரசித்த தமிழ் பாடல்கள் எனும் வரிசையில் ஒரு பாடலை குறிப்பிட்டு அடுத்த பாடல்
எதுவென்று இன்று சொல்வதாக வாக்களித்திருந்தேன் நினைவுண்டா?
வருடா வருடம் கிறிஸ்த்து பிறப்பின் நன்னாளை கொண்டாடும் நம் கிறிஸ்த்துவ சகோதர சகோதரிகள் , இந்த பண்டிகையை முன்னிட்டு செய்யும் பலவிதமான தயாரிப்புகள்,மற்றும் முன்னோட்ட நிகழ்ச்சிகளில் ஒன்று கிறிஸ்மஸ் "கேரல்ஸ்" என சொல்லப்படும் "இன்னிசை கீத இசை நிகழ்ச்சிகள்".
ஐரோப்பா மட்டுமல்லாமல், உலகின் பல நாடுகளில் கிறிஸ்மஸ் பண்டிகையை எதிர்நோக்கி காத்திருக்கும் மக்களுள் எந்த மதமும் சாராதவர்களும் வேறு மதங்களை சார்ந்தவர்களும் கூட மிகவும் ஆர்வமுடனும், மகிழ்ச்சியுடனும், உற்சாகமுடனும்,