பின்பற்றுபவர்கள்

வெள்ளி, 16 மே, 2025

துணை நிற்பாய்!

 பெருந் தூணெனவே!!

நண்பர்களே,

ஆதி பகவன் முதற்றே உலகு எனும் பொதுமறை போதனையின் பொக்கிஷ வாக்கிற்கிணங்க இந்த புதிய  நாளை  இறை வழிபாட்டோடு துவங்குவது ஏற்புடையதாக இருக்கும் என கருதுகிறேன்.

அவ்வகையில் :

"ஆதியுமாய்  அந்தமுமாய் 

அனைத்து உயிர்க்கும் தந்தையுமாய் 

ஜோதியுமாய் நீதியுமாய் 

அகிலலோக அதிபனுமாய் 

விண்ணிலே வீற்றிருந்தும்  

விளங்காத விந்தையென 

மண்ணிலும் என்னிலும் 

மாட்சியுடன்  ஆட்சிசெய்யும் 

மறை போற்றும் மா மணியே! 

மாசில்லாத் திருச்சுடரே!! - எம்மின் 

கறை நீக்கி கரை சேர்ப்பாய் 

கரம் குவித்து பதம் பணிந்து

இந்த புதிய நாளில்  - என்

 பயணத்தை தொடர்கிறேன்

துணை நிற்பாய் பெருந் 

தூணெனவே. 

நன்றி,

மீண்டும் ச(சி)ந்திப்போம்.

கோ.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக