பின்பற்றுபவர்கள்

வெள்ளி, 2 மே, 2025

தரணியெங்கும் தமிழ்ப் புத்தாண்டு -4

 தீர்க்கமான  தீர்ப்பு!! 

நண்பர்களே,

கொண்டாட்டம் தொடர்கிறது....

முன் பதிவை வாசிக்க..தரணியெங்கும் தமிழ்ப் புத்தாண்டு -3

இரு அணியினரின் வாதங்களையும் பிரதி வாதங்களையும் அவரவர் தம் கருத்துக்களையும் கேட்ட பின்னர் நடுவரின் தீர்ப்பு என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பிற்கிடையில், நடுவர் பேச ஆரம்பித்தார்.

நண்பர்களே,

பெரும் மழை பெய்து ஓய்ந்தது போல் இருக்கின்றது.

இரண்டு அணியினரின் வாதங்களும் ஒன்றுக்கொன்று சளைத்ததல்ல எனும் வகையில் அமைந்த இந்த கருத்தாடல்களின்  அடிப்படையிலும் மேலும் சில நடைமுறை எதார்த்தங்களின் அடிப்படையிலும் நம் பிள்ளைகளின் நிகழ் கால வாழ்வியல் சூழல்களின்  அடிப்படையிலும் நாம் ஒரு தீர்பிற்கு வரவேண்டிய  தருணம் இது.

அலசி ஆராய்ந்து சிந்தித்து சீர்தூக்கி பார்க்கும்போது :

கனிவு, என்பது அன்பின் முதிர்ச்சி.

கனிவு, என்பது அன்பின் முழுமை.

கனிவு பெற்றோருக்கும் பிள்ளைகளுக்குமான உறவை நட்பை பெறுக செய்கிறது.

கனிவு பிள்ளைகளின் வாய்மையை, நேர்மையை வலுவாக்குகிறது.

கனிவு, பிள்ளைகள் சுதந்தரமாக செயல்பட - சுதந்தர காற்றை சுவாசிக்க உரிமை அளிக்கின்றது.

கனிவு, பிள்ளைகளின் ஞாயமான விருப்பங்களுக்கு செவி சாய்க்கிறது.

கனிவு, பிள்ளைகளின் அச்சத்தை , பயத்தை போக்குகிறது.

கனிவு, பிள்ளைகளின் தெளிவான சிந்தனைக்கு வழி வகுக்கின்றது.

கனிவு, பிள்ளைகளின் புதிய முயற்சிகளுக்கு வாசல் திறக்கின்றது.

கனிவு, முன்னேற்ற பாதைக்கு படிகள் அமைத்துக் கொடுக்கின்றது.

கனிவு, பொறுப்புகளை புரிய வைக்கின்றது.

கனிவு, கடமைகளை உணர செய்கிறது. என்று சொல்லிக்கொண்டிருந்தவர்,

மேலும் தமது உரையில் ,

இன்றைய உலக சூழலில் , இதுபோன்ற வெளியரங்கமான பொது மேடைகளில் சில விடயங்களை நேரடியாக சொல்லுவது சாத்தியமல்ல என்பதால்,சில உதாரணங்கள் மூலமாகவும் சில உவமைகள் மூலமாகவும் சொல்லுதல் ஏற்புடையதாக இருக்கும் என கருதுவதாக கூறி;

நம் பிள்ளைகளை நாம் வளர்க்கும் செடிகளுக்கு ஒப்புமை படுத்தி பார்க்கும்போது:

பிள்ளைகளிடம் கனிவாக பெற்றோர்கள் நடந்துகொள்வதென்பது, செடிகளுக்கு நீரூற்றுவதைப்போல, அவற்றிற்கு உரமிடுவதை போல, அவற்றை சூரிய ஒளி மிதமாக படக்கூடிய இடத்தில் வைத்து அன்போடு கரிசனையோடு அக்கரையோடு வளர்ப்பதைப்போல எனும் உவமைகளை சொல்லி, மேலும், 

வானத்தில் வட்டமிட்டு அழகாக உயர்ந்து பறக்க  பட்டத்திற்கான அழகிய  நீண்ட வால் உதவுவதுபோல  போல,  பிள்ளைகள் சமூகமெனும் வானில் நற்கீர்த்தியுடன்  சிறக்கவேண்டுமாயின் கனிவு எனும் வாலாக பெற்றோர்கள் துணைபுரிகின்றன.

கனிவிற்கு கால வரையறை கிடையாது,  எந்த நிலையிலும் எந்த வயதிலும் கனிவான பெற்றோர் பிள்ளைகளின் முன்னேற்றத்திற்கு உறுதுணையாக இருக்க முடியும் உதவ முடியும்.

ஆனால், கண்டிப்பு  எல்லா நிலையிலும் எல்லா காலத்திலும் பெற்றோர்கள் பிள்ளைகளிடத்தில் பிரயோகிக்க முடியாது.

கண்டிப்பு அச்சத்தை கொடுக்கு.

கண்டிப்பு, பயத்தை கொடுக்கும்.

கண்டிப்பு, பிள்ளைகளிடத்தில் தாழ்வு மனப்பான்மையை உருவாக்கக் கூடும்.

கண்டிப்பு, அடிமைத்தனத்தை பிள்ளைகளின் அடிமனத்திலே ஆழமாக பதிக்கக்க கூடும், அவர்களது மன வலிமையை சிதைக்கக் கூடும்.

கண்டிப்பு, வெளிப்படை தன்மைக்கு ஊறு விளைவிக்கக் கூடும்.

இதுபோன்ற கருத்துக்களின் அடிப்படையிலும் எதார்த்த நடைமுறை வாழ்வியலையும்  , பிள்ளைகளின் நலனையும்  முன்னிறுத்தி பார்க்கும்போதும்,

நம் பிள்ளைகளின் முன்னேற்றத்திற்கு உகந்தவர்கள் ,

கனிவான பெற்றோரே!

என தீர்ப்பளித்து பட்டிமன்றத்தை  நிறைவு செய்ய விரும்புவதாக நடுவர் சொல்லி முடிப்பதற்குள், அரங்கம் முழுமையும் பெரும் கைத்தட்டல்களும் சீழ்க்கை ஒலியும் , மேடையில் கனிவு என்று பேசிய அணியினர் ஒருவருக்கொருவர் கைகுலுக்கியும் தங்கள் கட்டை விரல்களை உயர்த்திக்காட்டியும்,  புன்னகை முகத்திலும் பூரிப்பு தங்கள்  உள்ளத்திலும் பெறுக தங்கள் மகிழ்ச்சியையும்  சந்தோஷத்தையும் அரங்கிலிருந்தவர்களை  நோக்கி கையசைத்து தெரிவித்து மகிழ்ந்த அந்த சில நிமிட புளகாகித  பூரிப்பை எப்படி சொல்வது.?

இந்த மகிழ்ச்சி ஆரவாரம் அடங்க சில நொடிகள் ஆனதால் நடுவர் அதுவரை அமைதி காக்க வேண்டி இருந்தது.

எப்படி இருந்தாலும் நடுவர் இந்த பட்டி மன்றத்தை முறைப்படி எல்லாருக்கும் நன்றி கூறி  முடிக்க வேண்டுமல்லவா..?

தொடர்ந்து அவர் என்ன பேசினார் என்பதை நாளை பார்ப்போம்.

அதுவரை, 

நன்றி.

மீண்டும் (ச)சிந்திப்போம்.

கோ.


6 கருத்துகள்:

  1. Hi sir,
    I’ve been reading this series right from the first blog.
    As usual, you’ve beautifully conveyed your emotions and experiences of participating in the Tamil New Year celebration through your writing.
    It was nice to read.
    Parenting in the previous generation wasn’t as challenging,
    but nowadays it has become more complicated and stressful for many.
    Definitely, parental kindness plays a crucial role in a child’s growth.
    Waiting for the next part sir.
    ---
    Tirupati Mahesh

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Hello Mahesh,
      Thanks for your comments and appreciations.As you pointed out, parenting is a huge challenge particularly with the new Zen generation. Kindness and liberal attitude of parents on children are good approach as long as the children do not take the liberty , kindness and softness as undue advantageous.
      your comments and enthusiasm to read the blog are much appreciated.
      take care.

      நீக்கு
  2. பெயரில்லா4 மே, 2025 அன்று 7:16 PM

    நல்ல தீர்ப்பு, கோ.

    கனிவிற்கான விளக்கம் அருமை.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நடுவர் உரைத்த கனிவின் விளக்கத்தை ரசித்து பாராட்டியமைக்கு மிக்க நன்றிகள்.
      பொறுத்திருந்து பார்ப்போம், பட்டிமன்ற நடுவரின் நடுவர் தீர்ப்பு வரும்வரை

      நீக்கு
  3. பெயரில்லா4 மே, 2025 அன்று 7:26 PM

    ஆனால் கனிவும் தேவை சிறிய கண்டிப்பும் தேவை என்பது என் தனிப்பட்ட கருத்து. அடுத்த பதிவைப் பார்க்கிறேன் இறுதியாக என்ன சொல்கிறார் என்று

    கீதா

    பதிலளிநீக்கு
  4. தங்களின் தனிப்பட்ட ப்பட்ட கருத்திற்கு மிக்க நன்றிகள்.
    மக்களோடு சேர்ந்து நான் மிகவும் ரசித்து மகிழ்ந்த பட்டிமன்றம் அது.
    பொறுத்திருந்து பார்ப்போம், பட்டிமன்ற நடுவரின் நடுவர் தீர்ப்பு என்னவென்று.

    பதிலளிநீக்கு