தீர்ப்புரை! - அறுசுவை!!.
நண்பர்களே,
கொண்டாட்டம் தொடர்கிறது....
முன் பதிவை வாசிக்க.....தரணியெங்கும் தமிழ்ப் புத்தாண்டு - 5
நடுவர், கண்டிப்பான பெற்றோரே!
என தீர்ப்பளித்து இத்துடன் இந்த பட்டிமன்றத்தை நிறைவு செய்து முடிக்கலாம் என நினைக்கிறேன், எனினும் ... என்று தமது உரையை தொடரும்போது , அரங்கமும் மேடையில் வீற்றிருக்கும் இரண்டு அணியினரும் நடப்பது என்ன ? எதற்காக நடுவர், "எனினும்" என்று பீடிகை போடுகிறார் என்ற இனம் புரியாத புதிரான சிந்தையோடு நடுவரை தீர்க்கமாக உற்றுப்பார்க்க , நடுவர் தொடர்கிறார்,
செல்லுகின்ற இடமெல்லாம் செல்லுகின்ற(செல்லுபடியாகின்ற) நாணயமாக இருக்க வேண்டுமாயின் ஒவ்வொரு நாணயத்திற்கும் இரண்டு பக்கங்கள் அவசியம். அவற்றின் இரண்டுபக்கங்களும் ஒரே அடையாளம் கொண்டிருந்தால் அவை செல்லாக்காசாகிவிடும் அதுபோல :
பயிருக்கு கனிவு எனும் நீரும் உரமும் எத்தனை அவசியமோ கண்டிப்பு எனும் பாதுகாப்பு வேலியும் அத்தனை அவசியம்.
பட்டங்களுக்கு கனிவு எனும் வால் எத்தனை அவசியமோ அதுபோல கண்டிப்பு எனும் நூலும் அத்தனை அவசியம்.
தன் பிள்ளை எந்த படிப்பு படித்திருந்தாலும் எத்தனை பட்டங்கள் பெற்றிருந்தாலும் எந்த உயர் பதவியில் இருந்தாலும் அவற்றை எல்லாம் பெரிதென கருதாமல், பிள்ளைகளின் முன்னேற்றமாக தாய் எதை கருதுவாள் என்றால்:
வள்ளுவனின் தெள்ளிய வாக்கின்படி, தன் மகன் ஒரு சான்றோன், சிறந்தவன், ஒழுக்க சீலன், நேர்மையானவன், நற்குணம் மிகுந்தவன் என மற்றவர்கள் சொல்லக் கேட்க்க வேண்டும் எனவும் அப்போது அவள் இந்த மகனை பெற்றபோது ஏற்பட்ட மகிழ்ச்சியை விட பல மடங்கு பேருவகை கொள்வாள் எனும் பொருள்படும்படி தம் குறளொன்றில் :
"ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன் மகனை
சான்றோன் என கேட்ட தாய்."
என குறிப்பிடும் படியான சிறப்பு பெற்ற மகனாகவும் ,
தந்தையின் எண்ணப்படி , தன் மகன் கற்றவர்கள் சபையிலே எல்லோராலும் மதிக்க தக்க வகையிலும் , அறிவார்ந்தோர் முன்னிலையிலே தன் மகன் முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டியவனாகவும், முதல் மரியாதை கொடுக்கப்படவேண்டியவனாகவும், அவன் எந்த அவைக்கு சென்றாலும் அந்த அவையத்துள் முந்தி இருக்க கூடிய வகையில் கல்வி கேள்வி ஒழுக்கத்தில் தலை சிறந்தவனாக இருப்பதே அவனின் முன்னேற்றமாக கருதும் வகையில் , தந்தை நினைப்பான் எனும் கருத்தடங்கிய தமது குறளில்
"தந்தை மகற்காற்றும் நன்றி; அவையத்துள்
முந்தி இருப்பச்செயல்."
என சொல்வதுபோல் , "மாபெரும் சபைகளில் நீ நடந்தால் உனக்கு மாலைகள் விழ வேண்டும் ஒரு மாற்றுக்குறையாத மன்னவன் இவனென போற்றிப்புகழத்தக்க வகையிலும்", அதற்கும் மேலே,
"இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும் - இவர்போல யாரென்று ஊர்சொல்லவேண்டும்."
என்கின்ற உன்னத நிலையை தம் பிள்ளைகள் அடைய வேண்டுமாயின் பிள்ளைகளிடத்தில் பெற்றோர்கள் கனிவாகவும் அதே சமயத்தில் கண்டிப்பாகவும் நடந்து கொள்வது சாலச்சிறந்தது.
எனகூறிய நடுவரின் பேச்சுக்கு, மன்றத்தினர் ஆமோதித்து அங்கீகரி ப்பதுபோல் கைதட்டி ஆரவாரம் செய்ய, நடுவர் தொடர்கிறார்...
ஒரு செய்தியை நினைவு படுத்தி இந்த பட்டிமன்றத்தை நிறைவு செய்யலாம் எ ன நினைக்கிறன்.
தேவர்கள் உண்ணுகின்ற கிடைத்தற்கரிய உணவாகிய அமிழ்தமேயானாலும் அளவிற்கு மிஞ்சினால் என்னவாகும் என்பதை உணர்ந்து,
* செடிகளுக்கு நீரூற்றுங்கள் - நீரில் மூழ்கடித்துவிடாதீர்கள்.
*செடிகளுக்கு உரமிடுங்கள் - உரங்களே செடியை மூடிவிடமால் பார்த்துக்கொள்ளுங்கள்.
*செடிகளுக்கு பூச்சி மருந்து தெளியுங்கள் - அவற்றிற்கு மூச்சுமுட்டாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.
*செடியின் தேவையற்ற கிளைகளை வெட்டும்போது, உங்கள் கோடாரிகளை வேரின் பக்கம் வீசிவிடாமல் கவனமாக இருங்கள்.
*தங்கத்தை மெருகேற்றுங்கள் - உஷ்ணத்தை உயர்த்தி உருவத்தை சிதைத்துவிடாதீர்கள்.
*வைரத்தை பட்டைத்தீட்டுங்கள் - கற்கள் கரைந்து காணாமல் போகுமட்டும் தீட்டிக்கொண்டே இருக்காதீர்க்கள்.
*வெள்ளத்திற்கு அணை போடுங்கள் - அவ்வப்போது SHUTTER கள் எனும் மதகுகளை திறந்துவிடுங்கள்.
*கனிவு எனும் பட்டத்தின் வாலின் கனம் கூடிவிடாமல் பார்த்துக்கொள்ளுங்கள் இல்லையேல் வாலின் எடை பட்டத்தை மேலெழும்பி பறக்க விடாமல் செய்துவிடும்.
*கண்டிப்பு எனும் நூலினை உங்கள் முழுப்பெலன் கொண்டு இழுத்து முறித்துவிடாதீர்கள்.
* அளவிற்கு அதிகமான கனிவு அலட்சியப்படுத்தப்படும்.
*அளவிற்கதிகமான கண்டிப்பு நம்மை பிள்ளைகளிடமிருந்து அந்நியப்படுத்திவிடும்.
என்பதை நினைவில் நிறுத்தி , அளவான கனிவுடனும் அளவிற்கதிகமாகாத கண்டிப்புடனும் நடந்துகொள்ளும் பெற்றோரின் பிள்ளைகள் வாழ்வின் முன்னேற்றப்பாதையில் முனைப்புடன் வெற்றி நடை போடுவது அதிக நிச்சயம்.
*பெற்றோர்களே, உங்கள் பிள்ளைகளோடு நேரம் செலவிடுங்கள், அவர்களின் கருத்துக்களை நிதானமாக கேளுங்கள்.
*பெற்றோர் - ஆசிரியர் கூட்டங்களுக்கு தவராமல் செல்லுங்கள், பள்ளியிலிருந்து வரும் ரிப்போர்ட்களை அலட்ச்சியப்படுத்தாதீர்கள்.
*உங்கள் கனிவின் அடர்த்தி உணரப்படுகிறதா என தெரிந்துகொள்ளுங்கள்.
* உங்கள் கண்டிப்பின் நோக்கங்களை எடுத்து சொல்லுங்கள்.
*எல்லாவற்றிற்கும் மேலாக உங்கள் பிள்ளைகளை அடுத்தவர்களோடு ஒப்புமை படுத்தி மதிப்பீடு செய்யாதீர்கள்.
என்ற வேண்டுகோளோடு, பிள்களுக்கும் சில அறிவுரைகளாக,
#பிள்ளைகளே, உங்கள் பெற்றோருக்கு செவிகொடுங்கள், அவர்களிடத்தில் உண்மையாய் இருங்கள் என கேட்டுக்கொண்டு,
இந்த பட்டிமன்றத்தில் இரண்டு அணியியினரும் வெற்றிபெற்றதாக அறிவித்து இந்த வெற்றியை இன்று நாம் மகிழ்ச்சியோடு கொண்டாடிகொண்டிருக்கும் தமிழ்ப்புத்தாண்டின் நடுநாயகமாக விளங்கும் நம் தமிழன்னையின் பொற்பாதங்களில் அர்ப்பணித்து , வாய்ப்புக்கு நன்றி கூறி விடைபெறுகிறோம்;
நன்றி, வணக்கம்.
வாழ்க பாரதம்!
வெல்க தமிழ்!!
என கூறி அவையோரை வணங்கி பட்டிமன்றத்தை நிறைவு செய்தார் நடுவர்.
இந்த முடிவு, வந்திருந்த அனைவருக்கும் மற்றும் இரு அணி பேச்சாளர்களுக்கு மன நிறைவை கொடுத்தது எனும் நம்பிக்கையை அரங்கம் எழுப்பிய கைத்தட்டல்கள் மூலமும் அரங்கில் எழுந்து அடங்க அவகாசம் எடுத்துக்கொண்ட பேரலை மகிழ்ச்சி ஆரவாரமும், ஏகோபித்து தூவப்பட்ட பாராட்டு மலர்களின் வாசமும் இன்னும் பல நாட்களுக்கு பேசுபொருளாக இந்த பட்டிமன்றம் விளங்கும் எனும் வாய்மொழி தகவல்கள் உறுதி செய்தன.
பேச்சாளர்கள் அனைவரும் குறுகிய காலத்தில் நிறைவான தயாரிப்புடன் வந்திருந்து தீர்க்கமாக தங்கள் கருத்துக்களை திறம்பட எடுத்தியம்பி அவையோர் அனைவரின் ஏகோபித்த பாராட்டுகளையும் கைதட்டல்களை பெற்று உற்சாக பெருவெள்ளத்தில் மூழ்கித்திளைத்தனர் என்பதை வழிமொழியாமல் விட்டுவிட்டால் நிம்மதி தூக்கம் என்னை நிச்சயம் பழிவாங்காமல் விட்டுவிடுமா?.
கனிவு எனும் அணியில்:
திருமதி. விக்டோரியா, சைக்கோ தெரபிஸ்ட் மற்றும் மனநல ஆலோசகர்.
திருமதி. தாரிணி முத்து , தகவல் தொழில் நுட்பத்துறை - மேலாளர்.
திருமதி. புவனேஸ்வரி ராஜாமணி, டெஸ்டிங் அனலிஸ்ட் , யோகா ஆசிரியை.
கண்டிப்பு எனும் அணியில்:
திருமதி. ஜெனிஃபர் ப்ரீத்தா, தகவல் தொழில் நுட்பத்துறை.
திரு. இரவிகுமார் , மென்பொருள் பொறியாளர்.
திரு. சக்திவேல், தகவல் தொழில் நுட்பத்துறை.
நடுவர்:
பட்டிமன்ற நடுவரைக்குறித்து மேலதிக தகவல்கள் ஏதும் தெரியவில்லை பதிவின் இறுதியில் காணப்படும் ஒற்றை எழுத்தில் உச்சரிக்கப்படும் அவர் பெயரைத்தவிர.
பட்டிமன்ற ஒருங்கிணைப்பாளர்கள்:
திருமதி.பவதாரிணி, திரு ராஜகோபால் மற்றும் கிளாஸ்டர் இந்திய தமிழ்ச்சங்க நிர்வாகிகள்.
செவிக்குணவாக பறை இசை விருந்தும் , பட்டிமன்ற விருந்தும் படைத்து எல்லோரின் உள்ளங்களையும் உற்சாக வெள்ளத்தில் நனைத்து நிரப்பி, விழா நிறைவில், வந்திருந்த 200 க்கும் மேற்பட்ட சங்கத்தின் அங்கத்தினர்கள் விருந்தினர்கள் அனைவருக்கும், வயிற்றிற்கும் உணவளிக்கும் வகையில், தலைவாழை இலையில் பரிமாறப்பட்ட சைவ மற்றும் அசைவ அறுசுவை உணவின் சுவை நாவிலிருந்து நழுவிச் செல்ல நாட்கள் பல ஆனது எனினும் உள்ளம் இன்னமும் அசைபோட்டுக்கொண்டே இருப்பதை எப்படி சொல்லாமல் விடுவது.
நன்றி, வணக்கம்
மீண்டும் ச(சி)ந்திப்போம்.
கோ
Hi Sir,
பதிலளிநீக்குIt’s been at least 10–15 years since I last watched a Pattimandram on TV during a festival.
But in 2025, even while I was in Tirupati, I got to experience the Tamil New Year celebration held in the UK through your writings.
You made us feel like we were watching the Pattimandram live through your detailed narration.
Each part was well-written, interesting to read, and thought-provoking.
After many years, through your writings Sir, this was a blog series I found truly exciting and engaging.
I read the entire Tamil New Year Pattimandram series with great interest through your blog posts.
Now, coming to the Naduvar of the Pattimandram —
It reminded me of the style in your previous blog writings!
It was a surprise to know that you were the Naduvar of the Pattimandram!!!
and that you declared both teams as winners.
Congratulations to you, Sir,
and to everyone who took part in the Pattimandram,
as well as the organisers!
---
Tirupati Mahesh
மகேஷ்,
நீக்குதங்களுடைய வருகைக்கும் பதிவுகளை வாசித்து கருத்திட்டமைக்கும் மிக்க நன்றிகள்.
பட்டிமன்றம் தொடர்பான தொடர் பதிவுகள் அத்தனையையும் ரசித்து ருசித்து வாசித்து மகிழ்ந்ததை குறித்து எனக்கு மட்டற்ற மகிழ்சசி.
என்னைப்போலவே, பட்டிமன்றத்தில் பங்குகொண்ட அனைத்து பேச்சாளர்களுக்கும் தங்களின் பின்னூட்டம் பெரும் வாழ்த்தாகவும் ஊக்கமளிக்கும் உந்துசக்தியாகவும் விளங்கும் என்பதில் ஐயமில்லை.
தங்களின் வாழ்த்துக்களும் பாராட்டுகளும் பங்கு பெற்ற அனைவருக்கும் , விழா ஒருங்கிணைப்பாளர்களுக்கும் கண்டிப்பாக போய் சேரும், வாசித்து மகிழ்வார்கள் என நம்புகிறேன்.
நன்றி.
Hi Sir,
பதிலளிநீக்குIt’s been at least 10–15 years since I last watched a Pattimandram on TV during a festival.
But in 2025, even while I was in Tirupati, I got to experience the Tamil New Year celebration held in the UK through your writings.
You made us feel like we were watching the Pattimandram live through your detailed narration.
Each part was well-written, interesting to read, and thought-provoking.
After many years, through your writings Sir, this was a blog series I found truly exciting and engaging.
I read the entire Tamil New Year Pattimandram series with great interest through your blog posts.
Now, coming to the Naduvar of the Pattimandram —
It reminded me of the style in your previous blog writings!
It was a surprise to know that you were the Naduvar of the Pattimandram!!!
and that you declared both teams as winners.
Congratulations to you, Sir,
and to everyone who took part in the Pattimandram,
as well as the organisers!
---
Tirupati Mahesh
Mahesh, thank you so much for your comments and happy that you have enjoyed reading the blogs. I hope your encouragements will make the participants feel overwhelmed on their contribution for the success of the event.
பதிலளிநீக்குThanks again for your time taken to read the entire series and efforts to make such an encouraging comment.
வணக்கம். Somehow I guessed that you might be the judge for the debate show. I can pat on my shoulders for my good guess work. The judgement was really fair and I was expecting this too. Please convey my wishes to all those spoke in the debate and I admired your writing style sir. Expecting more posts in the future. Thanks to Mahesh for introducing your blog
பதிலளிநீக்குவணக்கம்.
நீக்குஎந்தன் பதிவின் பாதையில் தங்கள் பாதம் பட்டமைக்குறித்து மிக்க மகிழ்ச்சி.
பட்டிமன்றத்தின் நடுவராக யார் இருந்திருக்கக்கூடம் என்ற தங்களின் கணிப்பு கனிந்தமை சிறப்பு; அதுவும் என்னைப்பற்றி ஏதும் அறிந்திராத நிலையில் தங்களின் கணிப்பு, என் கனவிலும் பிரமிப்பூட்டுகிறது. முடிவும் ஏற்புடையதாக இருந்ததாக குறிப்பிட்டிருந்தீர்கள், நன்றி.
தங்களின் பாராட்டுக்கள், பங்குகொண்டு பேசிய அனைத்து பேச்சாளர்களுக்கும் போய் சேரும்.
மகேஷ் அவர்களுக்கு கரம்கூப்பி நன்றி சொல்வதில் உங்களோடு நானும் கரம் இணைகிறேன்.
எமது ஏனைய பதிவுகளையும் வாசித்து தங்களின் மேலான கருத்துக்களை தெரிவிக்கவும், காத்திருக்கிறேன்.
நலமுடன் இருக்கவும் , நலம் சிறக்கவும் வாழ்த்துக்களுடன்.
கோ.
வணக்கம். Somehow I guessed that you might be the judge for the debate show. I can pat on my shoulders for my good guess work. The judgement was really fair and I was expecting this too. Please convey my wishes to all those spoke in the debate and I admired your writing style sir. Expecting more posts in the future. Thanks to Mahesh for introducing your blog
பதிலளிநீக்குவணக்கம்.
பதிலளிநீக்குஎந்தன் பதிவின் பாதையில் தங்கள் பாதம் பட்டமைக்குறித்து மிக்க மகிழ்ச்சி.
பட்டிமன்றத்தின் நடுவராக யார் இருந்திருக்கக்கூடம் என்ற தங்களின் கணிப்பு கனிந்தமை சிறப்பு; அதுவும் என்னைப்பற்றி ஏதும் அறிந்திராத நிலையில் தங்களின் கணிப்பு, என் கனவிலும் பிரமிப்பூட்டுகிறது. முடிவும் ஏற்புடையதாக இருந்ததாக குறிப்பிட்டிருந்தீர்கள், நன்றி.
தங்களின் பாராட்டுக்கள், பங்குகொண்டு பேசிய அனைத்து பேச்சாளர்களுக்கும் போய் சேரும்.
மகேஷ் அவர்களுக்கு கரம்கூப்பி நன்றி சொல்வதில் உங்களோடு நானும் கரம் இணைகிறேன்.
எமது ஏனைய பதிவுகளையும் வாசித்து தங்களின் மேலான கருத்துக்களை தெரிவிக்கவும், காத்திருக்கிறேன்.
நலமுடன் இருக்கவும் , நலம் சிறக்கவும் வாழ்த்துக்களுடன்.
கோ.
வணக்கம்.
பதிலளிநீக்குதமிழ் இலக்கியத்தின் பெருமையை எடுத்துக்காட்டும் ஒரு அரிய மேடையாக, இன்றைய இந்த தமிழ் பட்டிமன்றம் சிறப்பாக நடைபெறுகிறது என்பது எங்களுக்கெல்லாம் பெரு மகிழ்ச்சி அளிக்கிறது. பட்டிமன்றம் என்பது வெறும் வாதப்போட்டி அல்ல; இது பண்பாட்டின் பசுமையும், மொழியின் செழிப்பும், சிந்தனையின் சிறப்பும் ஒட்டிக்கொண்ட ஒரு அரங்கம்.
இங்கே பேசுகிற ஒவ்வொரு பேச்சாளரும் தங்கள் திறமையை, திறத்தையும், மற்றும் தமிழின் மிளிரும் வாக்குச்சொற்களையும் கொண்டு வந்த விதம், மனதைக் கவர்கிறது. நயமான நகைச்சுவை, தீவிரமான விவாதம், தெளிவான எண்ணப்பாசறை – இவை அனைத்தும் ஒன்றிணைந்த ஒரு சிந்தனைச் சடங்காக இன்றைய நிகழ்ச்சி மாறியுள்ளது.
இத்தகைய அருமையான நிகழ்வை ஏற்பாடு செய்த குழுவினருக்கும், பங்கேற்ற பேச்சாளர்களுக்கும், இளைஞர்களுக்கும், பெரும்பாலும் தமிழ் மொழியையே நம்முடைய அடையாளமாக எடுத்துக் கொண்ட உங்களுக்கும், நெஞ்சார்ந்த பாராட்டுகள்!
இனி கூடவும் இப்படி பட்டிமன்றங்கள் நடத்தப்பட வேண்டும்; இதுவே தமிழ் வளர்ச்சிக்கான ஒரு சிறந்த வழி!
நன்றி. வணக்கம்."
நண்பரே,
பதிலளிநீக்குதங்கள் வருகைக்கும் பாராட்டிற்கும் மிக்க நன்றி. தங்களின் வாழ்த்தும் பாராட்டும் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் போய் சேரும், மகிழ்வார்கள்.
நன்றி, தொடருங்கள்.