பால் வார்த்தது.
நண்பர்களே,
தற்போதுள்ள சூழலில் நாட்டின் அனைத்து பகுதிகளிலும் மக்கள் படும் பாடுகளை நினைக்கும்போது மனது படும் பாடு சொல்லில் அடங்காது.
அதிலும் நமக்கு தெரிந்தவர்கள் நம்மை விட்டு போய்விட்டார்களே என்ற செய்திகள் வரும்போது வேதனை கூடுவது இயற்கையே.
இப்போதிருக்கும் சூழலில் இறந்தவர்களை பார்க்கவோ அவர்களுக்கான இறுதி மரியாதையை முறையாக செய்யவோ இறந்தவரின் குடும்ப மக்களுக்கும் உறவுகளுக்கும் ஆறுதல் சொல்லவும்கூட அனுமதியோ , சந்தர்ப்பமோ வசதியோ, பாதுகாப்போ இல்லாதபோது அவரவர் இருக்குமிடத்திலிருந்துகொண்டே அஞ்சலி செலுத்தும் இந்த இக்காட்டான சூழ்நிலையை நினைக்கும்போது கண்ணீரும் வற்றிப்போய்விடுகிறது.
அப்படி நண்பர்களுக்கோ உறவினர்களுக்கு விபரீதம் ஏற்பட்டதை நாம் யார் மூலமாகவோ அறிந்து நமது வேதனையை அஞ்சலியை தற்போதுள்ள நவீன தொலை தொடர்பு சாதனங்கள் மூலமும், சமூக வலை தளங்கள் மூலம் பகிர்ந்துகொண்டு சற்றேனும் ஆறுதல் அடைகின்றோம்.
தகவலை அனுப்பியவர்களுக்கு இந்த நேரத்தில் நன்றி சொல்ல கடமை பட்டிருக்கின்றோம். இப்போதிருக்கும் இந்த இருளான கால கட்டத்தில் எவர் சொன்னாலும் அதை உண்மை என்றே நம்ப வேண்டியபடி நாட்டு நடப்புகளும் உள்ளன.
அதே சமயத்தில், உண்மை நிலை அறியாமல், யாரோ சொன்னதாக இதுபோன்ற சில தகவல்களை அனுப்புவதும் ஆங்காங்கே நிகழ்ந்துகொண்டுதான் இருக்கின்றது.
நேற்று காலை எனக்கு வந்த ஒரு செய்தி: "என்னுடைய பள்ளி தலைமை ஆசிரியர்(ஓய்வு) கடுமையாக பாதிக்கப்பட்டு மருத்துவ மனையில் இருக்கின்றார் அவர் நலம் பெற வேண்டிக்கொள்ளுங்கள் என்ற செய்தியோடு அவரது புகைப்படமும் சேர்த்து அனுப்பப்பட்டது.
உடனே எனது சக மாணவர்கள் குழுவின் வாட்ஸ் ஆப் தளத்தில் அவரை குறித்த எனது ஞாபக பதிவுகளை குறிப்பிட்டு அவர் நலம் பெற வேண்டிய செய்தி சொன்னதோடு ஓரிரு நண்பர்களையும் அழைத்து பேசி அவருக்காக நாம் இறைவனிடம் வேண்டிக்கொள்ளவேண்டும் என்று பேசிக்கொண்டிருந்தேன்.
அதை தொடர்ந்து , இன்று காலை, அவர் இறைவனடி சேர்ந்துவிட்டார் என்ற இரங்கல் செய்தி கிடைத்து, மிகவும் மன வேதனையுடன் அவரது ஆன்மா சாந்தி அடைய வேண்டுவதாக செய்தி அனுப்பிய பின்னர், நண்பர்களை அழைத்து பேசி எங்களுக்குள் ஆறுதல் அடைய முயன்றபோதுதான் தெரிந்தது, இன்று வந்தது தவறான செய்தி என்று.
உடனே எனது இரங்கல் செய்தியை நீக்கிவிட்டு சம்பந்தபட்டவரின் நெருக்கமான உதவியாளரை தொடர்புகொண்டு அவர் நலமுடன் இருக்கின்றார் என்ற மனதில் பால்வார்த்த அந்த "ஆக்சிஜன்" செய்தி அறிந்து உள்ளம் மகிழ்ந்தோம்.
தகவலை உறுதி செய்யாமல் தயவாக நமக்கு வந்த செய்தியை உடனே அடுத்தவர்களுக்கு பகிர்வதை தவிர்ப்பது நல்லது என்தை எத்தனை பேர் உணர்வார்கள் என தெரியவில்லை.
என் தலைமை ஆசிரியர் ஒரு துறவி என்பதால் அவருக்கு ரத்த சம்பந்தமான குடும்பம் இல்லையே தவிர அவரிடம் படித்த என்போன்ற லட்சம் மாணவர்களின் குடும்பங்களும் அவரின் குடும்பங்களே, தவறான செய்தி கேட்ட எங்களின் மன வேதனையை எதனால் அளப்பது?
எங்கள் தலைமை ஆசிரியர் அவர்கள் பூரண நலம் பெற்று தமது ஓய்வு காலத்தை மகிழ்வுடன் கொண்டாட என்னோடு சேர்ந்து நீங்களும் அவருக்காக வேண்டிக்கொள்ளுங்கள் அவரை வாழ்த்துங்கள்.
நன்றி.
மீண்டும் ச(சி)ந்திப்போம்
கோ.
எப்படி இப்படி தவறான செய்திகளை அனுப்புகிறார்கள்? தவறு இல்லையா? எப்படியோ அவர் நலமுடன் இருக்கிறார் என்பது மகிழ்வான செய்தி. அவர் நலடைந்துவிடுவார் கோ!
பதிலளிநீக்குஇப்போதைய சூழல் மிக மிக டல்லாக இருக்கிறது மனதில் உற்சாகமே இல்லை.
கீதா
என்ன சொல்வது... எதையாவது செய்ய வேண்டி மனம் பரபரத்துக்கொண்டிருக்க இதையாவது செய்வோமே என ஆராயாமல், யோசிக்காமல் இதுபோன்று செய்துவிடுகின்றனர். அவர் நலமுடன் இருக்கும் செய்திகேட்டு சந்தோஷமே.
நீக்குஆமாம் இந்த கால சூழலில் மனம் டல்லாகத்தான் இருக்கின்றது... காலம் ஒரு நாள் மாறும் என்ற நம்பிக்கை துளிர்க்கும்.
வருகைக்கும் தங்கள் கருத்திற்கும் மிக்க நன்றிகள் அன்பிற்கினிய அம்மையீர்.
தவறான தகவல்கள் தவிர்க்கப்பட வேண்டும். ஏன் வதந்தியைப் பரப்புகிறார்களோ... அவருக்கு திருஷ்டி கழிந்தது என்று வைத்துக்கொள்வோம்.
பதிலளிநீக்குநேற்று எனக்கு வந்த செய்தி... எனது ஐந்தாம் வகுப்பு ஆசிரியர் மரணம் முடிந்த தகவல். இத்தனை நாட்கள் அவர் அத்ரி வேறு செய்தி எதுவும் வராமல் இதுமட்டும் வருவதும் வேதனைக்குரியது.
வதந்தி என்று தெரிந்தும் வேண்டுமென்றே செய்தால் அது வேதனைக்குரியது.
நீக்குதாங்கள் சொல்வதுபோல் திருஷ்டி கழிந்தது என்று நினைத்து சந்தோஷ பட்டுக்கொள்ளவேண்டியதுதான்.
வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றிகள் திரு ஸ்ரீராம்.
தவறான செய்திகளை தொடர்ந்து அனுப்பும் குழுக்களையும், நபர்களையும் நினைத்தாலே வெறுப்பு தான் வருகிறது.
பதிலளிநீக்குஎல்லோரும் நலமாக இருக்க பிரார்த்தனைகள்.
வேதனைக்குரியதே, பிரார்த்திப்போம்.
பதிலளிநீக்குவருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றிகள் வெங்கட்.
சமூக வலைதளங்கள் மற்றும் வாட்சஸப்பில் வரும் செய்திகளை உடனே மெய்யென நம்பி ஃபார்வர்ட் செய்வதை நாம் தவிர்க்க வேண்டும்.உணர்ச்சிவயப்பட்டு செயல்படாமல் இருக்க நம்மை பழக்கப்படுத்திக்கொள்ள வேண்டும்
பதிலளிநீக்குசமூக வலைதளங்கள் மற்றும் வாட்சஸப்பில் வரும் செய்திகளை உடனே மெய்யென நம்பி ஃபார்வர்ட் செய்வதை நாம் தவிர்க்க வேண்டும்.உணர்ச்சிவயப்பட்டு செயல்படாமல் இருக்க நம்மை பழக்கப்படுத்திக்கொள்ள வேண்டும்
பதிலளிநீக்குஇதுபோன்ற தகவல்கள் பரவுவதற்கும் பரப்பப்படுவதற்கும் யோசனை இன்றி உணர்ச்சிவசப்படுதல் ஒரு காரணம்தான். வருகைக்கும் தங்கள் கருத்திற்கும் மிக்க நன்றி முரளி.
நீக்குதகவலை உறுதி செய்யாமல் நமக்கு வந்த செய்தியை உடனே அடுத்தவர்களுக்கு பகிர்வதை தவிர்ப்பது நல்லது
பதிலளிநீக்குஉண்மை
நமக்கு செய்திகளின் தன்மை கருதி, அவற்றின் உண்மை நிலை அறியாமல் உறுதி செய்துகொள்ளாமல் மற்றவர்களுக்கு அனுப்புவது சில தவறான விளைவுகளையும் பாதிப்புக்களையும் ஏற்படுத்தும்தான். வருகைக்கும் தங்கள் கருத்திற்கும் மிக்க நன்றி திரு கரந்தையாரே.
நீக்குபீதியை கிளப்பவே சிலர் உள்ளனர்... ம்...
பதிலளிநீக்குவரும் செய்தி எதுவானாலும் மற்றவர்களுக்கு அப்படியே அனுப்பும் ஒரு சிலர் இருக்க இதுபோன்ற எதிர்மறை செய்திகளை மட்டும் துரிதமாக அனுப்பும் ஒருசிலர் இருக்கின்றனரோ எனும் சந்தேகம் வலுக்கிறது.
நீக்குஅப்படி ஒருவர் அனுப்பிய செய்தி பின்னாளில் தவறான செய்தி என்று அறிந்தபின்னர் இனி அந்த நபர் அனுப்பும் எந்த செய்தியையும் மற்றவர்களுக்கு அனுப்புமுன் சரிபார்த்துக்கொள்வது அவசியமே.
யாரையும் பாதிக்காத பொதுவான செய்தி என்றால் அதை படித்ததோடு அப்படியே விட்டுவிடுவதும் பாதகமான செய்தியென்றால் பலருக்கு உபயோகமாக இருக்குமென்றால் உண்மை நிலை அறியாமல் பகிருவதையும் தவிர்ப்பது நல்லதுதான்.
வருகைக்கும் தங்கள் கருத்திற்கும் மிக்க நன்றி தனபால்.