அவசியம் தேவை.
நண்பர்களே,
சுமார் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் உலகின் ஏதோ(??) ஒரு மூலையில் ஆரம்பித்து கசிந்து- நகர்ந்து பின்னர் உலகின் மூலை முடுக்குகளிலெல்லாம் வியாபித்து கோலோச்சிக்கொண்டிருக்கும் இந்த கோவிட் எனும் கொடிய கிருமி யின் கோர தாண்டவத்தின் ஆட்டம் நாளுக்கு நாள் தீவிரமடைவதை நினைக்கையில் மனபாரமும் வேதனையும் அதிகரிக்கின்றது.
ஆரம்பகாலத்தில் உருவான இந்த கிருமி சில மாதங்கள் கழித்து வேறோர் சீற்றத்தோடு உருமாறி வந்ததாக அறிவிக்கப்பட்டபோது அதன் பாதிப்பு உலகத்தின் சில நாடுகளை தாக்கியது.
பின்னர் மேலும் அது உருமாற்றிக்கொண்டு அதி தீவிரமாக பரவ ஆரம்பித்தது. இதுபோன்ற உருமாற்றங்கள் முதன் முதலில் எந்த பகுதியில் அல்லது நாட்டில் கண்டறியபடுகிறதோ அதற்கேற்றபடி அந்ததந்த பிராந்தியங்களின் பெயராலேயே அந்த உருமாறிய தொற்று அழைக்கப்படுகிறது.
கடந்த ஜனவரியில் இங்கிலாந்திலுள்ள கென்ட் எனும் பகுதியில் கண்டறியப்பட்ட ஒரு உருமாறிய கிருமிக்கு கென்ட் வேரியன்ட் என்று பெயர்வைக்கப்பட்டது. இதன் தாக்கம் ஆரம்பகால கிருமியின் தாக்கத்தைவிட பல மடங்கு வேகமாக பரவக்கூடியது எனும் தகவலும் வேகமாக பரவியது.
அதற்கடுத்து இரண்டாம் அலையாக இந்தியாவில் கண்டறியப்பட்டு இப்போது நமது மக்களை பாடாய் படுத்திக்கொண்டிருக்கும் இந்த பரவலுக்கு இந்தியன் வேரியன்ட் என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த உருமாறிய கிருமி கென்ட் வேரியன்ட்டை விட 60% வேகமாக பரவக்கூடியதாகவும் இது இந்தியாவில் மட்டுமின்றி இங்கிலாந்திலும் பரவி வருவதாகவும் பரவலான தகவல் பரவிவருகிறது.
இந்த உருமாறிய தொற்றின் விளைவாக உருமாறிப்போன குடும்பங்கள் சொந்ங்கள் வாழ்வாதாரங்கள் வார்த்தையில் அடங்கா.
இன்றுகூட என் பள்ளித்தோழன் இந்த இரண்டாம் அலையின் சீற்றத்தால் உயிரிழந்த செய்திகேட்டு என் மற்ற நண்பர்களோடு நானும் துக்கித்திருக்கும் இந்த வேளையில் என் மனதில் தோன்றிய விடயம்:
இந்த கோவிட் எத்தனை உருமாற்றங்களை வேண்டுமானாலும் அடைந்துகொள்ளட்டும், அதே சமயத்தில் , நமது கல்வி, செல்வம், ஆஸ்த்தி அந்தஸ்த்து,புகழ் போன்ற எல்லாவற்றையும்விட நமது உயிரும் நமது சொந்தங்களின் உயிர்களும் மிக மிக முக்கியம் எனவே உரிய பாதுகாப்புடனும் அரசு உத்தரவுகளுக்கு செவிசாய்த்தும் வீட்டிற்குள்ளேயே அடங்கி இருக்கவேண்டும் அல்லது சமூக இடைவெளி, பாதுகாப்பு முக கவசம் போன்றவற்றை கடைப்பிடித்து பெருந்தொற்றின் சங்கிலி தொடரை உடைத்தெறிவோம் என்ற பாதுகாப்பு நிலைக்கு நம் மனம் உருமாறவேண்டும் என்பதே.
அப்படி நம் மனதின் சிந்தனை ஓட்டத்தின் உருமாறும் பட்ச்சத்தில் இந்த கோவிடின் எந்த உருமாற்றமும் நம்மை அணுகாமல் நம்மை காத்துக்கொள்ளமுடியும் என்ற நம்பிக்கையோடும் இன்று அமரராகிப்போன எங்களின் பள்ளிதோழர் - எங்களின் இனிய நண்பர் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தியும் இந்த பதிவை நிறைவு செய்கிறேன்.
நன்றி.
மீண்டும் ச(சி)ந்திப்போம்
கோ
ஆழ்ந்த இரங்கல்கள்...
பதிலளிநீக்குவருகைக்கு மிக்க நன்றிகள் தனபால்.
நீக்குஉண்மை
பதிலளிநீக்குபாதுகாப்பு என்ற நிலைக்கு நாம் மாறினால்தான் இதனை ஒழிக்கலாம்
வருகைக்கும் தங்கள் கருத்திற்கும் மிக்க நன்றி திரு கரந்தையாரே.
நீக்குசாலையில் நாம் ஒழுங்காய் வண்டியோட்டினால் மட்டும் போதாது. நமக்கு முன்னால் பின்னால் வருபவர்களும் ஒழுங்காய் ஓட்டவேண்டும். அதுபோலதான் மக்கள். நாம் எவ்வளவு ஒழுங்காய் இருந்தாலும், நோய்த்தொற்றோடேயே வெளியே வந்து நம்மிடமே பேசிக் செல்கிறார்கள். என்ன சொல்ல...
பதிலளிநீக்குஇந்தத்தொற்றிலிருந்து இந்த உல்கம் விடுதலையாவது எப்போது என்று எண்ணிப் பிரார்த்திக்கதான் முடியும். உங்கள் நண்பருக்கு ஆழ்ந்த இரங்கல்கள். இப்படி எத்தனையோ இழப்புகள். ஒவ்வொருவருக்கும்.
பதிலளிநீக்குதுளசிதரன்
இது ரொம்பவே மாறு வேஷம் எல்லாம் போட்டுக் கொண்டு கண்ணுக்கும் தெரியாமல் அடித்து ஆடுகிறது. கேட்கும் செய்திகளும் துன்பகரமாக இருக்கிறது.
பதிலளிநீக்குமனிதனின் சுயநலத்தால் விளைந்தது என்பதால் இறைவனும் உன் தவறை நீதான் அனுபவிக்க வேண்டும் என்று நினைக்கிறார் போலும்..
உங்கள் நண்பரின் ஆன்மா சாந்தியடைய பிரார்த்தனைகள்.
கீதா
மாறிமாறி வேஷம் போட்டு மக்களை அலைக்கழிக்கும் இந்த கண்ணுக்கு தெரியாத விஷமி விரைவில் தடம் மாறி தடுமாறி விழும் என்று நம்புவோம். வருகைக்கும் தங்கள் கருத்திற்கும், தங்கள் இரங்களுக்கும், பிரார்த்தனைகளும் மிக்க நன்றிகள் அன்பிற்கினிய கீதா அம்மையீர்.
நீக்குஉங்கள் நண்பரின் ஆன்மா சாந்தியடைய பிரார்த்தனைகள்.
பதிலளிநீக்குஅனைவரும் கவனமாக இருக்க வேண்டிய நேரம். இந்த நேரத்திலாவது அனைவரும் ஒன்றுபட்டு பிரச்சனையிலிருந்து விடுபடத் தேவையான அனைத்தையும் செய்ய வேண்டும். அதை விடுத்து பாதுகாப்பு அம்சங்கள் எதையும் கடை பிடிக்காமல் சுய லாபத்திற்காக எதையும் செய்கிறார்கள் என்பது வேதனை.
வருகைக்கும் தங்கள் ககரிசனைக்கும் மிக்க நன்றிகள் வெங்கட்.
நீக்கு