பின்பற்றுபவர்கள்

வியாழன், 13 மே, 2021

என்ன சார்?

சவுக்கியமா சார்?
நண்பர்களே,   

கொங்குதேரில்  பயணித்து தும்பியின் வாலை  தேடி அலைந்து  பின்னர் கூரிய  நெற்றிக்கண் திறக்கப்பட்டும் தாம்  கூறிய கருத்தில் பிழைகாணபட்டதுபோல் தூரத்தில் வசிக்கும் நண்பர் ஒருவர் சமீபத்தில் எழுப்பிய ஒரு சந்தேக கேள்விக்கான விடைகாணும் முயற்சியே இந்த பதிவின் பிரசவ காரணம்.

பரிபாஷையும்  உடல்பாஷையும்  மட்டுமே உலா வந்த காலம் கடந்து  நாகரீகம் மெல்ல மெல்ல வளர  உலகில் மனிதருள் ஒருவருக்கொருவர் தங்களை அடையாளப்படுத்திக்கொள்ள  அல்லது வேறுபடுத்திக்கொள்ள எத்தனையோ விதமான வழக்கங்கள்  பரிணாம பாதையில் பயணப்பட்டு வந்தாலும்   அவை அத்தனையிலும் பிரதானமான - பிரபலமான  ஒன்றுதான் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பெயர் வைத்து அழைப்பது.

அதே பெயரை அடுத்தடுத்த நாகரீக மெருகேற்றலின் காரணாமாக சில அடை  மொழிகளோடு சேர்த்து பெயர்கள் அழைக்கப்படுவதும்  நிகழ்ந்து கொண்டிருக்கின்றது.

இதில், செல்வம்,  வீரம்,  கொடை , படிப்பு , தொழில், ஆளுமை, தலைமை பண்பு ....போன்ற எண்ணற்ற தன்மைகளுக்கேற்ப அந்தந்த அடை  மொழிகளோடு அழைக்கப்படுகின்றனர்.  (என் நண்பருக்கும் ஒரு அடை மொழி- சிறப்பு பெயர் உண்டு அவர் வாழும் ஊர் பெயரின் ஓசையில் அந்த ஊர் பெயர் பாண்டி.)

இப்படி எத்தனை வித்தியாசங்கள் இருந்தாலும், பெயர் தெரியாமலேயே அல்லது பெயரை சொல்லாமலேயே    பொதுவாக எல்லோரையும் எந்த வேறுபாடுமின்றி கண்ணியமாக - கவுரவமாக - மதிப்புடன்-  அழைக்க பயன்   படுத்தும் ஒரு அடை  மொழி "சார்"(sir).

இப்படி யாரையும் (யாரும்) அழைக்கபடுவதற்கு இங்கிலாந்து அரச  குடும்பத்தின்  ராஜ முத்திரையோடு  கூடிய அங்கீகார  பட்டயம் பெற  வேண்டியது அவசியமில்லை. 

சமூகத்தின் கடை நிலை அந்தஸ்துள்ளவர்கள்  துவங்கி,   உலக நாடுகளின் உச்சாணி உயரத்தில் உலாவரும் எவரையும் ஒற்றை சொல்லால் அழைக்க  முடியும்  அந்த ஒற்றை சொல்  "சார்".

பேருந்து  நெருக்கத்தில் பயணம் செய்யும்போது நமக்கு      அருகில் இருப்பவரை சற்று தள்ளி நிற்க சொல்லும்போதும் , சாலையில் யாரிடமாவது மணி என்ன என்று கேட்க்கும்போதும் , ஆசிரியர்கள், வழக்கறிஞர்கள், காவலர்கள் போன்று எவரையும் இன்னும் சொல்லப்போனால் வறுமை முற்றி அடுத்தவரிடம்   கையேந்தி  யாசகம் கேட்கும் வறியவரையும் இந்த சொல்லாலால் அழைப்பதுவும் உலகில் எதார்த்த நடைமுறை.

அப்படி இருக்க நண்பரின் சந்தேகம், இந்த sir  என்பதன் நீட்சி , S(lave) I  R(emain) அதாவது "இதோ உங்களின் அடிமையாக இருக்கிறேன்". இன்னும் சொல்லப்போனால் ,தமிழ் படங்களில்  முகத்தில்  மரு வைத்துக்கொண்டு, மீசைய முறுக்கிக்கொண்டு,லுங்கி கட்டிக்கொண்டு ,    நம்பியார், "டேய்  கபாலி  சொன்னவுடனே,  குனிஞ்சி சொல்லுங்க எஜமான்" அப்படினு சொல்றமாதிரியான  -  ஆங்கிலேயர் நம்மை ஆண்டபோது இந்தியர்கள் ஆங்கிலேய  அதிகாரிகளை இப்படித்தான் சார் என்று  அழைக்கவேண்டுமென்று பழக்கிவிட்ட அடிமை பிரகடனம்தானே என்பது அவரது சந்தேகம்.

ஆனால் உண்மை அதுவல்ல.

கி பி  1000 க்கும் கி பி 1250 க்கும் இடைப்பட்ட high middle age அல்லது high medieval  காலம் என்றழைக்கப்பட்ட கால கட்டத்தில், பலர் செய்வதைக்காட்டிலும் சிறப்பாக சேவை செய்த ஆண்களை   கவுரவிக்கும் பொருட்டு வழங்கப்பட்ட ஒரு பட்டம் Sire , இதுவே நாளடைவில்  சுருக்கமாக Sir என்று வழங்கப்படுகிறது.

Sire என்பது அரசாளும் அரசர்களை குறிக்கும் ஒரு கவுரவ சொல்லாக  கருத்தப்பட்டதாகவும் இத்தாலியின் கிளை மொழியும் இந்தோ-ஐரோப்பிய மொழியுமான   லத்தின் மொழியின் வார்த்தையான senior எனும் மூல  வார்த்தையின் திரிபு தான் இந்த  sir   என்பதாக கூகிள் ஆண்டவனின் நெற்றிக்கண்  wikipedia மூலம் கண்டறியப்படும் செய்தி.

இப்படி இருக்க 18ஆம் நூற்ராண்டின் பிற்பகுதியில் இந்தியாவில் தமது ராஜ்ஜியத்தை   நிறுவிய ஆங்கிலேயர், இந்தியர்கள்  தங்களை அடிமைகளாகவே பாவிக்கவேண்டும் என்ற அடிப்படையில்  இந்த "சார்" எனும் பதத்தை  பழக்கிவிட்டதாக கருதப்படுவது  ஏற்புடையது அல்ல என்பது என்னுடைய தாழ்மையான கருத்து.

ஆண்களை கவுரவிக்கும் பதமாக  எப்படி இந்த sir இருக்கின்றதோ அதேபோல பெண்களை கவுரவிக்க பாவிக்கும் பதம்தான் Madam ,  சுருக்கமாக "Ma'am".  இந்த மேடம் எனும்  வார்த்தையை கூறுபோட்டு  வேறு அர்த்தங்கள் கணிக்க  முயலவேண்டும்.

நாம் ஒருவரை சார் (Sir) என்று  அழைப்பதால் அவருக்கு நாம் அடிமை   என்பதாக அங்கீகரிக்கிறோம் என்பது சரியல்ல.

வெறுமனே  பெயர் சொல்லி அழைப்பது சரியா?  இதுவும் என் நண்பரின் சந்தேகமே.

அதே சமயத்தில் எவரையும் யாரும் அவர்களது பெயர்களை  சொல்லி அழைக்கலாம் என்பதும்  மேற்கத்திய நாடுகளின் நடைமுறை, பெயர் வைப்பதே அதற்காகத்தானே?

இங்கே எத்தனை பெரிய மேலதிகாரியானாலும் அவரை  பணியாளர்கள் பெயர் சொல்லித்தான் அழைப்பார்கள், யோசித்து பாருங்கள்   நம்ம ஊரில் நம்மைவிட வயதில் சிறியவர் நம்மை பெயர் சொல்லி அழைத்தால் எப்படி இருக்கும். அல்லது நம் அப்பாவை நம்மைவிட  சிறிய வயதுள்ளவர் யாரேனும் பெயர் சொல்லி அழைத்தால் ..... ??

அதற்காகத்தான் இப்போது பொதுவாக எல்லோரும் இந்த சார் எனும் பதத்தை பரவலாக பயன் படுத்துகிறார்கள் உள்ளர்த்தம் ஏதுமின்றி.

என்ன நண்பர் சார் நான்  சொல்வது சரிதானே?

நன்றி,

மீண்டும் ச(சி)ந்திப்போம் 

கோ.

12 கருத்துகள்:

  1. சார் குறித்து முன்பு எங்கோ வாசித்த நினைவு. நல்ல தகவல்கள் கோ!

    துளசிதரன்

    கீதா

    பதிலளிநீக்கு
  2. சார் குறித்து முன்பு எங்கோ வாசித்த நினைவு. நல்ல தகவல்கள் கோ!

    துளசிதரன்

    கீதா

    பதிலளிநீக்கு
  3. சரிதான் சார்!

    'ஸர்" என்றொரு பட்டமும் உண்டு.  டொனால்டு ப்ராட்மேன் உள்ளிட்ட நிறைய பேருக்கு வழங்கப்பட்டிருப்பது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கு மிக்க நன்றிகள் திரு ஸ்ரீராம். ஸர் பட்டங்கள் குறித்தும் விரிவாக எழுத நினைத்தேன் ,பதிவின் நீளம் கருதி லேசாக தொட்டுவிட்டு - விட்டு விட்டேன்.

      நீக்கு
  4. நல்லதொரு அலசல் சார். :) பெரும்பாலும் வட இந்தியர்கள் இந்த பதம் பயன்படுத்துவது குறைவு - எல்லோரும் ஜி தான் பயன்படுத்துகிறார்கள். தமிழகத்திலும் இப்போது இந்த ஜி பயன்பாடு அதிகரித்து இருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் தங்கள் கருத்திற்கும் மிக்க நன்றிகள் வெங்கட்.

      பள்ளிக்கூடத்து நாட்களில் எங்கள் ஹிந்தி பண்டிட் அவர்களை "ஜீ சார்" என்றுதான் அழைப்போம். தமிழில் "ஜீ வாத்தியார்".

      நீக்கு
  5. வருகைக்கும் தங்கள் அங்கிகாரத்திற்கும் மிக்க நன்றிகள் திரு கரந்தையாரே.

    பதிலளிநீக்கு