பின்பற்றுபவர்கள்

வியாழன், 22 ஏப்ரல், 2021

லபக்குதாஸ்!

லார்டோடு !!

நண்பர்களே,

சில தினங்களுக்கு முன் நடிகரும் சமூக ஆர்வலருமான நம் அபிமானத்திற்குரிய திரு.விவேக் அவகர்களின் திடீர் மறைவு நம் அனைவரையும் ஆற்றொன்னா  துயரத்தில் ஆழ்த்தியது.

என்று? எப்படி?எதனால்? யாருக்கு   என அறுதியிட்டு அறிந்துகொள்ள முடியாத குணாதிசயம்தான் மரணத்தின் மறுபக்கம்.

ஒற்றை கால் தவம்போல குளக்கரையில் காத்திருக்கும் கொக்கு உறுமீன் வரும்போது அதனை "லபக்"கென்று பிடித்து விழுங்குவதுபோல தமக்கு வேண்டும் எவரையும் லபக்கென்று கவ்வி விழுங்கி மகிழும் வினோத குணம்கொண்ட விந்தை பாத்திரம்தான் மரணமெனும் மாயாவி லபக்குதாஸ்..

இதற்கென்று தம்மை தயார்படுத்தி காத்திருப்போரும் ஆங்காங்கே இருக்கத்தான் செய்கின்றனர்; எனினும் இந்த மாயாவியின் வருகையை கூடுமான வரை தள்ளிப்போட அல்லது அதைப்பற்றிய சிந்தனைகூட நம்மை அணுகாமல் பார்த்துக்கொள்வதுதான்  பெரும்பான்மையானவர்கள் செய்யும் அனிச்சை செயல்.

அப்படி காலன்  கொண்டு செல்லும் மக்களை துரதிர்ஷ்டசாலிகள் என்றும் கொடுத்துவைக்காதவர் என்றும் கூறுவதை கேட்டிருப்போம்  ஆனால் வேறு சிலரோ  கொடுத்துவைத்தவர் நிம்மதியாக போய்விட்டார் என சொல்வதையும் கேட்டிருப்போம்.

அப்படியானால்  மரணிப்பவர்கள் கொடுத்து வைத்தவர்களா அல்லது கொடுத்து வைக்காதவர்களா?

உண்மையிலே இந்த உலக வாழ்க்கை என்பது ஒரு நுழைவு தேர்வு  மையம்தான், இங்கே கிடைக்கும் அனுபவம், நம் சிந்தை செயல் அனைத்தும் துல்லியமாக மதிப்பீடு செய்யப்படுகின்றது.

பரீட்சை எழுதி  முடிந்தபின்னர் விடைத்தாள்களை உரியவரிடம் ஒப்படைப்பதுபோல  அவரவர்  அனுபவம், சொல், சிந்தனை, செயல் நிறைந்த தமது ஜீவனை உரியவரிடம் ஒப்படைப்பதே இந்த மரணத்தின் தாற்பரியம் என நான் நினைக்கின்றேன்.

ஒரு சிலர் பரீட்சை நேரம் முடியும் வரை விடை எழுதிக்கொண்டிருப்பர் சிலரோ முன்னதாகவே அனைத்து கேள்விகளுக்கும் தெளிவான விடை எழுதி தேர்வு மையத்தில் இருந்து வெளியேறிவிடுவார்.

உடன் இருப்பவர்கள் என்ன இத்தனை சீக்கிரம் சென்றுவிட்டார் என நினைக்கத்தோன்றும்.

எப்படியும் பரீட்சை முடிய சில மணி துளிகள் இருக்கும்போது எச்சரிக்கை மணி அடிக்கப்படும் அப்போது நமது விடைகள் சரிதானா, விடைத்தாள்  நேர்த்தியாக உள்ளதா என சரிபார்த்து பின்னர் நேரம் முடிந்ததற்கான மணி அடித்தவுடன் மற்றவர்களும் விடை தாளை ஒப்படைத்துவிட்டு வெளியேறியே  ஆகவேண்டும், எவருக்கும் கூடுதல் நேரம் கொடுக்கப்படமாட்டாது என்பது திண்ணம்.

இத்தனை இளவயதிலா... எனும் ஆதங்க பெருமூச்சிகள் மாயாவியின் மர்ம காதுகளுக்கு ஒருபோதும் கேட்பதில்லை.

மறைந்தவர்களை போற்றும் வண்ணம் அவர்கள்  விட்டு சென்ற நல்ல குணங்களையும் செயல்களையும் நினைவுகூர்ந்து முடிந்தால் அவரது சேவைகளை தொடர்வதன்மூலம் பரீட்சை எழுதிக்கொண்டிருப்பவர்கள் தங்கள் விடைத்தாள்களை இன்னும் கூட மெருகேற்றி , மறுமையின் மகிமையான கிரீடத்தை பெற்றுக்கொள்ள தங்களது ஜீவனை தயாற்படுத்திக்கொள்ளலாம்.

அவ்வகையில் திருமிகு அமரர். பத்மஸ்ரீ - டாக்டர் விவேக் அவர்களின்   நற்குணங்கள், நற்செயல்களை கூடுமான வரை கடை பிடித்தும் செயல்படுத்தியும் அவருக்கு புகழஞ்சலி செலுத்தலாம்.

மரம் நடுவதுமட்டுமல்ல ஏற்கனவே எவராலோ நடப்பட்ட மரங்களை வெட்டாமல் பாதுகாப்பதுகூட ஒரு உன்னத செயலே.

தம் ஜீவனை  லபக்கென்று பிடித்து ஜீவனுக்கு சொந்தக்காரரான lord இடம்  கொண்டுசெல்லப்பட்டு லார்டோடு வாசம் செய்யும்  நமது அன்பிற்குரிய விவேக் அவர்களின்  பல நகைசுவைகளுள் பிரதானமாக நான் மிகவும்  ரசித்தது , பிரமாதமான  "லார்ட் லபக் தாஸ்"  நகை சுவை..

இனியும்  மக்களை மகிழ்விக்கும் அவரது  செய்தி, காட்சி படங்கள் மக்கள் மத்தியில் உலவி சிறக்கும் என்பதில் ஐயமில்லை.

வாசகர்களாகிய உங்களுக்கு பிடித்த அவரது நகைசுவைகள் ஏதேனும் நினைவுகூர்ந்தால்  இங்கே தெரிவித்து அவருக்கு அஞ்சலி செலுத்தலாம்.

அன்னாரது குடும்பத்தாருக்கு  எனது ஆழ்ந்த இரங்கல்.

நன்றி. 

மீண்டும் ச(சி)ந்திப்போம் 

கோ 


8 கருத்துகள்:

  1. 1000 பெரியார் வந்தாலும் உங்களை எல்லாம் திருத்த முடியாதுடா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்

    1. இதை ஆயிரம் முறை சொன்னாலும் யாரும் திருந்த மாட்டார்கள் போலிருக்கின்றது.வருகைக்கும் நினைவு பகிர்விற்கு மிக்க நன்றி தனபால்.

      நீக்கு
  2. விவேக் அவர்களின் நற்செயல்கள் நாம் அணைவரும் பின்பற்றவேண்டியவை.
    எனக்கு அவர் காதல் சடுகுடுவில் செய்த கள்ளிப்பால் சம்பவம் தொடர்பான நகைச்சுவை மறக்க முடியாதது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நானும் ரசித்திருக்கிறேன் அந்த காமடி கலந்த சமூக பார்வையை. வருகைக்கு மிக்க நன்றி அரவிந்த்.

      நீக்கு
  3. நீங்க வெறும் தாஸா இல்லை லார்டு லபக்குதாஸா என்ற அவரது நகைச்சுவை எனக்கும் பிடித்தமானது. அவர் மறைந்தாலும், அவரது நகைச்சுவை மறக்காது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அந்த லபக்குதாஸ் காமெடியை எப்போதும் சிறப்புதான் -மறக்காது.. வருகைக்கும் தங்கள் நினைவு கூரலுக்கும் மிக்க நன்றி வெங்கட்.

      நீக்கு
  4. நகைச்சுவை வழியாக பல பாடங்களைத் தந்துவிட்டுச் சென்றுள்ளார்.

    பதிலளிநீக்கு