பின்பற்றுபவர்கள்

திங்கள், 19 ஏப்ரல், 2021

பிறந்த நாள் கொண்டாட்டங்கள்!


அவசியம்(தானா?)

நண்பர்களே,

பள்ளி பருவம்வரை பிள்ளைகளின் பிறந்தநாட்களை சிறப்புடனும் மகிழ்வுடனும் , சுற்றமும் நட்பும் கூடி தங்களால் தங்கள்  திராணிக்கு தகுந்த   அளவிற்கு விருந்து வைத்து கொண்டாடி ஆசீர்வாத வாழ்த்துக்கள் சொல்லி பரிசுப்பொருட்கள் கொடுப்பது சந்தோஷமான செயல்தான். .

பெற்றோரும் குடும்பத்தாரும் அந்த பிள்ளைகளை மகிழ்விப்பதும் பிள்ளையை கொடுத்து இந்நாள் வரை சுக பெலன் ஜீவன் ஈந்து காத்துவரும் இறைவனுக்கு நன்றிகூறியும் இனிவரும் காலம் முழுவதும் பிள்ளைகளுக்கு நன்மைகள் தவிர வேறேதும் வரக்கூடாது என்று இறைவனை வேண்டுவதும்   ஏற்புடையதுதான்.

எனினும் இது அனைத்து பெற்றோருக்கும் சாத்தியமா என்பது கேள்விக்குறி.

அதுவே நாளாக நாளாக பிள்ளைகள்  பெரியவர்களாகி கல்லூரி வயதில் வீட்டில் வைத்து பிறந்த  நாட்களை கொண்டாடுவது அவ்வளவாக காணாமல் போய்விட்டது. எனினும் தமது கல்லூரி நண்பர்களோடு சேர்ந்து வெளியில் கேக் வெட்டி, உணவு விடுதியில் சாப்பிட்டு திரை அரங்கு சென்று படம் பார்த்து   தமது பிறந்த நாளை கொண்டாடும் பிள்ளைகளும் இருக்கத்தான் செய்கின்றனர்; ஆடம்பரம் இல்லாமல் எளிய வகையில் பெற்றோர் கொடுக்கும் சிறு தொகைக்குள்ளாக கொண்டாடி மகிழ்வதும்  ஏற்புடையதுதான்.

அப்படியே வேலையில் அமர்ந்தபின்னர், ஒருவேளை உடன் வேலை செய்பவர்களுக்கு தமது பிறந்த நாள் தெரிந்து அவர்களது வற்புறுத்தல் அல்லது வேண்டுகோளுக்கிணங்க  அலுவலகத்திலேயோ  அல்லது அலுவலகத்திற்கு வெளியிலேயோ , ஒரு சிறிய அளவில் தேநீர் விருந்து ஏற்பாடு செய்து தமது பிறந்த நாளை கொண்டாடுவதும் ஏற்புடையதே.

பின்னர் திருமணமானபின் வரும் முதல் பிறந்த நாளை மனைவிக்காக கணவனோ அல்லது கணவனுக்காக மனைவியோ ரகசியமாக ஏற்பாடு செய்த சிறிய அளவிலான கொண்டாட்டமான  இருவரும் காலையில்  (நேரம் இருந்தால்)  கோவிலுக்கு செல்வது, மாலையில் கடற்கரை, அல்லது சினிமா செல்வது, பிறகு   வீட்டில் சமைத்ததைதோ அல்லது ஓட்டலுக்கு சென்றோ சிறப்பான ஒரு உணவு உண்பதோ பிறகு ரகசியமாக வாங்கி வைக்கப்பட்டிருக்கும் பரிசு பொருளை கொடுத்து அசத்துவதும் கூட ஏற்புடையதுதான்.

ஆனால் பெற்றோர்களாகிய பிறகு வரும் தமது பிறந்த நாட்களை ஊர் கூட்டி ஆடம்பரமாக செலவு செய்து அனைத்து நண்பர்கள், உறவினர்கள் உடன் வேலை செய்பவர்கள் பிள்ளைகளின் நண்பர்கள், என அழைத்து விருந்து வைத்து  விழாவினை கொண்டாடுவது என்னை பொறுத்தவரையில் ஏற்புடையதுதானா என தோன்றுகின்றது.

ஒருவேளை, சில சிறப்பு எண்களில் வரும் பிறந்த நாட்களை ஒரு சிலர் சிறப்பாக கொண்டாட நினைக்க தோன்றும். அல்லது பெரும் கஷ்டங்கள், சுகவீனங்களுக்கு பிறகு வரும் முதல் பிறந்தநாளின் மகிழ்ச்சியை மற்றவர்களோடு பகிர்ந்துகொள்ளும் எண்ணத்தோடு கூட கொண்டாட தோன்றும்.

எத்தனை சிறப்பு எண்களாக இருந்தாலும், அன்றைய தினத்தில் மனதார இறைவனுக்கு நன்றி செலுத்திவிட்டு தேவையான ஆசீர்வாதங்களை வேண்டிக்கொண்டு, தமது பெற்றோரை வணங்கிவிட்டு அல்லது அவர்களது படத்திற்கு மாலை அணிவித்து பின்னர்    தம்மால் இயன்ற சில சிறு சிறு உதவிகளை அன்றைய  தினத்தில் ஏழை எளிய- வறியவர்களுக்கு அமைதியான முறையில் செய்வதே சிறந்த பிறந்த நாள் கொண்டாட்டமாக இருக்கும் என்பது  என் தாழ்மையான கருத்து.

வயதான தமது அப்பா அல்லது அம்மாவின் பிறந்த நாளை பிள்ளைகள் அனைவரும் கூடி சிறப்பாக கொண்டாட நினைப்பதும் அதை எளிய முறையில் பெற்றோருக்கு மகிழ்ச்சி ஏற்படுத்தும் விதத்தில் கொண்டாடுவதும் அவர்களுக்கு பிடித்த உணவு பொருட்களை தயாரித்து அவர்களோடு அமர்ந்து உண்டு அவர்களோடு அன்பாக அளவளாவுவதும் ஏற்புடைய சிறப்பு தான்.

இதுபோன்ற சிறப்பு நாட்களை அமைதியாக கடைபிடிப்பதே அதன் மாபெரும் சிறப்பு, அதை விடுத்து, தமது வசதி  - செல்வாக்கினை  உலகறிய செய்யும் நோக்கில் பணத்தை செலவு செய்து உணவு பொருட்களை விரயமாக்கி கொண்டாடப்படும் பிறந்த நாள் கொண்டாட்டங்கள் ஏற்புடையவை அல்ல  என்பதும் எனது தாழ்மையான கருத்து.

ஒருவேளை இந்த பதிவை வாசிக்கும் நமது வாசகர்கள் யாருக்கேனும் இன்று பிறந்தநாள் என்றால் அவர்களுக்கு எனது மனப்பூர்வமான பிறந்த நாள் நல்  வாழ்த்துக்கள்.

இது இன்றைய எனது  மன பக்குவத்தில் எழுந்த  என் சொந்த கருத்து, யாரையும் குறிப்பிட்டோ புண்படுத்தும் எண்ணத்திலேயும் சொல்லப்பட்டதல்ல. கொண்டாட்டங்கள் என்பது அவரவர் விருப்பத்திற்கும் வசதிக்கும் ஏற்ப நடத்தப்படுவதானே.

எது எப்படி இருந்தாலும் இந்த கொரோனா காலத்தில் பாதுகாப்புடனும் அரசு விதிகளுக்கு கட்டுப்பட்டும்  எந்த கொண்டாட்டங்களும் கடைபிடிக்கப்படுவது அனைவருக்கும் ஏற்புடையதே.

நன்றி,

மீண்டும் ச(சி)ந்திப்போம்.

கோ.


10 கருத்துகள்:

  1. மக்கள் உணரவேண்டிய சிந்தனைகள் ஐ.்.ா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் அரவிந்த், வருகைக்கும் தங்கள் கருத்திற்கும் மிக்க நன்றிகள்.

      நீக்கு
  2. பதில்கள்
    1. வருகைக்கும் தங்ககள் கருத்திற்கும் மிக்க நன்றிகள் திரு கரந்தையாரே.

      நீக்கு
  3. சிறப்பான சிந்தனைகள். பலரும் ஒரு விதத்தில் Exhibitionism எண்ணத்திலேயே இருக்கிறார்கள். எண்ணெய் பொறுத்தவரை பல நாட்கள் சாதாரண நாட்களே - அது பிறந்த நாளாக இருந்தாலும் சரி, திருமண நாளாக இருந்தாலும் சரி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வெங்கட், வருகைக்கும் தங்கள் கருத்திற்கும் மிக்க நன்றிகள். வசதிகளை காட்டிக்கொள்வதற்காக வருடத்தில் இருமுறைகூட பிறந்த நாள் கொண்டாடுவார்களோ என்னவோ.

      நீக்கு
  4. எத்தனை சிறப்பு எண்களாக இருந்தாலும், அன்றைய தினத்தில் மனதார இறைவனுக்கு நன்றி செலுத்திவிட்டு தேவையான ஆசீர்வாதங்களை வேண்டிக்கொண்டு, தமது பெற்றோரை வணங்கிவிட்டு அல்லது அவர்களது படத்திற்கு மாலை அணிவித்து பின்னர் தம்மால் இயன்ற சில சிறு சிறு உதவிகளை அன்றைய தினத்தில் ஏழை எளிய- வறியவர்களுக்கு அமைதியான முறையில் செய்வதே சிறந்த பிறந்த நாள் கொண்டாட்டமாக இருக்கும் என்பது என் தாழ்மையான கருத்து.//

    டிட்டோ கோ! அப்படியே வழி மொழிகிறேன் ஏனென்றால் எனது கருத்தும் இதுவே.

    கீதா

    பதிலளிநீக்கு
  5. நீண்ட இடைவேளைக்கு பின்னர் மீண்டும் வந்திங்கு கருத்து பதிவிட்ட என் அன்பிற்கினிய மூத்த பதிவர் உங்களுக்கு எனது அன்பான வரவேற்பும் நன்றியம். மறக்காதீர்கள் இந்த எளியவனை..

    பதிலளிநீக்கு