பின்பற்றுபவர்கள்

வியாழன், 30 நவம்பர், 2017

சிறை தண்டனையால் என்ன பலன்?

கேட்டது நீதிபதி.

நண்பர்களே,

சிறை தண்டனை என்பது குற்றவாளிகள் என சாட்சிகளாலும் , சந்தர்ப்பங்களாலும் நிரூபிக்கப்பட்டவர்கள் அவரவர் குற்றங்களுக்கு ஏற்ப சமூகத்திலிருந்து தனிமை படுத்தப்பட்டு  அவரவர்களின் அன்றாட சுமூக வாழ்க்கையிலிருந்து  கட்டுப்பாடும் கெடுபிடிகளும்   நிறைந்த வழக்கத்திற்கு மாறான சூழ்நிலையில் அடைக்கப்படும் சட்ட முறைமை என்பது நமக்கு தெரியும்.

சில வேளைகளில் இந்த சிறை தண்டனைகள், தவறு செய்தவர்கள் திருந்துவதற்கான  வாய்ப்பளிக்கும் இடமாகவும் , சில நேரங்களில் பாதிக்கப்பட்டவர்களால் குற்றவாளிக்கு ஆபத்து நிகழ்ந்துவிடக்கூடாது  என்பதற்காகவும் , தான் செய்த தவறை உணர்ந்து தண்டனை காலம் மட்டுமின்றி தன் வாழ்நாளெல்லாம்   எண்ணி வருந்துவதோடு இனி அதுபோன்று தவறிழைக்கக்கூடாது எனும் மனநிலை உருவாவதற்கும் உதவும் வகையிலும் இந்த சிறை தண்டனைகள் அமைவதுண்டு.

இப்படி இருக்க ஒரு சிலருக்கு இந்த சிறை தண்டனை என்பது அவர்களது வாழ்க்கையில் எந்த மாற்றத்தையும் நிகழ்த்தாமல் மேலும் மேலும் குற்றங்கள் புரிந்து பல முறை சிறையில் அடைக்கப்படுவதும் நடந்துகொண்டுதான் இருக்கின்றது.

இதில் அரசியல் களத்தில்நின்றோ அல்லது சமூக அவலங்கள் , அடக்குமுறைகளை , அநியாயங்களை  எதிர்த்து போராடியதால் சிறையில் அடைக்கப்படும் போராளிகளை  சேர்க்கக்கூடாது.

பல வேளைகளில் செய்த தவறை மூடி மறைக்கவும் தண்டனைகளில் இருந்து தப்பிக்கவும்  பொய் சாட்ச்சிகளையும் ஜோடனை சந்தர்ப்பங்களையும் உருவாக்கியும்  பிரபல வழக்கறிஞர்களின் துணையுடனும்  வழக்குகளை சந்தித்து சிறை செல்லாமல் சுதந்தரமாக சுற்றித்திரிபவர்களையும் இப்போது பெருவாரியாக பார்க்க முடிவதாக செய்திகள் இருக்கலாம்.

ஆனால் பட்ட பகலில், பலர் முன்னிலையில் , சி சி டி வி பதிவுகளும் நேரடி சாட்சியங்களும் நிறைந்திருந்த இடத்தில் இரண்டு பெண்களை காரேற்றி அவர்களது கொடூர  மரணத்திற்கு தனியாளாக காரணமாக அமைந்த ஒருவருக்கு, வலுவான சாட்சியங்கள் இருந்தும் , தானே குற்றத்தை ஒப்புக்கொண்ட பிறகும் , விசாரித்த நீதிபதி அவருக்கு சிறை தண்டனை அளிக்காமல் விடுதலை செய்த வினோத தீர்ப்பு இங்கிலாந்தில் நடந்திருக்கின்றது.

நீதிபதி தனது தீர்ப்பில் , சிறை தண்டனையால் பெரிதாக  என்ன பலன் கிடைத்துவிடப்போகிறது? எனவே இவரை விடுதலை செய்கிறேன் என சொல்லி இருக்கின்றார்.

பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரும் அவரது நண்பர்களும் தவிர வேறு யாரும் இந்த தீர்ப்பை எதிர்க்கவில்லை.

உயிரிழந்தவர்களின் உறவினர்கள் குற்றவாளி இன்னும் பல ஆண்டுகள் வாழவேண்டும் என வாழ்த்தி இருக்கின்றனர், அதன் உள் நோக்கம் பல ஆண்டுகள் அவர் இந்த குற்ற உணர்வோடு வாழவேண்டும் என்பதே

அதற்கு காரணம், கார் ஓட்டியவர் தொண்ணூறு வயது முதியவர், அவரால் மட்டுமே கவனித்துக்கொள்ளப்பட்டுவரும்  நோயாளியான  அவரது மனைவிக்கு வயது எண்பத்தி ஏழு.

காரை ரிவர்ஸ் செய்யும்போது பிரேக்கை அழுத்துவதற்குப்பதில் ஆக்சிலேட்டரை அழுத்திவிட்டிருக்கின்றார், அப்போது பின்னால் வந்துகொண்டிருந்த நாற்பத்தொன்பது மற்றும் நாற்பத்தேழு வயதுடைய இரண்டு பெண்கள் கார் மோதி அதே இடத்தில் இறந்துவிட்டனராம்.

90 வயது முதிர்ந்த மனிதருக்கு இந்த வயதில் பல ஆண்டுகளுக்கு சிறைத்தண்டனை கொடுத்து சிறையில் அடைப்பதால் யாருக்கு என்ன பயன், மாறாக, அவரது ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்துவிட்டு இனி வாகனம் ஓட்டக்கூடாது என அறிவுறுத்தி, அவர் வாழப்போகும் எஞ்சிய காலமும் அவரது குற்றவுணர்வே அவருக்கு ஒரு பெரிய தண்டனையாக அமையும் என மேலும் தனது தீர்ப்பில் அந்த ஞாயமான சிந்தனையாளரான நீதி அரசர்  குறிப்பிட்டிருப்பதாக செய்தி வந்தது. 

Philip Bull
 Philip Bull

90 வயதை கடந்தவருக்கு , தான் வேண்டுமென்றே செய்யாத இரட்டைகொலைக்கு தண்டனை கொடுக்காமல் விட்டது சரிதான் ஆனால், வேண்டுமென்றே துணிகரமாக கொலை கொள்ளை, கற்பழிப்பு,ஆள் கடத்தல்,வரி ஏய்ப்பு, அந்நிய செலாவணி மோசடி,வருமானத்திற்கு மீறி சொத்து குவிப்பவர்கள், வங்கியில் கோடி கோடியாக கடன்பெற்று வெளி நாட்டில் தஞ்சம் அடைந்தவர்கள்  , கந்து வட்டி மோசடி செய்பவர்கள் போன்றவர்களில் பெரும்பான்மையானவர்களை  தெரிந்தே சிறையில் அடைக்காதது  பெரும் வேதனைதான்.

நன்றி.

மீண்டும் ச(சி)ந்திப்போம்.

கோ

6 கருத்துகள்:

  1. இந்த வேதனையை நாம் அனுபவித்துதான் ஆகவேண்டும் ஐயா. ஏனென்றால் நாட்டின் நிலையும் சமூகத்தின் நிலையும் அவ்வாறு உள்ளது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் தங்கள் கருத்திற்கும் மிக்க நன்றிகள் ஐயா.

      கோ

      நீக்கு
  2. இறுதி பாராவில் சொல்லியிருப்பது ஆம் கோ மிகவும் வேதனைக்குரியது...பார்த்தீர்கள் என்றால் குற்றம் அதிகம் புரியாதவர்கள் சிறையிலும் புரிந்தவர்கள்வ் வெளியில் எந்தவிதக் குற்ற மனப்பானையும் இல்லாமநடப்பதுதானே நிகழ்ந்துகொண்டிருக்கிறது...!! நீதிபதியின் தீர்ப்பு நன்றாகவே இருக்கிறது..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கு மிக்க நன்றிகள்.

      குற்றங்கள் பெருக பெருக அதிலிருந்து தப்பிக்கும் வழிகளும் பெருகிவிட்டனவே.

      கோ

      நீக்கு
  3. சில வேளைகளில் இந்த சிறை தண்டனைகள், தவறு செய்தவர்கள் திருந்துவதற்கான வாய்ப்பளிக்கும் இடமாகவும் , சில நேரங்களில் பாதிக்கப்பட்டவர்களால் குற்றவாளிக்கு ஆபத்து நிகழ்ந்துவிடக்கூடாது என்பதற்காகவும் , தான் செய்த தவறை உணர்ந்து தண்டனை காலம் மட்டுமின்றி தன் வாழ்நாளெல்லாம் எண்ணி வருந்துவதோடு இனி அதுபோன்று தவறிழைக்கக்கூடாது எனும் மனநிலை உருவாவதற்கும் உதவும் வகையிலும் இந்த சிறை தண்டனைகள் அமைவதுண்டு.//

    You've given 3 points. 1. To reform the convicted criminal; 2. To prevent him from harming other persons if he is not put in prison; 3. He becomes penitent and resolves to not repeat the crime. The first and the last are more or less similar.

    Two more important points you seem to have missed. 1. Punishment to criminals is a deterrent to other potential criminals. For e.g in the honor killing of Udumalaippettai case, the Court awarded death sentence to the convicts - it will deter other casteists who want to kill the boy who married their daughters. 2. The relations of the person or persons he killed will feel vindicated for e.g Kauslya may feel vindicated but she says she is not fully vindicated because her mother, the second accused, is let go free.

    So, deterrence and vindication are two important justifications for awarding sentence to the convicts.

    பதிலளிநீக்கு
  4. ஃபிலிப் புல் கேசில் அவரை வெளியில் விட்டது தவறே.

    90 வயதானால் என்ன? 30 வயதானால் என்ன? குற்றம் தெரிந்து செய்யப்பட்டால், வயதை வைத்து தண்டனை கொடுக்காமல் போனால், பிறர் அதே குற்றத்தைச் சாதாரணமாகச் செய்வார்கள். கிழவர்கள் வன்புணர்ச்சி பண்ணுவதைப்பார்க்கிறோம். அவர்களெல்லாம் தெரிந்தே செய்கிறார்கள். விட்டுவிட்டால் எல்லா கிழவர்களும் செய்வார்கள்.

    இரண்டாவது, வின்டிகேசன். பலியானவர்களின் பெற்றோர் மற்றும் சொந்தங்கள் குற்றவாளிக்குத் தண்டனை கொடுக்கவேண்டுமென்று எதிர்ப்பார்க்கிறார்கள். தன் பிள்ளையை அல்லவா கொன்றான்? எல்லாரும் ஏசு சொன்ன மாதிரி மன்னிக்க முடியாது. தன்னை ஒன்றுமே செய்யாத அப்பாவிகளை தன் பசிக்கு இரையாக்கும் கொடியவர்களை எப்படி மன்னிப்பது அவ்வப்பாவிகளின் சொந்தங்கள்? ஃபிலிப் கதையிலும் அதே. அவ்விருபெண்களின் உறவினர்கள் தணடனையை எதிர்பார்க்க ஃபிலிப் விடப்படுகிறார். எனவே நீதிபதி செய்தது தவறு.

    குற்றம் செய்ததை மறைத்து நல்ல வக்கீல்களை வைத்து வாதாடி விடுவித்துக்கொள்வதை இங்கு சேர்க்கக்கூடாது.

    குற்றவாளிகளைத் சிறையில் வைத்து தண்டிப்பதனால் என்ன பயன்? என்ற கேள்வி தனியாக எடுத்துதான் விவாதத்திற்குள்ளாக்க வேண்டும்.

    தண்டனை அவசியம். ஆனால் சிறைத்தண்டனை சரியில்லையென்றால் வேறு மாதிரி தண்டனைகள் கொடுக்க்ப்படலாமே தவிர தண்டனையே கூடாது எனப்து சமூக நல்வாழ்வுக்கு நாம் செய்யும் துரோகம்.

    பதிலளிநீக்கு