பின்பற்றுபவர்கள்

வெள்ளி, 10 நவம்பர், 2017

வந்தார்கள், அடித்தார்கள், சென்றார்கள்.  ஏன்? ஏன்?ஏன்???...

நண்பர்களே,

அடையாளம் தெரியாதபடி தங்கள் முகங்களை மறைக்கும்படியான முகமூடிகளை அணிந்தபடி சுமார் எட்டுபேர்கொண்ட கும்பல் ஒன்று கடந்த  வாரம் இரவு சுமார் 8.௦௦ மணியளவில் கொடூர ஆயுதங்களோடு  எங்கள் வீட்டிற்கு வந்திருக்கின்றனர்.

அப்படி அவர்கள் வந்திருப்பதை அறியாத எனக்கு சன்னமாக  கேட்ட சலசலப்பு  சத்தத்தினால்  சிறுது நேரத்திற்கெல்லாம்  பதற்றம் ஏற்பட்டது.

இப்போது ஆங்காங்கே திருட்டும் கொள்ளையும் கொலையும் நடப்பதும் பரவலாக பேசப்படும் கால சூழலில் இன்று நம் வீட்டிற்கு அதுபோல் யாரேனும் வந்திருப்பார்களோ?

யார் அவர்கள் எங்கிருந்து வந்திருக்கின்றனர், யாரை தேடி வந்திருக்கின்றனர், அவர்களுக்கு என்ன வேண்டும் என நிதானிப்பதற்குள் ஆளாளுக்கு சரமாரியாக - இடைவெளி இல்லாமல் - கண்டபடி  அடித்துவிட்டு சிறிது நேரத்தில் கிளம்பி போய்விட்டனர்.

அத்தனைபேர் நிதானமின்றி அடித்ததின் விளைவாக  கத்தி கத்தி குரலின் சத்தமும் ஈன ஸ்வரமாகிப்போனது.

சுவரோரம் நிறுத்தப்பட்டிருந்த ஏணியில் கால் இடறி முட்டி வீங்கிய நிலையில் , வலியுடன்  சிறிது நேரம் கழித்து சுதாரித்துக்கொண்டு வெளியில் வந்து பார்க்கும்போது அங்கே யாரும் இல்லை.

சரி, வந்தவர்கள் யாராக இருக்கும் என யோசித்து, பக்கத்து வீட்டுக்காரரிடம் நடந்ததை சொல்லி ஆலோசனை கேட்க, வந்தவர்கள் யாரென்று அவர் சொன்னபிறகுதான் நினைவிற்கு வந்தது, அன்று ஹாலோவீன் பண்டிகையை ஊரே கொண்டாடி கொண்டிருந்த விஷயம்.

விதவிதமான முகமூடிகளை அணிந்துகொண்டு, போலியான கொடூர ஆயுதங்கள் ஏந்தி சிறுவர்களும் பெரியவர்களும் வீடுவீடாக சென்று வீட்டில் இருப்பவர்களை விளையாட்டாக பயமுறுத்துவதும் வீட்டில் உள்ளவர்கள் அவர்களுக்கு இனிப்பு மற்றும் காசுகளை கொடுப்பது வழக்கம்.

குளிர்காலம் தொடங்கிவிட்டதால் படுக்கை அறையில் இருந்த மேசை மின் விசிறியை துடைத்து சுத்தம் செய்து அதை பாலிதீன் பையில் வைத்து சுற்றி  அட்டிக்கில்(attic) வைத்துக்கொண்டிருந்த என் நிலைமை புரியாமல், வீட்டுக்கு வந்த அந்த எட்டுபேர்கொண்ட கும்பல் , என்னிடமிருந்து எந்த பதிலும் வராததாலும்,     நான்  கதவை திறக்க தாமதமானதாலும்  பொறுமை இழந்து, மாறி மாறி -- கதற கதற-- சரமாரியாக அடித்துவிட்டு கிளம்பிவிட்டிருந்தனர்.

இத்தனைக்கும் இரண்டு நாட்களுக்கு முன்னரே இதுபோன்று யாரேனும் வந்தால் கொடுப்பதற்கென்று இனிப்புகளை வாங்கி வைத்தும் இருந்தேன்.

அவர்கள் வரும் நேரம் எது என்று  வீட்டு பரணில் இருந்த எனக்கோ , நான் உடனே இறங்க முடியாதபடி  பரணில் இருந்த விஷயம் வந்த கும்பலுக்கோ  தெரியாதுபோனதால்.............

பாவம், பலராலும்  - பலமாக அடிபட்டு கத்தி கத்தி குரல் கம்மி ஈன ஸ்வரத்தை தழுவிக்கொண்ட, அதே  சமயத்தில் ஏறக்குறைய உடைந்து தொங்கிய நிலையில் இருந்த  எங்கள் வீட்டு அழைப்பு மணியை நினைத்து  எனக்கு  மிகுந்த வேதனையும் வலியும் ஏற்பட்டது. 

Image result for halloween costumes


பி.கு: ஹாலோவீன் (HALLOWEEN) பற்றிய மேலதிக விவரங்களுக்கு..... மயானா கொள்ளை கொஞ்சம் வெள்ளை

நன்றி.

மீண்டும் ச(சி)ந்திப்போம்

கோ.

9 கருத்துகள்:

 1. அழைப்பு மணி கழட்டி எமர்ஜென்சி வார்டில் (ரிப்பேருக்கு) சேர்க்கலாமே...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும் யோசனைக்கும் மிக்க நன்றி நண்பா.

   கோ

   நீக்கு
  2. வருகைக்கும் யோசனைக்கும் மிக்க நன்றி நண்பா.

   கோ

   நீக்கு
 2. பதில்கள்
  1. அப்போ வேறென்ன நடந்திருக்கவேண்டும்?

   வருகைக்குமிக்க நன்றி ஐயா..

   கோ

   நீக்கு
 3. பதில்கள்
  1. தெய்வீக சிரிப்பு.....

   வருகைக்கு மிக நன்றிகள் வெங்கட்.

   கோ

   நீக்கு
 4. ஆம் கோ! ஹலோவின் தெரியும்...நாங்கள் அமெரிக்காவில் குறுகிய காலம் மிக மிக 16 வருடங்களுக்கு முன் இருந்தபோது இத்தினத்தைக் கொண்டாடுவதைப் பார்த்திருக்கிறேன்...

  இதே ஆவி விரட்டல் நம்மூரில் வேறு விதமாக ஆவி விரட்டல் என்பதும் ஆவிக்குப் படைப்பதும் என்ரரு அமெரிக்காவில் கூட தங்கள் குடும்ப ஆவிகளைக் கொண்டாடி யும் மகிழ்வார்களாம்.

  எல்லா நாடுகளிலும் அடிப்படை நம்பிக்கைகள் ஒன்றுதான் போல கொண்டாடும் விதம் அவரவர் நாட்டு கலாச்சாரப்படிக் கொண்டாடுகிறார்கள்...போலும்..

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும் தங்களின் நினைவு பகிர்விற்கு மிக்க நன்றிகள் நண்பர்களே.

   கோ

   நீக்கு