புரியவில்லை!!??
நண்பர்களே,
மனித உடலில் உள்ள எல்லா உறுப்புகளிலும் மொழி/ பேச்சு/தகவல் தொடர்பிற்கென்று பிரத்தியேகமாக அமையப்பெற்ற நாக்கின் ஆரோக்கிய வளர்ச்சியை பொறுத்தே வாயிலிருந்து உதடுகளின் உதவியுடன் வார்த்தைகள் வெளிவரும்.
அப்படி வெளிவரும் ஒலியின் தெளிவை பொறுத்து வார்த்தைகளுக்கான அர்த்தங்கள் விளங்கும்.
இதன்மூலம் ஒரு மனிதனின் நாக்கும் உதடும் மட்டுமே செய்திகளை பரிமாற்றிக்கொள்ள ஏதுவானவைகளாக கருதப்படுகின்றன.
ஆனால்,இப்போது பரவலாக சொல்லப்படும் ஒரு வார்த்தை " உடல் மொழி" - body language..
அப்படி யானால் மொத்த உடலும்கூட பேசுமா எனும் கேள்வி எழுகிறது.
அந்த கேள்விக்கான பதில் நம் எல்லோருக்கும் தெரியும் -- ஆம் மொத்த உடலும் பேசும்.
பேசுவது என்பது இங்கே ஒலிக்கலவையால் ஆன சப்தங்களை குறிப்பதற்கு பதில் அவை உணர்த்தும் செய்திகளையே குறிப்பவையாக அமைகின்றது.
பழைய திரை இசை பாடலில் வரும் ஒரு வரி,"கண்களின் வார்த்தைகள்.. புரியாதா...?"
அப்படி என்றல் கண்கள் பேசும் என்பதும் அது செய்திகளை மெளனமாக சொல்லும் என்பதை புரிந்துகொள்ள முடிகிறது.
அதேபோல புருவங்கள் கூட செய்திகளை சொல்லகூடியவைதான் என்பதும் நமக்கு தெரியும்.
வாய் பேசாமலேயே, புருவங்களின் அசைவினால் அடுத்தவருக்கு செய்திகளை சொல்லமுடியுமே.
புருவங்களை எந்த அளவிற்கு உயர்த்தி , தாழ்த்துகிறோம் என்பதை பொறுத்து செய்திகள் உணர முடிகிறது.
அதேபோல கைகள், தலை, விரல்களின் அசைவுகள்கூட செய்தி சொல்லும் சமிக்ஞய் களை வெளி படுத்தும்.
இதுபோன்ற செய்தி பரிமாற்றங்கள் ரகசியம் கருதியும் அல்லது நோய்வாய் பட்டவர்கள் தங்களின் முடியாமை - சிரமம் கருதியும் நடப்பதுண்டு.
உடலின் பாகங்களான உறுப்புகளின் அசைவுகள் தகவல் சொல்வது சரி... அதேபோல உடலோடு ஒட்டி இருக்கும் ஆடைகள்கூட செய்திகள் சொல்லும் என்பதும் நமக்கு தெரியும்.
அதாவது நல்ல தூய்மையான புதிய ஆடை அணிந்திருந்தால் அவர் கொஞ்சம் வசதி படைத்தவர் என்றும் கோட்டு சூட்டு அணிந்திருந்தால் அவர் வறுமை கோட்டிலிருந்து மிகவும் உயரத்தில் இருப்பவரென்ற செய்தியையும் , கிழிந்த பழைய ஆடை அணிந்திருந்தால் அவர் வறுமை துயரத்தில் இருப்பவரென்ற செய்தியையும் அறிய முடிந்தது.
மனித உடல் உறுப்புகள் சொல்லிவந்த செய்தியில் இந்நாள் வரை பெரிய வித்தியாசம் ஏதுமில்லாமல்தான் இருக்கின்றது ஆனால் உடலணியும் ஆடைகள் சொல்லிவந்த செய்திகள்தான் இன்று முற்றிலும் மாறுபட்டதாக தோன்றுகின்றது.
சில ஆண்கள் அல்லது பெண்கள் பலரும் கூடியிருக்கும் பொது இடங்களில் -விழா நிகழ்ச்சிகளின்போது பலரும் தங்களை காண வேண்டும் அவர்களின் கவனத்தை ஈர்க்கவேண்டும் என்று சர சரக்கும் - பளபளக்கும் ஆடைகளை அணிந்துகொண்டு, கால் சலங்கைகள் , கை வளையல்கள் சினுங்க, உள் அரங்கிலும் கருப்பு கண்ணாடி அணிந்துகொண்டு... இப்படியும் அப்படியுமாக நடந்துகொண்டு " என்னைப்பார் - என் அழகைப்பார்" என்பதுபோல தங்கள் அலங்கார அணிகலன்கள் பளீச்சென்று தெரியும் அளவிற்கு நடந்துகொள்வார்கள்.
அதிலும் அவர்களது ஆடை வடிவமைப்புகள் இன்னும் சில கூடுதல் செய்திகளை சொல்ல தவறுவதில்லை.
இப்போதெல்லாம் சிலர்வேண்டுமென்றே அரைகுறையாக தைக்கப்பட்ட அதிக விலைகொடுத்து வாங்கப்பட்ட உடைகளை அணிந்துகொண்டு வரும்போது ஆங்காங்கே கிழிந்து தொங்கும் ஆடைகளுக்கு பின்னால் இருக்கும் அவர்கள் உடல் சொல்லும் மொழி என்ன என்பதை புரிந்துகொள்ள முடிவதில்லை.
இதற்கு முடிவும் இல்லை.
நன்றி
மீண்டும் ச(சி)ந்திப்போம்
கோ
ஆம் கோ! நான் பள்ளியில் படித்த போது எங்கள் ஆசிரியை மேரி லீலா அவர்கள் யங்க் ஸ்டுடன்ட் மூவ்மென்டை நடத்தி வந்தார் அதில் நானும் இருந்தேன். அப்போது பெண்கள் பொது இடங்களில் எப்படி நடந்து கொள்ள வேண்டும். உடல் மொழி எப்படி இருக்க வேண்டும், நம் தோற்றம் பிறருக்கு நம் மேல் மரியாதை வரவழைக்கும் வேண்டுமே அல்லாமல் நம்மைத் தரக் குறைவாகப் பார்க்கும் படி இருக்கக் கூடாது அது உடையானாலும் சரி, உடல் மொழியானாலும் சரி என்று சொல்லுவார். ஆனால் இப்போது ஷோ எல்லாம் பார்க்கும் போது பலரின் உடைகளும் சரி, உடல் மொழியும் சரி என்ன சொல்ல என்று தெரிவதில்லை...என் ஆசிரியை சொல்லிக் கொடுத்தது பலர் முன் நாம் அமரும் போது கால்களை விரித்து உட்காரக் கூடாது. சேர்த்து வைத்துக் கொண்டு உட்கார வேண்டும். கால் மேல் காட் போட்டு உட்காரக் கூடாது என்றெல்லாம் சொல்லிக் கொடுத்திருந்தார்கள். ஆனால் இப்போதெல்லாம் எல்லாமே வினோதமாக இருக்கிறது...நல்ல பதிவு கோ..
பதிலளிநீக்குகீதா
வருகைக்கும் பல தகவல் பரிமாற்றத்திற்கு மிக்க நன்றிகள்.
பதிலளிநீக்குjokes apart, முன்பு, பிள்ளைகள் பெற்றோரிடத்தில் காட்டிய மரியாதையும் அடக்கமும் பவ்யமும் இப்போது காண முடிவதில்லை.
ஆடை அணிகலன்கள் உடலை மறைப்பதற்குத்தான் என்பது மாறி உடல் பாகங்களை வெளிச்சம் போட்டு காட்டி காண்பவர்கள் அதனை முறைத்து பார்க்கத்தான் என்றாகிப்போனது.
வருகைக்கு மிக்க நன்றியும் வணக்கங்களும்.
கோ