உன்னை அறிந்தால்...
நண்பர்களே,
வாசிப்பு என்பது எத்தனை நல்லது என்பது எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்படும் ஒரு உண்மை.
"கண்டதை படிப்பவன் பண்டிதனாவான்", எனும் கூற்றும் நம் சமூகத்தில் பிரபலம்.
இன்றைய சூழ் நிலையில் படிப்பவர்களைவிட எழுதுபவர்கள் அதிகம் என்பதால் , எழுதுபவர்கள் தங்கள் படைப்புகளை அழகாக நேர்த்தியாக சுவைபட, பொருள் பொதிந்து படைக்கவேண்டுமானால், நிறைய படிக்கவேண்டும்.
படிப்பு என்பது, அச்சடித்த புத்தக - பத்திரிக்கைகள் வடிவிலான செய்திகளையோ அல்லது வலைத்தளங்கள் போன்ற செய்தி பகிர்வு இடங்களை வாசிப்பது மட்டுமல்ல.
அவற்றையும் கடந்து, நாம் அன்றாடம் எதிர்கொள்ளும் குழந்தைகள்,பெரியவர்கள், சுற்றுப்புற சமூகம் போன்றவற்றிலும் இருந்து செய்திகளை , அறிவை, ஞானத்தை பெற்றுக்கொள்ள- கற்றுக்கொள்ளமுடியும்.
இந்த வரிசையில் மற்றவர்களை படிப்பதும் , மற்றவர்கள் எழுதிய புத்தகங்கள் செய்திகளை படிப்பதும் எவ்வளவுக்கெவ்வளவு நன்மை பயக்குமோ அந்த அளவிற்கு நாம் கடந்த காலங்களில் எழுதிய பதிவுகள், குறிப்புகள், கவிதைகள், துணுக்குகள், கட்டுரைகள் போன்றவற்றை மீண்டும் ஒருமுறை படிப்பதுவும் நம் அறிவு விருத்திக்கும், நம் பிழை திருத்தத்திற்கும் , நம் படைப்புகளை இன்னும் சிறப்பாக படைக்கவும் உதவும் என்பது என் கருத்து.
அவ்வகையில் நண்பர்களே,
பதிவுகள் எழுதுவதோடு கொஞ்சம் உங்களின் படைப்புகளை இன்னும் ஒருமுறை நீங்களே படிக்கவும் நேரம் ஒதுக்குவது, நம் வருங்கால படைப்புகளை ரசனையோடும் தெளிவோடும் சுவையோடும் கருத்து செறிவோடும் எழுத வகை செய்யும் என்பது என் சிந்தை.
இன்றைக்கு நான் முதன் முதலில் வலை பக்கத்திற்கு எழுதிய பதிவை வாசித்து பார்த்ததில் என் குறை(நிறை)களை அறிந்துகொண்டு மிகவும் சலித்துக்கொண்டேன், இத்தனை பிழைகளோடும்கூட ஒருவரால் எழுதமுடியுமா என்று.
நமது முந்தைய படைப்புகள் பலவும் நமக்கு மகிழ்ச்சியையும் நம்மைக்குறித்த ஒரு பெருமிதத்தையும் கொடுக்கும்படியாகக்கூட அமைந்திருக்கலாம்,அந்த இனிய சுகத்தைப்பெறவும்கூட நம் பதிவுகளை நாம் வாசிக்கலாமே.
ஒழுங்காக ஓடிக்கொண்டிருந்தாலும் இயந்திரங்களை அவ்வப்போது சரி பார்த்தும் தேவையான பராமரிப்பு வேலைகள் செய்வதுபோல நம் எழுத்துக்களை நாமே சுய பரிசோதனை செய்துகொள்வது, படிப்படியாக நம் எழுதும் ஆற்றலை பட்டை தீட்டிக்கொள்ள மிகவும் அவசியம் என கருதுகிறேன்.
வாரம் ஒருமுறை நம் படைப்புகளை மறு வாசிப்பு செய்வதால் நமக்கும், பின்னாளில் நாம் எழுதும் படைப்புகளை வாசிப்பவர்களுக்கும் மிகுந்த பயனளிக்கும் என திடமாக நம்புகிறேன்.
இப்படி செய்வது, நாம் ஏற்கனவே பதிவிட்ட பதிவுகளை மீண்டும் விஜயம் செய்து அவற்றுள் ஏதேனும் பிழைகள் திருத்தப்பட வேண்டி இருந்தால் திருத்தித்துக்கொள்ளவும் ஒரு நல்ல வாய்ப்பாக அமையும் என கூறி அமைகிறேன்.
நன்றி.
மீண்டும் ச(சி)ந்திப்போம்.
கோ
நல்ல அறிவுரைத்தான்
பதிலளிநீக்கு
நீக்குஅறிவுரை எல்லாம் இல்லீங்க, மனசுல பட்டதை பட்டுனு சொல்லிட்டேன் அவ்வளவுதான்.
வருகைக்கு மிக்க நன்றி நண்பரே..
கோ
எனது தொழிற்நுட்ப பதிவுகள் பலவற்றை மற்ற வேண்டும்... ஏனென்றால் அவ்வளவு மாற்றங்கள் GOOGLE செய்துள்ளது...!
பதிலளிநீக்கு
நீக்குதனப்பால்,
நீண்ட இடைவெளிக்குப்பின் வருகைதரும் உங்களின் கருத்திற்கும் பதிவின் அங்கீகாரத்திற்கு மிக்க நன்றிகள்.
கோ
அருமையா சிந்தனை நண்பரே
பதிலளிநீக்குநமது எழுத்துக்களை நாமே மறு வாசிப்பு செய்வது
நம் உழுத்துக்களை மெருகேற்ற பெரிதும் உதவும்
நன்றி நண்பரே
நீக்குகரந்தையார் அவர்களுக்கு,
சிந்தனையை பாராட்டிய உமக்கு மிக்க நன்றிகள்.
கோ
ji you would have also added...
பதிலளிநீக்குpersons who write comments should read their comments again...
so that the comments become a real good..
Yes, I should have added this valid point.
நீக்குThanks for your visit and valuable comment.
ko.
உங்கள் கருத்துக்களோடு ஒத்துப் போகிறேன்! என் பழைய படைப்புக்களை அவ்வப்போது வாசித்து திருத்தி மீள்பதிவும் செய்கிறேன்! நல்லதொரு ஆலோசனை! நன்றி!
பதிலளிநீக்குசுரேஷ்,
நீக்குவருகைக்கு மிக்க நன்றியும் ஆலோசனை ஏற்புடையதாக இருப்பதை குறிப்பிட்டது குறித்து மகிழ்ச்சியும்.
கோ
எத்தனை முறை படிக்கிறோமோ ஒவ்வொரு முறையும் ஒரு திருததம் என்பது இயல்பாகவே வந்துவிடும். அந்த உத்தியை நான் அவ்வப்போது கடைபிடிக்கிறேன். மொழிபெயர்ப்புக் கட்டுரைகளில் அதிகமாக கடைபிடிக்கிறேன்.நன்றி.
பதிலளிநீக்குஐயா,
நீக்குதங்களின் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றிகள்.
கோ