பின்பற்றுபவர்கள்

செவ்வாய், 8 நவம்பர், 2016

தங்கச்சிய (மெய்யாலுமே) நாய் கச்சிச்சிப்பா ......

மீண்டும் ஜனகர்.

நண்பர்களே,

சமீபத்தில் எழுதி இருந்த என்னுடைய பதிவு ஒன்றில் கோண(ல்)வாய்  கோலிவுட்!! ) திரை பட நடிகர் திரு.ஜனக ராஜ்  அவர்கள் மீண்டும் திரையில் தோன்றி மக்களை மகிழ்விக்கவேண்டும் எனும் என்னுடைய  ஆவலையும் அதற்காக,.


சீனியர் மற்றும் ஜுனியர் திரை இயக்குனர்கள், திரை மறைவில் மறைக்கப்பட்டிருக்கும் அவரை  - அவரது திறமையை மீண்டும் திரைக்கு முன்னால்  அழைத்துவந்து நமக்கு மகிழ்வளிக்கவேண்டும் என்று இந்த பதிவின் வாயிலாக வேண்டுகிறேன் எனவும் எழுதி இருந்தேன்.

உங்களில் பலரும்கூட என்னுடைய அந்த ஆவலை அங்கீகரித்திருந்தீர்கள்.


நேற்று யூ ட்யூபில் எனக்கென்று ஒரு இன்ப அதிர்ச்சி காத்திருந்ததை ரொம்பநேரம் கவனிக்காமல் வேறு வேலையில் மூழ்கி இருந்தேன்.

கடைசியாக கணணியை மூடும் நேரம் என் கண்ணில் பட்டது அந்த காட்சி.

அது திரு.ஜனக ராஜ் அவர்களின் பேட்டி. 

அதில் அவர், தன்னை நீண்ட கால இடைவெளிக்குப்பின் நடிப்பதற்காக ஒரு இயக்குனர் அழைத்ததை ஏற்று மீண்டும் நடிக்க வந்திருப்பதாக கூறியது கேட்டு அன்று இரவு முழுதும் ஒருவித மகிழ்ச்சி என்னை ஆட்கொள்ள அமைதியாக உறங்கினேன்.

பார்ப்பதற்கு முன்புபோலவே தோற்றம் அளித்தாலும் பேச்சில் கொஞ்சம் தடுமாற்றம் இருந்ததுக்கண்டு வருத்தமாக இருந்தாலும் அவர் மீண்டும் நடிக்க வருவதை எண்ணி மீண்டும் மனம் குதூகலித்தது.

உங்களில் பலரும் சொன்னதுபோல, அவர் வெளி நாட்டில்தான் இருந்திருக்கவேண்டும் ஏனென்றால் அவரின் மனைவி பிஜி தீவை சார்ந்தவர்கள் என்று அவரே பேட்டியின்போது குறிப்பிட்டதில் இருந்து யூகிக்க முடிந்தது.

பொறுத்திருந்து பாப்போம் அவரை மீண்டும் வெள்ளித்திரையினுள்.

இந்த தருணத்தில் என்னுடைய பதிவை படித்து(??) என் உள்ளார்ந்த உணர்வையும் வாசகர்களாகிய உங்களின் ஆவல்களை, உங்களின் பின்னூட்டங்களின் வாயிலாக பார்த்தும்  அதன்படி திரு ஜனகராஜ் அவர்களை நடிக்க அழைத்துவந்த அந்த இயக்குனருக்கும் , தயாரிப்பாளருக்கும் என் நன்றியை உங்கள் சார்பாகவும் தெரிவித்துக்கொள்கிறேன். 

நன்றி.

மீண்டும் ச(சி)ந்திப்போம்.

கோ

4 கருத்துகள்:

 1. தனக்கென்று தனி முத்திரையோடு பிரகாசித்தவர்... தொடர்வார்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம் தனப்பால் மீண்டும் அசத்துவார் என நினைக்கின்றேன்.

   தங்கள் வருகைக்கு மிக்க நன்றிகள்.

   கோ

   நீக்கு
 2. ஜனகராஜ் ஜனரஞ்சக நடிகர்! இரண்டாவது இன்னிங்க்ஸ் வெற்றிகரமாக அமையட்டும்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சுரேஷ்.

   கோ

   நீக்கு