நண்பர்களே,
வேலை தொடர்கிறது…
நல்லதொரு வேலை , கை நிறையா(!!) சம்பளம் , என் பேச்சை கேட்டு ஏவல் புரியவும் சிலர்.
வேலை தொடர்கிறது…
முந்தய பதிவை வாசிக்க வீட்டுவேலை
நல்லதொரு வேலை , கை நிறையா(!!) சம்பளம் , என் பேச்சை கேட்டு ஏவல் புரியவும் சிலர்.
நன்றாகத்தான் போய்க்கொண்டிருந்தது.
என் குழுவில் ஒரு அலுவலக மேலாளர், தட்டெழுத்தாளர்,ரசாயன நிபுணர் கணக்கு பதிவாளர் , காசாளர் அலுவலக உதவியாளர் , பத்து பனிரெண்டு பேக்டரி ஊழியர்கள் ஒரு வாகன ஓட்டுநர் இருந்தனர்.
என் பணி:- அரசாங்கத்திற்கும் , கிராம மேம்பாட்டு பயனாளிகளுக்கும், அரசுடமையாக்கப்பட்ட வங்கிகளுக்கும் இடையில் இருந்து கிராம மக்கள் படித்த மற்றும் படிப்பற்ற மக்களின் தகுதிக்கும் , திறமைக்கும் , அனுபவத்திற்குமேற்ற கடனுதவுகளை பெற்றுத்தருவதும் அவற்றை எப்படி பயன் படுத்துவது, மானிய தொகை போக கடனை எப்படி திருப்பி செலுத்துவது , அவர்களின் வாழ்வாதாரத்தை இருக்கும் வசதிகளை கொண்டு எப்படி அமைத்துக்கொள்வது போன்று வழி காட்டுதல்.
இத்தனைபேர் என் சொல்லுக்கு கட்டுப்பட்டிருந்தாலும் , " நமக்கும் மேலே ஒருவனடா அவன் நாளும் தெரிந்த தலைவனடா" என்பதற்கேற்ப ;
தமிழ் சினிமாவில், லுங்கி கட்டிக்கொண்டு, முகத்திலே மரு வச்சிக்கிட்டு நம்பியார் , "டேய் கபாலி" அப்(ப)டி கூப்பிட்டவுடனே , கையை கட்டிக்கொண்டு "சொல்லுங்க எஜமான்னு" போய் நிக்கிற கபாலிபோல அல்லாமல் , அலுவலக மற்றும் தொழில் தர்மத்திற்கும், கல்வித்தகுதி , பதவிக்கு தகுந்த பக்குவத்துடன் நடத்தும் செயல் அலுவலர் கண்ணியவான் ஒருவரும் இருந்தார்-(டாக்டர். செபாஸ்டின்)
நாட்களும் சென்றுகொண்டிருக்க ஒரு நாள் காலை செயல் அலுவரின் அறைக்கு அழைக்கப்பட்டேன்.
சம்பிரதாய நலம் விசாரிப்பு, முகஸ்துதிக்குபின் "கணக்கு பதிவாளரிடம் இருந்து ஒரு தொலை பேசி செய்தி, " வங்கி தேர்வில் வெற்றி பெற்றதை தொடர்ந்து நடை பெற்ற நேர்முக தேர்விலும் தேர்வு பெற்றதினால் , நம்ம (திருப்பதி மகேஷ் போல) தூர மாநிலத்தில் ட்ரைனிங் செல்ல ஏற்பாடுகள் செய்ய இருப்பதால் இனி பணிக்கு வர மாட்டார்.
எதிர்பார்த்த ஒன்றுதான் என்றாலும் இத்தனை துரிதமாக நிகழும் என்று நினைக்கவில்லை என்றார். வேலைக்கு சேர்ந்து சில மாதங்களே ஆன எனக்கு இந்த எல்லா செய்திகளும் எதிர்பாராதவைதான்.
பிறகு நிதானமாக அவர் சொன்னது எனக்கு இன்னும் ஒரு எதிர்பாராத செய்தி.
அது என்ன செய்தி?
அதற்குள் என்ன அவசரம் ?
நாளை சொல்கிறேன்.
அதுவரை.
நன்றி,
மீண்டும் ச(சி )ந்திப்போம்.
கோ