பின்பற்றுபவர்கள்

வியாழன், 24 அக்டோபர், 2024

விமான பயணத்தில்...4

விளங்காத உண்மைகள் 

நண்பர்களே,

முன் பதிவை வாசிக்க...விமான பயணத்தில்...3

அப்படி என்ன?  அடுத்த ஒரு மணி நேரத்தில் ஊர் வந்து சேர்வோம் என்ற அனைத்து பயணிகளின்  மனதிலும் , இதுவே நமது கடைசி பயணமோ என்று எண்ணுகின்ற அளவிற்கு  நடுவானில்  திடீர் என ஏற்பட்ட வானிலை மாற்றத்தினால் பலமான கடும் காற்று வீசியதால் விமானம் இடது வலது என இரண்டு பக்கங்களும் நிலை தடுமாறி பயணிகள் இப்படியும் அப்படியும் சாய பெரும்பாலானவர்கள் கூக்குரலிட்டு தங்கள் அச்சத்தை வெளிப்படுத்த, கேப்டனிடமிருந்து வந்தது அந்த  அவசர செய்தி.

புதன், 23 அக்டோபர், 2024

விமான பயணத்தில்...3

விளங்காத உண்மைகள் 

நண்பர்களே,

முன் பதிவை வாசிக்க விமான பயணத்தில்...2

மூடா விழிகள், அங்கிருந்த தகவல் பலகைகளில், அடுத்து  புறப்படவிருக்கும் பல விமானங்கள் குறித்த செய்தியினை மாறி மாறி காட்டிக்கொண்டிருந்தன, சோர்வுற்ற என் மனதை மேலும் மேலும் வாட்டிக்கொண்டிருந்தன.

செவ்வாய், 22 அக்டோபர், 2024

விமான பயணத்தில்...2

விளங்காத உண்மைகள்.

நண்பர்களே,

முன் பதிவை வாசிக்க விமான பயணத்தில்...

விமான நிலையத்தில் இருந்த தகவல் பலகை சொல்லிய கேட் எண் பிரகாரமான இடத்திற்கு வந்து அங்கிருந்த  டிக்கெட் மற்றும் கடவு சீட்டு  பரிசோதகரை  அணுகி எனக்கான விமான போர்டிங் கார்டை கேட்டேன்.

திங்கள், 21 அக்டோபர், 2024

விமான பயணத்தில்...

விளங்காத உண்மைகள். 

நண்பர்களே,

கடந்த சுமார் 30ஆண்டுகளாக விமான பயணங்கள் மேற்கொண்டு பல வெளி நாடுகளை சுற்றிப்பார்க்கும் இனிய அனுபவங்கள் கிடைக்க பெற்றிருந்தாலும் கடந்த மாதம்  எனக்கேற்பட்ட பயண அனுபவம்போல்  அதற்கு முன் எப்போதும்  ஏற்பட்டதில்லை.

செவ்வாய், 10 செப்டம்பர், 2024

பத்துப்பாட்டு

 யாகாவாராயினும் ... 

நண்பர்களே,

சில நாட்களுக்கு முன்பு ஒரு வலைதள காணொளி என் கண்களில் பட்டது.

அது அத்தனை சுவாரசியமாக இல்லை என்றாலும், அதில் மின்னலென வந்துபோன விவாதக்  கீற்றில்   நமக்கு பரீச்சயமான  சொல்லக்கேட்டு முழுமையாக பார்க்க முனைந்தேன்.

செவ்வாய், 16 ஜூலை, 2024

இந்தியன் - 4

எப்பொருள் யார் யார் வாய் கேட் ப்பினும் ....

நண்பர்களே,

உடனடியாக கவனம் செலுத்தப்படவேண்டிய, உயிர்போராட்டம், எல்லை பாதுகாப்பு, வறுமை ஒழிப்பு, கருப்புபண  மீட்பு, வேலை வாய்ப்பு,உழவர் பாதுகாப்பு,வேளாண்மை அபிவிருத்தி, கல்வி மேம்பாடு, சுகாதாரம்  மற்றும் மருத்துவ முன்னேற்றம், சாலை பராமரிப்பு,  கொலை கொள்ளை, ஆள் கடத்தல் தடுப்பு, கட்டப்பஞ்சாயத்து ,கந்துவட்டி ஒழிப்பு, கள்ளச்சாராய ஒழிப்பு, மது விலக்கு  , வரியேய்ப்பு தடுப்பு , விலைவாசி கட்டுப்பாடு, பெருமுதலாளிகளின் கடன்பாக்கி வசூல்,  போன்று    உலகில் கவனம் செலுத்தப்படவேண்டிய  ஆயிரத்தெட்டு விஷயங்கள்...

சனி, 13 ஜூலை, 2024

தொட்டில்! - ஊஞ்சல்!! - பல்லக்கு!!! - தேர்!!!!...

முழுமையின்  தொடக்கம்.

நண்பர்களே,

நீண்டதொரு இடைவெளிக்குப்பிறகு மீண்டும் இந்த வலை தளத்தின் ஊடாக உங்கள் யாவரையும் சந்திப்பதில் பெருமகிழ்ச்சி.