பொதுவாக நமக்கு தெரிந்த யாரேனும் எல்லா விஷயங்களிலும் கொஞ்சம் கூடுதல் கவனத்துடனும், தொலை நோக்கு பார்வையுடனும், கணக்கு வழக்குகளில் கறாராகவும், பேரம் பேசுவதில் சாதுர்யமாகவும் , விஷயங்களை அணுகுவதில் சாமார்த்தியமாகவும், பிறரிடம் இருந்து ஏதேனும் உதவிகள் பெறும்போது நாசுக்காக நடந்துகொள்பவர்களை "உஷார் பார்ட்டி" என்று வர்ணிக்கபடுவதுண்டு.
விழா காலங்களில் முன்பெல்லாம் வாழ்த்து அட்டைகள் பெருமளவிற்கு வருவதும் அனுப்புவதுமாக இருந்த பழக்கம் கொஞ்சம் கொஞ்சமாக நவீன மயமாக்கல் என்றபேரில் சுருங்கி, ஈ மெயில், வாட்சப்,டெக்ஸ்ட் என்று ஆகிவிட்டது.
பொங்கலுக்கு அடுத்த நாள் காலையில் ஆறு மணிக்கெல்லாம் மாட்டை பிடித்துகொண்டு (எந்த மாடு என்பவர்களுக்கு - பாபியும் அதன் பேபியும் படியுங்கள்) ஆற்றுக்கு சென்று,பசுவின் மடி நனையும் அளவிற்கு தண்ணீரில் நிற்க வைத்து,
உழவுக்கும் தன் தொழிலில் உறுதுணையாக இருக்கும் மாடுகளுக்கும், விளைச்சலுக்கு ஒத்தாசைபுரியும் சூரியனுக்கும் நன்றி சொல்ல உழவன் கொண்டாடும் ஒரு உன்னத திருநாள் இந்த பொங்கல் திருநாள்.