பின்பற்றுபவர்கள்

வெள்ளி, 23 ஜனவரி, 2015

பார்ட்டி உஷார்!!வரவு நல்வரவாகட்டும்!

நண்பர்களே,

பொதுவாக நமக்கு தெரிந்த யாரேனும் எல்லா விஷயங்களிலும் கொஞ்சம் கூடுதல் கவனத்துடனும், தொலை நோக்கு பார்வையுடனும், கணக்கு வழக்குகளில் கறாராகவும், பேரம் பேசுவதில் சாதுர்யமாகவும் , விஷயங்களை அணுகுவதில் சாமார்த்தியமாகவும், பிறரிடம் இருந்து ஏதேனும் உதவிகள் பெறும்போது நாசுக்காக நடந்துகொள்பவர்களை "உஷார் பார்ட்டி" என்று வர்ணிக்கபடுவதுண்டு.  


ஆனால் இன்றைய பதிவின் தலைப்பு "பார்ட்டி உஷார்" என்று இருக்கின்றதே என்னவாக இருக்கும்?

விஷயத்திற்கு போகுமுன், நாம் எல்லோரும் சிறு வயதில் வரலாற்று பாடத்தில் படித்த ஒரு இனிப்பான?!-கசப்பான??!! பார்ட்டி பற்றிய செய்தி தொடர்பான நிகழ்ச்சியை கொஞ்சம் சொல்லிவிட்டு பிறகு தலைப்பிற்குள் செல்வோம்.

அமெரிக்க ஐக்கிய நாட்டின் ஒரு நகரமான Massachusetts  ல் இருக்கும் பாஸ்டன் துறைமுகத்தில் 1773 ஆம் ஆண்டு  டிசம்பர் மாதம் 10ஆம் நாள், கிழக்கிந்திய கம்பனி மூலம் அனுப்பப்பட்ட    மூன்று கப்பல்களில் இருந்த உயர் தர தேயிலை மூட்டைகளை அமெரிக்க இந்தியர்கள்போல் (செவ்விந்தியர்)  உடையணிந்த சுமார் 100க்கும் மேற்பட்ட ஆட்கள் , பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தையும், பிரிட்டிஷ்  நாடாளுமன்றத்தில் , தேயிலை மீதான உற்பத்தி மற்றும் இறக்குமதி வரி சம்பந்தமாக இயற்றி இருந்த சட்டத்தையும்  விரும்பாமல்   தங்களின்  எதிர்ப்பை காட்டும் விதமாக அந்த மூன்று கப்பல்களிலும் இருந்த , பல லட்சம் டாலர் மதிப்பு மிக்க, அந்த தேயிலைகளை கடலில் எறிந்து விட்டு உடனடியாக தப்பித்து சென்றனராம்.இதனை தொடர்ந்து அங்கே அமெரிக்க புரட்சியும் வெடித்ததாக வரலாறு கூறுகின்றது.கடந்த சில வருடங்களுக்கு முன்  எம் ஐ டி(Massachusetts  Institute  of  Technology ) , ஹாவர்ட் பல்கலை கழகங்களை பார்க்கும் வாப்பு கிட்டியது. அப்போது அருகிலிருக்கும் வரலாற்று  புகழ் பெற்ற அந்த பாஸ்டன் துறைமுகம் அமைந்திருக்கும் கடல் பகுதியில் ஒரு படகு பயணம் ஏற்பாடு செய்து பயணித்த சமயம், அந்த படகு, (ஏறக்குறைய ஒரு சிறிய கப்பல் போன்றது)
சரியாக எந்த இடத்தில் தேயிலை மூட்டைகள் கொட்டபட்டதோ அந்த பகுதிக்கு  வரும்போது அறிவிப்பாளர் சொன்னார் இன்னமும் இங்கே அந்த தேயிலையின் வாசம் வீசுவதா நம்பபடுகின்றது என்று.

அதே சமயத்தில் படகின் மேல் தட்டில் அமர்ந்திருந்த எங்களுக்கு தேநீரும் வழங்கப்பட்டது.உண்மையிலேயே, என் கண்கள் மகிழ்ச்சியிலும் ஆச்சரியத்திலும் , ஆனந்தத்திலும் கண்ணீர் உகுத்தன, ஏனென்றால், ஏழாவது அல்லது எட்டாம் வகுப்பில், வரலாற்று ஆசிரியர்  ஸ்ரீனிநிவாசன் ஜி அவர்கள் "பாஸ்டன் டீ பார்ட்டி" நிகழ்ச்சியை பாடமாக நடத்தும்போது, அதை பற்றிய எந்த சலனமோ, ஆச்சரியமோ, அது எங்கிருந்தால் நமக்கென்ன என சாதாரணமாக நினைத்த , நேரில் பாப்போம் என்று    கனவிலும் நினைத்து பார்க்க முடியாத அதே கடல் பரப்பில் அந்த சிறிய கப்பலில்  அமர்ந்து "பாஸ்டன் தேநீர் "அருந்துகின்றோமே என நினைத்து  உள்ள படியே உள்ளம் சிலிர்த்தேன்.

அந்த பார்டியில் இருந்து இப்போது தலைப்பின் உள்ள இந்த பார்டிக்கு வருவோம்.

கடந்த சில நாட்களுக்கு முன் செய்திதாளில் வந்த ஒரு செய்தி, கொஞ்சம் வித்தியாசமாக எனக்கு பட்டது.

அதாவது, ஒரு ஐந்து வயது மாணவன் தனது சக வகுப்பு மாணவனின் பிறந்த நாள் பார்டியில் கலந்து கொள்ள முடியாமல் போனதால் , பிறந்த நாள் கொண்டாடிய மாணவனின் தாயார் , பார்டியில் கலந்து கொள்ள முடியாமல் போன மாணவனிடத்தில் அவனுக்காக முன் பணம் செலுத்திய பில்லை  பள்ளியின் மூலம் அவனது ஸ்கூல் பையில் வைத்து அனுப்பியிருக்கின்றார்கள்.


மகனின் பையில் இருந்த அந்த கவரை பிரித்து பார்த்த பெற்றோருக்கு பேரதிர்ச்சியாக  இருந்தது, அடுத்தநாள் பள்ளிக்கு சென்ற இந்த மாணவனின் தந்தை, மகனின் ஆசிரியையிடம் இந்த பில் என் பையன் பையில் எப்படி வந்தது என கேட்க்க, பிறந்த நாள் கொண்டாடிய மாணவனின் தாயார் அதை ஆசிரியையிடம் கொடுத்து இந்த மாணவனின் பையில் வைத்து பெற்றோருக்கு அனுப்பும் படி கேட்டுக்கொண்டதாக சொன்னார்களாம்.

உடனே அந்த பிறந்த நாள் கொண்டாடிய மாணவனின் விலாசத்தை கண்டுபிடித்து, அவனது தாயாரிடம், பார்டியில் கலந்துகொள்ள முடியாமல் போனதற்கான காரணத்தை எடுத்து கூறியும் அந்த தாயார் விடாபிடியாக, நீங்கள் அந்த பணத்தை கொடுத்தே ஆகவேண்டும் என கறாராக சொல்ல இப்போதது வழக்கு நீதிமன்றம் வரை போய் இருக்கின்றது.

விவகாரமான அந்த வழக்கில் சம்பந்தப்பட்ட தொகை £15.95(இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 1600.00)

இங்கே யாரேனும் நமக்கு பார்ட்டி அழைப்பு  கொடுத்தால், இரண்டொரு நாட்களுக்குள், வருகிறேன், அல்லது வர இயலாது என்ற தகவலை அழைத்தவர்களுக்கு தெரிவிக்க வேண்டும்.

அது பார்ட்டி ஒழுங்கு செய்பவர்களுக்கு  திட்டமிட , ஒழுங்கு செய்ய வசதியாயிருக்கும்.

எல்லா பார்ட்டி அழைபிதழிலும் RSVP  என்று அச்சடித்திருக்கும் ,"repondez s'il vous plait" என்ற பிரஞ்சு சொற்றொடரின் சுருக்கம் தான் ஐந்த RSVP , அதாவது நீங்கள் வருகின்றீகளா, இல்லையா என்பதை தயவாக  தெரிவிக்கவும் என்று பொருள்.

வருகிறேன் என்று சொல்லவதை காட்டிலும் வரமுடியாமல் போவதை கண்டிப்பாக தெரிவிக்கவேண்டும் என்பது எழுதபடாத ஒரு நியதி.

இப்படி அச்சடிக்கப்பட்ட அழைபிதழ் வந்தும் பதில் அளிக்காதவர்கள் நாகரீகமற்றவர்கள்  என்று கருதபடுவார்கள்.

எனவே இனி யாரேனும் பார்டிக்கு அழைத்தால் "முடிஞ்சா பார்க்கலாம்",  "நேரமிருந்தால் வருகிறேன்", "ஞாபகம் இருந்தா வருகிறேன்" , அவங்க வந்தால் நானும் வருகிறேன், அல்லது "அவர்கள் வருவதாயிருந்தால் கொஞ்சம் யோசிக்கணும்"....போன்று நம்ம (தண்ட)பாணியில் சொல்ல முடியாது.

 அப்படிவருவதாக சொல்லிவிட்டு  போகாமல்  நின்றுவிட்டால் பின்னாலேய கோர்ட்டு சம்மன் வரும்??!!

பார்ட்டி உஷார்!!!!

நாளைக்கு நடைபெறும் ஒரு 12 வயது பையனின் பிறந்த நாள் பார்டிக்கு நான் வருவதாக RSVP இல் உறுதி செய்து தகவல் அனுப்பியிருக்கின்றேன், மறக்காம போகணும் , யாராவது கொஞ்சம் ஞாபக படுத்தறீங்களா  ப்ளீஸ் ?

பார்ட்டி உஷார்!!!!.

நன்றி!

மீண்டும் ச(சி)ந்திப்போம்.

கோ

11 கருத்துகள்:

 1. இப்படியெல்லாம் "தண்டனை" ஆரம்பித்து விட்டதா...?

  பதிலளிநீக்கு
 2. என்ன பண்றதுங்க தனபால்.

  வருகைக்கு மிக்க நன்றி.

  முன் பதிவில் உங்க ஊர் பேர் பார்த்தீங்களா?

  நட்புடன்

  கோ

  பதிலளிநீக்கு
 3. வணக்கம்
  தேயிலை வீசிப்பட்ட இடத்தில் இன்னும் வாசனையா.... எல்லாம் நம்பிக்கைதான்...

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
 4. அப்படித்தான் சொல்கிறார்கள் ரூபன்
  .டீ குடித்துகொண்டே அதை கேட்க்கும்போது அப்படித்தான் வாசனை வருகிறது.

  நட்புடன்

  கோ

  பதிலளிநீக்கு
 5. அட இது என்னப்பா?! பார்ட்டிக்கு கடைசி தருணத்துல போக முடியாத சூழல் கூட ஏற்படலாம்....இங்க எல்லாம் நாங்க சொல்றது....வருவோம்....ஆனா ....வரமாட்டோம் பாணிதா....ஹ்ஹாஹ்.....ஒரு வகைல பார்த்தா....ஃபுட் வேஸ்ட் தவிர்க்கலாம்....ஆனா இப்படிக் கறாரா இருந்தா நம்ம ஊர்ல இப்படி பண்ணினா....ஒரு வேளை திடீர் விருந்தாளி வந்தா கொடுக்கக் கூட ஒண்ணுமில்லாம நீ சொல்ல வே இல்லையே ஐயை யோ கொடுக்க ஒண்ணுமே இல்லையேனு தர்மசங்கடமான சூழல்....தமிழர்கள் விருந்தோம்பல் பெயர் போனதாயிற்றே....இப்பல்லாம் இங்கயும் மேலை நாட்டுக் கலாச்சாரம் வர ஆரம்பித்து விட்டது. இதில் + ம் இருக்கின்றது....- ம் இருக்கின்றது....

  டீ வாசம் இங்கு வரை அடிக்கின்றது....கோ நண்பரே!

  பார்ட்டிக்கு உங்களை நினைவு படுத்தாம, பார்ட்டி முடிஞ்சு நாங்க வந்துருக்கோம்....எங்களுக்கு பில் அனுப்பி வைப்பீங்களா நண்பரே! ஹஹாஹ்ஹ்

  பதிலளிநீக்கு
 6. அன்பிற்கினிய நண்பர்களே,

  வருகைக்கும், பின்னூட்டத்திற்கும் நன்றி.

  நல்ல வேலை பார்டிக்கு சரியாக போய்விட்டேன்.

  நீங்கள் சொல்வதுபோல், உணவு விரயம் மட்டுமல்லாது, சில வேளைகளில் சிலரது வருகைக்காக விழா தொடக்கத்த கொஞ்சம் காலம் தாழ்த்துவதும், அவர்களின் வருகையை எதிர் பார்த்து சரியாக நேரத்திற்கு வந்தவர்களையும் காக்கவைக்கும் சூழ்நிலையும் உருவாவதை தவிர்க்கலாம்.

  மேலும், அழைத்தவர்களுக்கு நாம் கொடுக்கும் முக்கியத்துவமும், மரியாதையும் என்ன என்பதும் ஒரு கேள்விகுறியாகிவிடுகிறது.

  விருந்தோம்பலில் சிறந்தவர்கள் நாம் என்பதாலேயே,பலரும் அதை சாதகமாக்கிக்கொண்டு விழா அழைப்பை அலட்சியபடுத்துவது ஏற்புடையதல்ல.

  கோ

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பிற்கினிய நண்பர்களே,

   சரியாக சொன்னீர்கள், சில நேரங்களில் இவர்களை ஏன் அழைத்தோம், இப்போ வரபோகின்றார்களா இல்லையா, விழாவை ஆரம்பிப்பதா இன்னும் காக்கவேண்டுமா போன்ற பல விதமான சங்கடங்களும் எழ நேர்ந்துவிடும்.

   என்னை பொருத்தவரை நீங்கள் அந்த சந்தேகமே படவேண்டாம்,

   என்னைக்கு விழானு சொல்லுங்க, அதாங்க உங்க மணிவிழா, ஒரு பத்து நாளைக்கு முன்னாடியே வந்து பந்த கால் நடுவதிலிருந்து விருந்து முடிஞ்சி மண்டபத்தை கிளியர் செய்து மொய் கணக்கெல்லாம் பார்த்து , உங்கள ஹனி 3க்கு அனுப்பரவரைக்கும் கூடவே இருந்து எல்லா வேலைகளையும் பார்க்க காத்திருக்கின்றேன்.

   என்ன ஒரு விஷயம்னா ........(fill in the blanks)

   வருகைக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி.

   கோ

   நீக்கு
 7. prachanai fb.l kelvi paddirunthen.
  athai ungal payana anupavathudan inaithu ezuthiyathu arumai sir.

  பதிலளிநீக்கு
 8. பார்ட்டிக்கு இங்க கூப்பிடுறதே "with expectation"..
  நீங்க பார்டிக்கு போகவில்லை என்றால் double loss தானே for the host??
  Not surprised in future if they send a bill because of undervalued gifts in proportion to the expenses incurred for you, who knows?!

  So மொய் வைக்க மறந்துடாதிர்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நண்பரே,

   மொய் இல்லாமல் கை நனைக்க கூடாதது என்று நீங்கள் சொல்வது மிக சரியே.

   நட்புடன்

   கோ

   நீக்கு
 9. மகேஷ்,

  வருகைக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி.

  பரீட்ச்சை எல்லாம் முடிந்ததா?

  டீ பார்டீ நல்லா இருந்ததா?

  கோ.

  பதிலளிநீக்கு