பின்பற்றுபவர்கள்

புதன், 21 ஜனவரி, 2015

நடுவுல கொஞ்சம் (இந்த) பக்கமே காணோம்?


உள்ளேன் ஐயா!

நண்பர்களே,

கடந்த இரண்டு வாரங்களாக பதிவின் ஊடாய்  உங்களோடு படைப்புகளை பகிர்ந்து கொள்ள முடியாமல் போனதற்கு மிகவும் வருந்துகின்றேன்.

அதே சமயத்தில் அதற்க்கான காரணத்தை அறிந்தால் மிகவும் மகிழ்ச்சி அடைவீர்கள் என்றும் நம்புகின்றேன்.


கடந்த பத்துக்கும் மேலான ஆண்டுகளாக  ராயல் (ஆங்கில) கலை இலக்கிய நாடக எழுத்தாளர்கள் சங்கத்தில் அங்கத்தினராக இருக்கும் எனக்கு சங்கத்தின் மூத்த உறுப்பினரும் ஷேக்ஸ்பியர் இலக்கிய அறக்கட்டளையின் செயலாளருமான அன்பர்  மூலமாக ஆங்கில திரை உலக பிரமாக்களுள் ஒருவரான பார்பரா ப்ரோக்கோலி அலுவலகத்திலிருந்து வந்திருந்த  ஒரு அறிவிப்பை காண நேர்ந்தது.

அதில் , அவர்கள் 2016 ல்  துவங்கி 2018 ல் வெளியிட திட்டமிட்டிருக்கும் அடுத்த பூஜ்யம் பூஜ்யம் ஏழு  திரை படத்திற்கான புது முக வசன கர்த்தாவை தேடுவதாகவும், அந்த தகுதி போட்டியில் பங்குகொள்பவர்கள் சரியாக 1200 வார்த்தைகள் கொண்ட ஆறுபேர் பேசக்கூடிய வசனங்களை படம் திரையில் வெளியிடப்படும் ஆண்டினை கருத்தில்கொண்டு அதற்கேற்றாற்போல் விஷயங்களையும் உள்ளடக்கியபடி எழுதி அனுப்பும்படி கேட்டிருந்தார்கள்.

இந்த போட்டியில் பங்குகொள்பவர்கள், எங்களை போன்று, அங்கிகரிக்கப்பட்ட சங்கங்களின் உறுப்பினர்களாக  மட்டுமே இருக்க வேண்டும் என்றும் , அவர்கள் குறிப்பிடும் அந்த காட்சிக்கு ஏற்றார்போல வசனம் அமைந்திருக்க வேண்டும்  எனவும்,, அதே சமயத்தில் எளிமையான எல்லா நாட்டு மக்களுக்கும் புரியும் வண்ணம் கொஞ்சம் சாதாரண நடையில் இருக்கவேண்டும் என்றும், அந்த வசனங்கள் நமது சொந்த வசனம் என்றும் இதுவரை அவற்றை வேறு எங்கேயும் பயன் படுத்தவில்லை என்றும் சங்கத்தின் தலைவர் செயலரின் ஒப்புதலுடன் சிறப்பு பதிவு தபால் மூலம் அனுப்பி வைக்கப்பட வேண்டும் என்றும் பல நிபந்தனைகள் கொடுக்கபட்டிருந்தன.

சங்கத்தின் உறுப்பினர்கள் எல்லோரும் ஒருமனதாக இந்த தகுதி போட்டியில் பங்குகொள்ளும்படி என்னை சிபாரிசு செய்து தகவல் அனுப்பிவிட்டனர்.

மிகுந்த தயக்கம் அதே சமயத்தில் மிகுந்த சந்தோசம் - பயம் - நம்மால் முடியுமா என்ற தயக்கம் - கொஞ்சம் மயக்கம்.

சரி மலையை நாம் என்ன தங்க சங்கிலி கட்டியா இழுக்கபோகிறோம்? வந்தால் மலை வரட்டும்- போனால் ..... என நினைத்து , மேற்கொண்டு விவரங்கள் கேட்டறிந்தேன்.


அதில், கதா நாயகனின் கூட்டாளி பெண்ணும், அவர்களுக்கு உதவியாய்  இருந்த ஒரு எகிப்திய கப்பல் அதிபரும் வில்லனிடம் மாட்டிகொண்டனர், அவர்களை ரகசியமாக அதே சமயத்தில் மிகவும் பாதுகாப்பான ஒரு அதி நவீன அறையில் இரண்டு அடி தூரத்திற்கு மேல் எந்த திசையில் அவர்கள் நகர்ந்தாலும் மின்னணு கதிர்கள் பாய்ந்து இறந்துவிடுவார்கள் என்பதாக வடிவமைக்கப்பட்ட ஒரு மேடைபோன்ற பகுதி அதை சுற்றி    வில்லனின் தொழில் கூட்டாளியும் அவனது பெண் உதவியாளும் இரண்டு பாதுகாப்பு ஆட்களும் மட்டுமே இருக்கும் ஒரு காட்சி.

அதில் வில்லன் , கதாநாயகனின் மணிக்கட்டின் உள்ளே பொருத்தி வைக்கபட்டிருக்கும் ஒரு மின்னணு நுண் கருவியினை செல் போன்  மூலம் செயல் இழக்க செய்யும் பாஸ் வோர்டை கேட்பதும், அடுத்து கதாநாயகனின் நோக்கம் , அவனது செயல்பாடு என்ன என்பதையும், இடையில் கதா நாயகனின் கூட்டாளி பெண்ணும், கப்பல் அதிபரும் பேசுவதாகவும் அந்த வசனங்கள் அமைந்திருக்க வேண்டும்.

அந்த 1200 வார்த்தைகளில் வில்லனின் கூட்டாளியும் அவனது உதவி பெண்ணும் பேசுவதாகவும், எல்லா பேச்சுக்களும் ஒன்றுக்கொன்று தொடர்புடையதாகவும்  ஒரு வார்த்தை அந்த மொத்த வார்த்தைகளின் எண்ணிக்கையில்  நான்கு முறைக்கு மேல் திருப்பி திருப்பி வரகூடாது, ஆம் , இல்லை என்பதும் மொத்தமாக 12 முறைக்கு மேல் இருக்க கூடாது  என்றும் நிபந்தனைகள் விதித்திருந்தனர்.

கடந்த அக்டோபர்  மாதமே அதற்க்கான பணிகளை ஆரம்பித்து பல முறை மீண்டும் மீண்டும் சரி பார்த்து, சங்கத்தின் பதிவாளர் மூலமும் பல திருத்தங்கள் செய்யப்பட்டு கடந்த நவம்பர்  மாதம் 12ஆம் தேதி  (முடிவு தேதி பிப்ரவரி 14)  சிறப்பு பதிவு தபால் மூலம் அனுப்பி வைத்தோம், மின்னஞ்சல் மூலம் கண்டிப்பாக அனுப்பக்கூடாது என்பதும் ஒரு தலையாய நிபந்தனை.

நவம்பர்  12 ஆம்  தேதி அனுப்பி வைக்கப்பட்ட தபாலுக்கு கடந்த டிசம்பர் 15 ஆம் தேதி  எமது பதிவு தேர்ந்தெடுக்கப்பட்ட மூன்று பதிவுகளில் ஒன்று என்றும் அந்த மூன்றில் ஒன்றை பிப்பரவரி 14 க்கு பிறகு முடிவு செய்ய போவதாகவும்  தகவலும் மின்னஞ்சல் மூலமாக சங்கத்தின் செயலருக்கு அனுப்பி வைக்கபட்டிருக்கிறது.

கூடவே அவர்கள் சொல்லி இருந்த  ஐந்து   விஷயங்கள்.
:
ஒன்று:

 வில்லன் பேசும்  வசனத்தில்  "ஓ மை காஷ் "(காட் என்பதற்கு பதில் பரவலாக இப்படித்தான் சொல்கிறார்கள்)  என்பதில் " ஓ" என்பது ஆங்கிலத்தில் ஒரு வார்த்தையாக எடுத்துகொள்ள முடியாது அது ஒரு எழுத்து மட்டுமே , எனவே 1200 வார்த்தைகளில் ஒரு வார்த்தை குறைவாகவே உள்ளது, இதை மாற்ற விரும்புகின்றீர்களா?

இரண்டு:

இதுவரை அங்கிகரிக்கப்பட்ட சங்கங்கள் மூலம் எங்களுக்கு கிடைத்த  மொத்த பதிவுகள் 48, அதில் தேர்ந்தெடுக்கப்பட்ட மூன்றின் எழுத்தாளர்களையும் நேரில் சந்திக்க தயாரிப்பு நிர்வாகத்தின் கதை குழு விரும்புவதாகவும் , உங்களுக்கு வாழ்த்துக்கள் என்றும் குறிப்பிட்டு இருந்தனர். 

மூன்று:

உங்களின் வசனங்கள் ஏற்புடையதாக இருந்தால்  நீங்கள் நேரில் வரும்போது  ஒப்பந்தம் கையெழுத்திட  மார்ச் மாதம் இரண்டு வாரங்கள்  வாஷிங்டன் வரவேண்டி இருக்கும் அப்படி வரும்போது "மே பிளவர் ஹோட்டலில்" தங்க வசதிகள் செய்து தரப்படும் எனவே உங்கள் கடவு சீட்டின் பிரதிகளை பிப்ரவரி 20 ஆம் தேதிக்குள் எங்களுக்கு கிடைக்கும்படி அனுப்பி வைக்கவும்.

நான்கு:

பெயர் போடும்போது (தலைப்பு அட்டையில்) "கோ" என்றுதான்  போடணுமா அல்லது வேறு ஏதேனும் பெயர் போட விரும்புகின்றீர்களா?

ஐந்து;

மேலும் இது சம்பந்தமாக நீங்கள் யாரிடமும் ஒன்றம் சொல்லகூடாது அப்படி வெளியில்  சொல்லியிருப்பதாக தகவல் கிடைக்கும் பட்ச்சத்தில் உங்கள் பங்கேற்ப்பு உடனடியாக ரத்து செய்யப்படும் என்ற நிபந்தனையை கொட்டை எழுத்துக்களில்  அனுப்பி இருந்தனர்.

ஷ்..ஷ்..ஷ்...ஷ்....யார்கிட்டேயும்  சொல்லிடாதீங்க ப்ளீஸ்.

எனவே தான் இந்த பதிவில் எல்லாவற்றையும் கூடுமான வரையில் தமிழிலேயே  எழுதி இருக்கின்றேன் பூஜ்யம் பூஜ்யம் ஏழு உட்பட.


இப்போது புரிகின்றதா ஏன் நடுவுல கொஞ்சம் இந்த பக்கமே காணோம் என்று.

பின்னே  எப்படி வருவேன் - பதிவுகள்  எழுதுவேன் இதுபோன்ற கண்ட கண்ட பகல் கனவுகள் கண்டு நேரத்தை வீணாக்கி கொண்டிருந்தால்.


நன்றி, 

மீண்டும் ச(சி)ந்திப்போம்.

கோ

16 கருத்துகள்:

 1. கோ .. ஒரு நிமிஷம் ஆனந்தத்தில் ஐக்கியமானேன். தமக்கு நினைவு இருக்கும் இருக்கும் என்று நினைக்கின்றேன். பல வருடங்களுக்கு முன் தாம் திரை கதை வசன கர்த்தாவாகவும் அடியேன் கமரா மென் ஆகவும் கலந்து கொண்ட ஒரு நிகழ்ச்சி நினைவிற்கு வருகின்றது. அன்றே நாம் இருவரும் படிப்பு வேண்டாம் என்று இந்த துறையில் வராமல் விட்டது தவறு என்று இன்றும் நான் நினைக்கும் நேரம் உண்டு.
  இருந்தாலும் இந்த பதிவை (கடைசி வரி தவிர ) படிக்கையில் .. அடே டே , நாம் தவறவில்லை. நண்பன் கோ .. காரியத்தை சாதித்து விட்டான் என்று நினைத்து சந்தோஷ படுகையில் ....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. விசு,

   உங்களின் ஆத்மார்த்தமான ஆனந்தத்துக்கு மிக்க மகிழ்ச்சி.

   அன்று நடந்த விழயங்களின் தொடர்ச்சிதானோ இவையெல்லாம்.

   வாழ்த்துகளுக்கு நன்றி நண்பா.

   கோ

   நீக்கு
 2. வெற்றி பெற வாழ்த்துக்கள் ஐயா...

  தொடர்க...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //பின்னே எப்படி வருவேன் - பதிவுகள் எழுதுவேன் இதுபோன்ற கண்ட கண்ட பகல் கனவுகள் கண்டு நேரத்தை வீணாக்கி கொண்டிருந்தால்.//

   நீக்கு
  2. விசு,

   ஆழ்ந்து படித்து பின்னூட்டம் அளித்தமைக்கு அடியேனின் நன்றிகள்..

   கோ

   நீக்கு
 3. haahaahaa sirikkiratha illa vangiya mokkaikku alurathanu ore kulappamaa irukku:-) sir.

  nalama ningal sir.

  idaivelikku piraku mindum ungal pathivai thodarkiren. neram irukkumpothu palaya pathivukalaiyum padikkiren sir.

  nallaa eluthuringa thodarnthu ezuthungal.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மகேஷ்,

   மீண்டும் பதிவு பக்கம் வந்ததற்கு மிக்க நன்றியும் மகிழ்ச்சியும்.

   தேர்வுகளை நல்ல முறையில் முடித்திருப்பீர்கள் என நம்புகின்றேன்,

   மகேஷுக்கு மகத்தான வெற்றி கிடைக்க வாழ்த்துகின்றேன்.

   உங்களுக்காகவே எழுதிய "சீசர்" படித்தீர்களா?

   மொக்கை வாங்கியதை குறித்து வருத்தம்.

   பாராட்டுக்கு நன்றி.

   மற்ற பதிவுகளுக்கான மகேஷின் பின்னூட்டத்திற்காக காத்திருக்கின்றேன்.

   அன்புடன்

   கோ

   நீக்கு
 4. எமது வாழ்த்துகளும் நண்பரே....

  பதிலளிநீக்கு
 5. Fantastic news & Congrats Ko!
  Heights of globalization in 2015 so early... Finally 007 is going to speak in Chennai Tamil and I can't wait to hear him..

  படம் எப்போ வெளிவருகிறது - தீபாவளிக்கா அல்லது பொங்கலுக்கா ?
  1200 நாட்கள் ஓட வாழ்த்துக்கள் !! (for 1200 words)

  ஆனால் எனக்கு ஒரேயொரு சந்தேகம் - நீங்கள் கதை எழுதுகிற விசயம் அந்த பார்பராவுக்கு தெரியுமா ? :)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. NONYMOUS நண்பருக்கு(!!!)

   பதிவை படித்து பின்னூட்டம் அளித்தமைக்கு மிக்க நன்றி.

   பார்பரா அவர்களுக்கு என்னை தெரியாது , எங்களின் எழுத்தாளர்கள் பேரவை மூலமே தொடர்பு கிடைத்தது.

   மேலும் 007 தமிழில் வெளிவருமா என தெரியவில்லை அதில் 1008 சட்ட சிக்கல்கள் வரும் எனவே சென்னை தமிழில் வசனங்கள் முயற்ச்சிக்கவில்லை அதை அவர்களும் கேட்கவில்லை, ஒருவேளை அவர்கள் கேட்டால் ஒரு சில காட்ச்சிகளை கடலூரில் எடுக்க சிபாரிசு செய்கிறேன்.

   வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி.

   அப்பப்போ கொஞ்சம் இந்தபக்கம் வாங்க.

   நன்றி.

   கோ.

   நீக்கு
 6. வாழ்த்துகளுக்கு நன்றி நண்பா.

  கோ

  பதிலளிநீக்கு
 7. ஹஹஹஹஹஹஹ்! நாங்க ஏமாறலையே! ஏன்னா நாங்க 007!!!! எங்களுக்குத் தெரியாத ரசசியமா?!!

  மிகவும் ரசித்தோம் நண்பரே! அப்படியே நம்ப வைக்கும் படி (நாங்க நம்பலைன்றது வேற விஷயம்) எழுதிய நடை அசாத்தியம்....

  பதிலளிநீக்கு
 8. அன்பிற்கினிய நண்பர்களே

  007 பதிவை அதாவது உங்களின் பதிவை ரசித்து அதை குறித்த பின்னூட்டத்திற்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி.

  நட்புடன்

  கோ

  பதிலளிநீக்கு
 9. வணக்கம் அரசே,
  இந்த முறை இங்கு நான் மொக்கை வாங்கியதை ஏற்றுக்கொண்டே ஆகனும்,,,,,,,
  உண்மை என்று தான் நினைத்துப் போனேன்,,,,,,,,,,
  ஆஹா இங்கு கோடம்பாக்கம் தங்களுக்கு சரியாக இருக்குமே, ஏன் முயற்சிக்கல,
  வாழ்த்துக்கள்,,,,,

  பதிலளிநீக்கு
 10. வருகைக்கு மிக்க நன்றிகள்.

  கோ

  பதிலளிநீக்கு