" டார்லிங்" தம்பிக்கு
தம்பி ஜி. வீ. பிரகாஷ் குமார் அவர்களுக்கு.
பொதுவாக மட்டுமல்ல குறிப்பாக கூட நான் திரை படங்களை பற்றியோ திரை நடிகர் நடிகைகளை பற்றியோ தொழில் நுட்ப்ப கலைஞர்களை பற்றியோ விமர்சனம் செய்ய விரும்பாதவன், இதுவரை அப்படி எதுவும் செய்யாதவன்.
இப்போதுகூட, கொஞ்சம் அரை மனசோடுதான் இந்த பதிவை எழுதுகின்றேன்.
சமீபத்தில் திருட்டு வீ சி டி யில் அல்லாமல் இணைய தளத்தில் நீங்கள் இரண்டாவதாக நடித்து முதலில் வெளியிடப்பட்ட டார்லிங் திரைப்படத்தை பார்த்தேன்.
ஏறக்குறைய தமிழ் திரைப்படங்களை பார்க்க அவ்வளவாக வாய்ப்பும் வசதியும் இல்லாததால் படங்கள் பார்ப்பது கிடையாதது.
எனினும், நீங்கள் நடித்த திரைப்படம் எப்படி இருக்கும் என்ற ஆவல் மிகுதியாலும் ஒரு சிலரின் கட்டாயத்தின் பேரிலும், இந்த திரைப்படத்தை பார்க்க நேர்ந்தது.
தமிழ் திரைப்படங்கள் வெளியிடப்படும் திரையரங்குகள் நாங்கள் இருக்கும் பகுதியில் அதிகம் இல்லை.
சமயங்களில் சில படங்கள் வந்தாலும் ஓரிரு நாட்கள் அதுவும் ஒரு சில காட்சிகள் மட்டுமே திரை இடப்படும், எனவே அதற்காக நேரம் ஒதுக்கி போய் பார்க்கும் அவசியம் ஏற்பட்டதில்லை.
அதனால் உங்களின் இசை ஞானத்தின் பால் ஒரு மரியாதையும், ஈர்ப்பும் கொண்டிருக்கும் என்போன்ற ஒரு சில நபர்களின் உந்துதலின் பேரில் இந்த படத்தை பார்க்க விரும்பினேன்.
தம்பி, நீங்கள் நன்றாக இசை அமைக்கின்றீர்கள், இந்த சின்ன வயதிலேயே உங்களிடம் அபாரமான இசை அறிவும் ஞானமும் இருக்கின்றது.
இந்த படத்திலும் அது தெள்ளிய நீரோடைபோல தெள்ள தெளிவாக தெரிகின்றது.
மிகவும் ரசித்தோம் உங்கள் , பாடல்களை, பின்னணி இசையை.
உங்கள் நடிப்பு என்று நான் எதை சொல்வது என்றே தெரியவில்லை.
அப்பாவியாக அல்லது சோகமாக முகத்தை வைத்திருப்பதுதான் நடிப்பு என்றால் அந்த வேலையை செய்த உங்கள் சவரம் செய்யாத அந்த தாடிக்குதான் பாராட்டு தெரிவிக்க வேண்டும்.
முதல் படத்தில் நடித்த எத்தனையோபேர்களின் படங்களை நான் பல காலங்களுக்கு முன் பார்த்து வியந்திருக்கின்றேன், திரைப்பட வாசனையே இல்லாத எத்தனையோ புதுமுக நடிகர்கள் என்னாமா நடித்து எம்மை வியப்பில் ஆழ்த்தி இருக்கின்றனர்.
நீங்கள் அந்த படத்தில் வருகின்றீர்கள், சில சமயம் ஓடுகின்றீர்கள் என்பதை தவிர நடித்தீர்கள் என என்னால் ஒத்துக்கொள்ள முடியாது.
நீங்கள் இன்னும் கொஞ்சம் நல்ல பயிற்சி எடுத்து நடிக்க வந்திருக்கலாம்.
எல்லோரும் முதல் படத்திலேயே முத்திரை பதித்துவிடுவார்கள் என்றும் சொல்ல முடியாது, அதே சமத்யத்தில் முதல் பட வாய்ப்பை நழுவ விடவும் மாட்டார்கள், தனித்து தெரியும் அளவிற்கு முயற்சி செய்வார்கள்.
இதில் உங்களுக்கு நடிக்க போதுமான வாய்ப்பு கிடைக்கவில்லையா அல்லது இயக்குனருக்கு உங்களை வேலை வாங்கவோ, உங்களின் திறமைகளை வெளிகொனரவோ திறமை இல்லாமல் போய்விட்டதா?
ஒரு சில புதிய நடிகர் நடிகையரின் பேட்டிகளோ நிகழ்ச்சிகளையோ தொலைகாட்ச்சிகளில் காண நேரும்போது அவர்கள் தங்களை எல்லாவிதங்களிலும் திரை துறைக்கு தேவைப்படும் அனைத்து பயிற்சி களையும் செய்த பின்னரே திரை வாய்ப்பு தேடி வந்ததாகவும் சொல்வதை கேட்க்கும் போது உள்ளம் மகிழ்கின்றது , அவர்களின் நடிப்பும் எப்படி இருக்கும் என்று யூகிக்க முடிகின்றது.
உங்களின் நடிப்பு இந்த டார்லிங் திரைப்படத்தில் எங்குமே காண முடியவில்லை.
நண்பர் கருணாவும் அவரோடு வரும் மற்ற வரும் நடிப்பில் மின்னுகின்றனர் என்று நான் சொன்னால் அது மிகை அல்ல.
உங்களுக்கு இசை நன்றாக வசப்படுகின்றது.
கொஞ்சம் ஆழ கால் பதியுங்கள் அதில், மற்றபடி உங்களின் நடிப்பு கொஞ்சமாவது(?) மெருகேற்றிய பிறகு நல்ல இயக்குனரிடம் பயிற்சி பெற்று அதன் பிறகு யோசித்து செய்யுங்கள்.
முதல் இம்ப்ரஷன் என்னை பொருத்தவரை நன்றாக அமையவில்லை என்றே தோன்றுகின்றது.
சிலர் சொல்லுவார்கள், அருமையாக நடித்திருக்கின்றீர்கள், இது முதல் படம் போலவே தெரியவில்லை ஏதொ இதற்க்கு முன் குறைத்தபட்சம் ஒரு பத்து படங்களிலாவது நடித்திருக்கவேண்டும் என்று சொல்லும் அளவிற்கு பிரமாதமாக நடித்திருக்கின்றீகள் என்று. தயவு செய்து இந்த தேன் தடவிய விஷ வார்த்தைகளுக்கு மயங்காதீர்கள்.
உங்களுக்கு இசை நன்றாக வசப்படுகின்றது.
இந்த படத்தில் நீங்கள் கொஞ்சம் கூட நடிக்கவே இல்லை - நடிக்கவே தெரியவில்லை என்னும் தகவலும் உண்மையும் ஒரு "பென்சிலால்" வரையப்பட்ட கோடுதான் இனியும் நீங்கள் நடிப்பதாயிருந்தால் கொஞ்சம் பயிற்ச்சியும் கவனமும் சேர்த்து அத்தோடு கொஞ்சம் கதைகளையும் தேர்வு செய்து நடித்து நல்ல பெயர் எடுத்து இந்த பென்சிலின் கோட்டை அழிக்க முயற்சி செய்யுங்கள்.
ஆற்றல் மிக்க எத்தனையோ தமிழ் இளைஞர்கள் வாய்ப்புக்காக அலைந்துகொண்டு இருக்கும் இந்த நாட்களில் உங்களைபோன்றோர் அந்த அறிய வாய்ப்பை சரியாக பயன்படுத்திக்கொள்ளாமல் வீணடிப்பதாக கருதுகின்றேன்.
உங்களால் முடியும் முயலுங்கள், பயிற்சியுடன்.
அடுத்து உங்கள் மெருகேறிய நடிப்பாற்றலோடு வெளிவரும் திரைப்படம் எந்தன் இந்த பதிவின் எண்ணிக்கையைபோல குறைந்த பட்ச்சம் 50 வாரங்களாவது அரங்கு நிறைந்த காட்சிகளாக உலகமெங்கிலும் இல்லாவிட்டாலும் தமிழகத்திலாவது வெற்றி நடைபோட வேண்டும் என்று வாழ்த்துகின்றேன்.
உங்கள் மேல் எனக்கு எந்த தனிப்பட்டு வெறுப்போ பகையோ கோபமோ இல்லை என்பது உங்களுக்கும் தெரியும் என்று நம்புகின்றேன்.
இவை முற்றிலும் என் தனிப்பட்ட கருத்து மட்டுமே.
யாரையும் பார்த்து சூடு போட்டுக்கொள்ளாதீர்கள்.
உங்களுக்கு இசை நன்றாக வசப்படுகின்றது.
வாழ்க நலமுடன்.
கோ.