வாசம்! தேசம்!! சுவாசம்!!!
நண்பர்களே,
நாம் நம்முடைய பாரம்பரியமான விழாக்களை, பண்டிகைகளை தமிழ் நாட்டில் அல்லது மற்ற மாநிலங்களில் அந்தந்த குறிப்பிட்ட சுபயோக சுபதினத்தில் அந்தந்த கொண்டாட்டங்களின் பரிபூரண வழிமுறைகளோடும் , முழுமையான தாத்பரியங்களோடும், சடங்கு சம்பிரதாயங்களோடும் கொண்டாடி மகிழ்வதைப்போல வெளிநாடுகளில் வசிக்கும் நம்மவர்கள் கொண்டாடுவது என்பது சாத்தியமல்ல.
எந்தெந்த நாடுகளில் இருக்கிறோமோ அந்தந்த நாடுகளின் சட்டவிதிகள், சுற்று சூழல்,பாதுகாப்பு, வேலை நாட்கள், சீதோஷணம் மற்றும் நடைமுறை சாத்தியக்கூறுகளின் அடிப்பையில்தான் நமது பண்டிகைகள் மற்றும் சுதந்தர தினம், குடியரசு தினம் போன்ற சிறப்பு நாட்களை, சில பல சமரசங்களோடு கொண்டாடி மகிழமுடியும்.
இதுகுறித்து ,"புஷ்ப வனத்தில் புஸ்வான வேடிக்கை"
எனும் எமது பதிவு ஒன்றில் குறிப்பிட்டிருந்தது நினைவிருக்கும் என நினைக்கின்றேன், இல்லையேல் அந்த பதிவையும் வாசித்து பாருங்கள்.
அவ்வகையில் நம் தமிழ்ப் புத்தாண்டு தினமான இந்தமாதம் 14 ஆம் தேதி அன்றே இங்கே இங்கிலாந்தின் பல நகரங்களில் வசிக்கும் நம் மக்களால் கொண்டாடி மகிழும் வாய்ப்பு வாய்க்காமல் போனது.
எனினும், வாசம் செய்யும் தேசம் இங்கிலாந்து என்றாலும் நமது சுவாசம் எப்போதும் தமிழென்பதால் ஆங்காங்கே வாழும் தமிழ்மக்கள் அந்தந்த பகுதிகளில் வாழும் நம்மவர்களின் சவுகரியங்களை கருத்தில் கொண்டு வெவ்வேறு நாட்களில் நம் தமிழ்ப் புத்தாண்டை, குழந்தைகள் , பெரியவர்கள் நண்பர்கள் என கூடி மிகவும் சந்தோஷமாகவும் மகிழ்ச்சி ஆரவாரத்தோடும் கொண்டாடி மகிழ்ந்திருப்பார்கள்.
அவ்வகையில் சென்ற ஞாயிறு அன்று, ஏப்ரல் 27 ஆம் நாள் இங்கிலாந்தின் பெரு நகரங்களில் ஒன்றான GLOUCESTERSHIRE எனும் நகரிலுள்ள தமிழ்ச்சங்கத்தின் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தமிழ்ப் புத்தாண்டு சிறப்பு கொண்டாட்ட நிகழ்ச்சியில் பங்கு பெறும் பெரும் வாய்ப்பு கிடைக்கப்பெற்றேன் .
கொண்டாட்டத்திற்கான உள் மற்றும் திறந்தவெளி வளாகங்கள் கொண்ட பிரமாண்டமான அரங்கம் நறுமனம் கமழும் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.
நம் மக்கள், குடும்பம் குடும்பமாக, நம்முடைய பாரம்பரிய, கலாச்சார வண்ண பட்டாடைகளணிந்தும், கூந்தல் தழுவும் மல்லிகை சரங்களோடும் ஆடவர் பட்டு வேட்டி சட்டைகள் அணிந்தும், குழந்தைகள் சிறுவர் சிறுமிகள் வனப்புமிகு ஆடை அலங்காரங்களோடு வந்திருந்து உள்ளரங்கை புன்னகைப்பூக்களைக்கொண்டும் மகிழ்ச்சி சிரிப்பொலிகளைக்கொண்டும் நிரப்பி , ஒருவருக்கொருவர் கரம் கூப்பி வணக்கம் சொல்லியம் அன்பின் வெளிப்பாடாக கட்டித்தழுவியும் , நலம் விசாரித்தும் முகமும் அகமும் மகிழ்ச்சியில் முகிழ்ந்து மகிழ்ந்த அந்த உணர்வின் தருணத்தை வர்ணிக்க வார்த்தைகளேது.?
உள்ளரங்க வாசலில் வரவேற்பு குழுவினர், உள்ளே வருபவர்களுக்கு இரு கரம் கூப்பி வணக்கம் கூறி, இனிப்பு வழங்கி, சந்தனம் கொடுத்து, பன்னீர் தெளித்து புன்னகையுடன் வரவேற்ற பாங்கு , தமிழ் நாட்டில் மண் வாசனையோடு நடைபெறும் குதூகல கொண்டாட்ட நிகழ்ச்சியில் பங்குகொண்ட உணர்வினை கொடுத்து வாசலிலேயே எல்லோரையும் நெகிழ்ச்சிக்குள்ளாக்கினர்.
விழா நிகழ்ச்சிகள் தொடங்குவதற்குமுன், வந்திருக்கும் அனைவரையும் குறிப்பாக முதன்முறையில் இது போன்று தமிழ்சங்கம் நடத்தும் விழாவிற்கு வந்திருக்கும் அனைவரையும் மேலும் உற்சாகப்படுத்தும் வகையிலும், வெட்கம், தயக்கம், சங்கோஜம் போக்கவும் மற்றும் இறுக்கமான சூழ்நிலை உருவாகிவிடக்கூடாது என்ற அடிப்படையிலும் நிகழ்ச்சி தொகுப்பாளினி ரினி அவர்கள் வந்திருந்த விருந்தினரில் விருப்பம் உள்ளவர்களை மேடைக்கு வரவழைத்து அவர்கள் விரும்பும் ஏதாவது ஒரு தலைப்பில் சிறிது நேரம் உரையாடும்படி கேட்டுக்கொண்டார் ஆனால் பேசுபவர்கள் ஒரு வார்த்தைகூட ஆங்கிலத்தில் பேசக்கூடாது எனும் நிபந்தனையையும் விதித்தார்.
சவாலை ஏற்றுக்கொண்டு மேடை ஏறிய இருவரும் தங்களால் இயன்றவரை தமிழில் முழுமையாக பேசி அனைவரையும் கவர்ந்த நிகழ்ச்சி உண்மையிலேயே அரங்கத்தை கலகலப்பாக்கி அடுத்தடுத்த நிகழ்ச்சிகளை கண்டு ரசிக்க உற்சாகமூட்டி தயாராக்கிய யுக்த்தி அனைவரையும் பெரிதும் கவர்ந்தது.
விழா சரியாக காலை 10 மணிக்கு குத்துவிளக்கேற்றப்பட்டு அரங்கம் நிறைந்த நம்மவர்கள் எழுந்து நின்று , இசைக்கப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்து ஒலிக்க கூடவே எல்லோரும் இணைந்துபாடி அமர்ந்தனர்.
வரவேற்புரை நிகழ்த்தி, வந்திருந்த அனைவரையும் திரு.ரவிஷங்கர் வரவேற்று அரங்க பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அறிவித்தார்
அதற்கு பின்னர் நடந்த ஒரு சிறப்பு நிகழ்ச்சி அரங்கை மட்டுமல்லாது ஒட்டுமொத்த வளாகத்தையுமே அதிர வைத்தது சுமார் அரை மணி நேரத்திற்கு.
அது என்ன நிகழ்ச்சி?
பேர சொன்னாலே சும்மா அதிருமளவிற்கான நிகழ்ச்சி.
அது என்ன நிகழ்ச்சி என்ன பொருட்கள் .... என்ன அதிர்வலை.... நாளை பார்க்கலாம், பொறுமை ப்ளீஸ்.
நன்றி.
மீண்டும் ச(சி)ந்திப்போம்.
கோ.
ஆமாம் நீங்க சொல்வது போல் அங்குஎல்லாம் நம் பண்டிகைகள் கொண்டாடுவதில் சில சிரமங்கள் இருக்கும் தான்.
பதிலளிநீக்குவெளிநாட்டில் வசிக்கும் நம்மவர்கள் இப்படியான பண்டிகைகளைக் கொண்டாடுவதில் எனக்கு வரும் சந்தேகம்.
நான் நினைத்திருந்தது, இங்கு 14 அன்று புத்தாண்டு விடிகிறது என்றால் வெளிநாடுகளிலும் 14 பிறக்கும் அன்றுதான் புத்தாண்டு என்று. நான் சொல்வது தமிழ் மாதங்களின் தேதி அடிப்படையில். அப்படித்தான் கொண்டாடுவார்கள் என்று இது வரை அறிந்திருந்தேன். ஆனால் அதிலும் கூட ஒரு சிலர் அவர்கள் பின் பற்றும் மடாதிபதி கணிக்கும் நேரத்தை ஒட்டி அதாவது அமெரிக்கா என்றால் அமெரிக்கா மற்றும் இந்திய நேரத்தின் பஞ்சாங்க நாழிகைக் கணக்குப் படி மற்றும் மீன மேஷம் இத்யாதிகளின் அடிப்படையில் முந்தைய நாளே அங்கு கொண்டாடும்படி சொல்வதாக அறிந்தேன்.
இதில் எனக்கு நிறைய கேள்விகள் உண்டு ஆனால் பொதுவெளி என்பதால் தவிர்க்கிறேன்.
கீதா

வணக்கம்.
நீக்குவருகைக்கும் தங்கள் கருத்திற்கும் மிக்க நன்றிகள்.
ஆம், வெளிநாட்டில் வசிக்கும் நம்மவர்களுக்கிருக்கும் நெருக்கடிகளில் இதுபோன்ற நம் பாரம்பரியமான பண்டிகைக்கொண்டாட்டங்களை அந்தந்த விசேஷித்த நாட்களில் கொண்டாடுவது என்பதும் ஒன்று.
ஆனாலும் அதை அப்படியே விட்டுவிடாமல் கூடுமானவரையில் கொண்டாடி மகிழ்வதும் மன நிறைவை தருகிறது. பெரும்பான்மையான நாடுகளில், மணி நேரம் வித்தியாசப்பட்டாலும் தேதிகள் அப்படியேதான் அமைந்துவிடுகிறது.
பதிவுகளை தொடர்ந்து வாசித்து தங்கள் மேலான கருத்துக்களை தெரிவித்துவரும் தங்களின் அன்பிற்கு நான் தலை வணங்குகிறேன்.
தங்களுக்கான சந்தேகங்கள் என்னவென்பதை அறிய ஆவலாய் இருக்கிறேன்.
ஆங்கிலம் கலக்காமல் தமிழ் பேசுவது என்பது அதுவும் மேடையில் ஒரு சில நிமிடங்களுக்குள் என்பது சமீப காலத்தில் பலருக்கும் சிரமமாக இருக்கிறதுதான். அப்படிப் பேசியவர்களுக்கு வாழ்த்துகள்!
பதிலளிநீக்குஅடுத்த அந்த அதிர வைத்த நிகழ்ச்சி என்ன என்று ஆவலுடன் தொடர்கிறேன், கோ
கீதா
வணக்கம்.
நீக்குவருகைக்கும் தங்கள் கருத்திற்கும் மிக்க நன்றிகள்.
ஆங்கிலம் தவிர்த்து தமிழ்பேசுவது என்பது தமிழ் நாட்டிலேயே சாத்தியம் அல்ல அதுவும் தமிழ் செய்தி வாசிப்பவர்களாலேயே ஆங்கில வார்த்தைகளைத்தவிர்க்கமுடியாமல் ஆங்கிலம் கலந்த தமிழில் செய்திகள் வாசிக்கும்போது, இங்கேய பல ஆண்டுகளாக வசித்துவருபவர்கள் தமிழிலி தடையின்றி ஆங்கிலம் கலவாமல் பேசுவது சாத்தியமல்ல என்றாலும் தங்களால் முடிந்தவரை முயற்சித்த முனைப்பு பாராட்டுக்குரியதுதான்.
நீங்கள் எப்போதாவது முயற்சித்திருக்கின்றீர்களா?
வணக்கம்.
பதிலளிநீக்குவருகைக்கும் தங்கள் கருத்திற்கும் மிக்க நன்றிகள்.