பின்பற்றுபவர்கள்

வியாழன், 14 டிசம்பர், 2017

பல்பு வாங்கியது யார்?

ஒளிவிளக்கு

நண்பர்களே,

சமீபத்தில் யாருபெத்த புள்ளையோ , தாம் பல்பு வாங்கிய கதையை பதிவாக வெளியிட்டு இருந்தார்.

ஆனால் இந்த பதிவு பல்பு வாங்காதது குறித்து. அதுவும் கடந்த 48 வருடங்களில் ஒருமுறைகூட பல்பு வாங்காதவரை குறித்துதான்.

பல்பு  வாங்குவது என்பது, "மொக்கை வாங்குவது" அல்லது தாம் சொல்லிய கருத்து எடுபடாமல் போவது, அல்லது சிறப்பாக அமையும் என்றெண்ணி செயல்பட்ட காரியம் "புஷ்வாணமாகிப்போவது"...அசத்தப்போகிறோம் என்றெண்ணி  அசிங்கப்பட்டு போவது என்று பலவிதங்களில் அர்த்தப்படுகிறது.

ஆனால் இங்கே ஒரு பெண்மணி 1969 ஆம் ஆண்டு அக்டொபர்    மாதம் தாம் வாங்கிய க்றிஸ்மஸ்  அலங்கார வண்ண தொடர் விளக்கு, வாங்கிய நாள் முதல் இன்றுவரை எந்த பழுதுமின்றி  சிறப்பாக செயல்படுவதாக சமீபத்தில் செய்தி வெளி இட்டு எல்லோர் முகத்திலும் அகத்தலும் பல்பு எரிய வைத்துள்ளார்..

இப்போதெல்லாம் மாதத்திற்கு ஒருமுறை வீட்டு விளக்குகளுக்கான பல்புகளை வாங்கி மாற்றிக்கொண்டே இருக்கும் வண்ணம் சீக்கிரத்தில் பழுதாகிப்போகும் தயாரிப்புகள் மலிந்துகிடக்கும் இந்த வியாபார உலகில்  வாழும் நமக்கு இந்த செய்தி ஒரு ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது. 

ஒருமுறைகூட எந்த ஒரு பல்பும் மாற்றவேண்டிய சூழ் நிலை உருவாகவில்லை எனவும் சொல்லி நம்மை வியப்பில் ஆழ்த்துகின்றார்.

திருமணமான இரண்டாம் ஆண்டு தமது மத்திய உணவு இடைவேளை நேரத்தில் கடைக்கு சென்று வாங்கியதை இன்னமும் நினைவுகூரும் அறுபத்து மூன்று வயது பெண்மணி, இந்த விளக்குகள் இதுவரை 2 மில்லியனுக்கும் அதிகமான நிமிடங்கள் தாண்டி ஒளிவீசிக்கொண்டிருப்பதாக சொல்கிறார்.

ஒருவேளை விற்றவரின் அல்லது வாங்கியவரின் கைராசி காரணமாக இருக்குமோ? 

இந்த சீரியல் விளக்கு வாங்கியபின் மூன்றாண்டுகள்  கழித்து பிறந்த அவரது மகன் இந்த வரலாற்று சிறப்புமிக்க விளக்கின் பெருமையாக சொல்வது: "வாங்கப்பட்ட நாள் முதல் மாற்று பல்பு வாங்க வேண்டிய அவசியத்தை ஏற்படுத்தாத இந்த சீரியல் பல்புகள்தான் இங்கிலாந்தின் பழைமையான  கிறிஸ்மஸ்  அலங்கார வண்ண ஒளிவிளக்கு"

Image result for britain's oldest fairy lights



நன்றி,

மீண்டும் ச(சி)ந்திப்போம்.

5 கருத்துகள்:

  1. அட இத்தனை வருடங்களாக உழைக்கிறதா - அதிசயம் தான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அலாவுதீனின் அற்புத விளக்குகூட இதனருகில் நிற்க முடியுமா என சந்தேகம்தான். வருகைக்கு மிக்க நன்றிகள் நாகராஜ்.

      கோ

      நீக்கு
  2. நம்ப முடியவில்லை, வியப்பாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  3. பல்பு வாங்கியவரைத் தான் தெரியுமே!!!! ஹா ஹா அமெரிக்காவின் மேற்குச் சீமையில் பசுபிக் கடலோரம் ..

    பதிலளிநீக்கு
  4. செயல்படுவதாக சமீபத்தில் செய்தி வெளி இட்டு எல்லோர் முகத்திலும் அகத்தலும் பல்பு எரிய வைத்துள்ளார்..//
    பல்பு எரிய வைத்துள்ளார் என்பதை விட் அபல்பு வாங்க வைத்துள்ளார் என்றால் சரியாக இருக்குமோ? இப்படியான பல்பு எங்கு கிடைக்கிறது என்று எல்லோரும் தேடத் தொடங்கியிருப்பார்கள்தானே!ஹா ஹா ஹா

    பதிலளிநீக்கு