பின்பற்றுபவர்கள்

ஞாயிறு, 12 மார்ச், 2017

கலி காலமும் - "களி" காலமும்

தொட்டுக்க ....

நண்பர்களே,

எங்குபார்த்தாலும் கொடூரங்களின்   ஆட்சி கோலோச்சும்  நிலை.

வேலை இல்லை, வேலைக்கேற்ற கூலி இல்லை.

மழை இல்லை பயிற் விளைச்சல் இல்லை.

வறுமை, பிணி, பட்டினி, தற்கொலைகள்.

துப்பாக்கி சூடு, குண்டுவெடிப்பு.

ஆங்காங்கே, கொலை , கொள்ளை, பச்சிளங் குழந்தைகள் சிறுமிகள் , பெண்கள் பாலியல் வன்முறை.

எங்கு பார்த்தாலும் திருட்டு, ஏமாற்று, கள்ளக்கடத்தல், குடி, போதை, கற்பழிப்பு  கட்ட பஞ்சாயத்து வஞ்சனை சூது  துரோகம்.

பெருகிவரும் அனாதை இல்லங்கள், முதியோர் இல்லங்கள்.

மருத்துவமனை, கல்விக்கூடங்களின் நிலைமைகள்.

லஞ்சம் ஊழல் , ஆள் கடத்தல், அரசியல் சூதாட்டம், மக்கள் விரோத செயல்கள்.... இப்படி எதிர்மறையான நிகழ்வுகளை எதிர்கொள்ளும்போதும் செய்தித்தாள்கள் ஊடகங்கள் மூலம் அறிய வரும்போதும் மக்களுள் பெரும்பான்மையானவர்கள் சலிப்புடன் சொல்வது: 

"ம்ம்ம்ம்... காலம் கெட்டுப்போச்சி , கலி முத்திப்போச்சு, கலிகாலம் நெருங்கிடுச்சி" என்பதே.

இதற்கே கலிகாலம் என்று சலித்துக்கொள்வோருக்கு  , சமூக சீர்கேடுகளான திருமணமாவதற்கு முன்பே சேர்ந்து வாழ்தல், ஓரின திருமணங்கள், ஒருவனுக்கு பல பெண்கள், கள்ளக்காதல், பார்ட்டிகள் என்ற பெயரில் செய்யப்படும்  ரகசிய(??) மறுபக்க வாழ்க்கைகள்,  நம்பிக்கை துரோகம் போன்றவற்றிற்கு என்னசொல்லுவார்கள். 

எது எப்படி இருந்தாலும், உப்பை தின்றவன் தண்ணீர் குடிப்பான் எனும் பழமொழிக்கேற்ப, தப்பு செய்தவர் யாராக  இருந்தாலும் ஒரு நாளும் தண்டனையில் இருந்து தப்பிக்க முடியாது.

அவர்கள் தாம் செய்த குற்றங்களுக்கு ஒரு நாள் தண்டனை அடைவார்கள் , சிறையில் அடைக்கப்படுவார்கள் அங்கே "களி" தின்பார்கள் என்பதற்கு நம்மிடையே நிறைய சான்றுகள் இருக்கின்றன.

இப்போதெல்லாம், சிறை கைதிகளுக்கு அவரவர்  பொருளாதார அந்தஸ்தஸ்த்தை பொறுத்து, வீட்டு சாப்பாடு, சிறப்பு உணவுகூட வழங்கப்படும் இந்த கால சூழலில்   களி தின்பது என்றல், சிறையில் அடைக்கப்படுவது என்பது மட்டும் தான் சரியான பொருளாக இருக்கும்.

அப்படியே  சிறையில்  சிலருக்கு சாப்பிட களி கொடுத்தாலும்   தொட்டுக்க கருவாட்டு குழம்பு கேட்கிறார்களாம்.

தன் மனைவி வேறு யாருடனோ கள்ளத்தொடர்பில் இருப்பதாக அறிந்த கணவன் தனது மனைவியை கொன்று புதைத்து கடந்த ஆண்டோடு 20 ஆண்டுகள் நிறைவுற்ற நிலை.

எவ்வளவோ ஆராய்ந்தும் கொலை செய்யப்பட்ட மனைவியின் உடலோ, கொலை செய்தது யார் என்ற  ஊர்ஜிதமான எந்த தடயமோ கண்டுபிடிக்கப்படாமலேயே போய்விடுமோ என்ற நிலையில் ,  கடந்த ஆண்டு கணவனை கைது செய்து சிறையில் அடைத்து  "களி" கொடுக்கப்பட்டு வரும் செய்தியை  இன்று பேருந்தில் வரும்போது செய்தித்தாளில் வாசித்தேன்.

தெய்வம் நின்று  கொடுக்கும் களியை  இருபது ஆண்டுகள் கழித்தும் என்பது வெட்ட வெளிச்சம்.

ஒவ்வொரு அரிசியிலும் அவனவன் பெயரை ஆண்டவன் எழுதிவைத்திருப்பான் என்பதுபோல் ஒவ்வொரு கிண்டலிலும் , (அதாங்க களி கிண்டுவார்களே அந்த கிண்டல்) அவனவன் பெயரை ஆண்டவன் எழுதித்தான் வைத்திருப்பான்.

இது (கேலி) கிண்டல் இல்லீங்க நிஜமான நிஜம்தான்

ஆமாம்..... களி ஒரு உன்னத  உணவுதானே அதை ஏன் கொச்சை படுத்துகிறார்கள் சிறை   கைதிகளுக்கு கொடுத்து.?

வேற ஒன்னும் இல்லைங்க  காலம் கெட்டுப்போச்சி , கலி முத்திப்போச்சு, கலி(களி)காலம் நெருங்கிடுச்சி  அதனால்தான்.

சிறை கைதிகளுக்கு எண்கள் கொடுப்படுவதுபோல்  களி தொடர்புடைய இந்த பதிவிற்கும் ஒரு எண் கொடுக்கலாம் என்று நினைக்கின்றேன்,  அது கோ 300 .

நன்றி.

மீண்டும் ச(சி)ந்திப்போம்

கோ


12 கருத்துகள்:

 1. பதில்கள்
  1. வணக்கம்,

   நலம் நலம் அறிய ஆவல். விசாரிப்புக்கு மிக்க நன்றி அன்பே சிவம்.

   கோ

   நீக்கு
  2. அன்பு அண்ணா தங்கள் பதிவிலே யே., உள்ளது எம் பதில். நம்(பால்) ஆற்றை கழிவறை யாய் மாற்றிய மதி கெட்டோரை கண்டிக்க துப் பற்ற சிலர்,நம் தமிழ் பற்று குறித்து எழுப்பிய ஐயத்திற்க்கு சற்று 'கோ' பத்துடன் இட்ட பதிவது. பொறுத்தருள்க.

   நீக்கு
  3. நாடு இப்போது எங்கே போகிறது என்பதை நினைத்தால் கவலையாக இருக்கின்றது. யார் பலம் பொருந்தியவராக இருக்கின்றாரோ அவர்கள் வைத்ததே சட்டமாகிறது. அவர்களை எதிர்த்து பேச யாருமே முன் வருவதில்லை.

   உங்கள் கோபம் ஞாயமானதுதான்.

   தேர்தல் நேரத்தில் நம்முடைய எண்ணங்களை பிரதிபலிக்கவேண்டும்.

   மக்கள் செய்வார்களா, அல்லது பணம் பெற்றுக்கொண்டு கும்பிடுவார்களா?

   நட்புடன்,

   கோ

   நீக்கு
 2. கலி - களி விபரம் அறிந்து மனதில் கிலியாகிடுச்சு.

  பதிலளிநீக்கு
 3. பதில்கள்
  1. வருகைக்கும் பாராட்டிற்கும் மிக்க நன்றி தனப்பால்.

   கோ

   நீக்கு
 4. பதில்கள்
  1. தகங்கள் வாழ்த்திற்கு மிக்க நன்றிகள் வெங்கட்.

   கோ

   நீக்கு
 5. ஓ 300 வது பதிவு!! வாழ்த்துகள்! கோ! பதிவும் விளக்கௌம் அருமை

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உங்களின் தொடர் பேராதரவும் வழிகாட்டுதலும் ஊக்கமும்தான் இத்தனை எழுத தூண்டியவை என்றால் அது மிகை அல்ல.

   வருகைக்கும் வாழ்த்திற்கும் வழிகாட்டுதலுக்கும் மிக்க மிக்க... நன்றிகள், அன்பிற்கினிய நண்பர்களே.

   கோ

   நீக்கு