பின்பற்றுபவர்கள்

வெள்ளி, 30 செப்டம்பர், 2016

தொடரியில் "படவா" கோபி.

ஜிக்கு புக்கு ஜிக்கு புக்கு ரயிலே....

நண்பர்களே,

சமீபத்தில் வெளிவந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும்  தமிழ் திரைப்படங்களின் தலைப்புகளில் என்னை மிகவும்  கவர்ந்த தலைப்பு, இயக்குனர் பிரபு சாலமன் இயக்கத்தில் வெளிவந்துள்ள திரைப்படமான தொடரிதான்.

ரயிலுக்கு அல்லது ரயில் பயணத்திற்கு இப்படி ஒரு பெயரை நான் உள்ளபடியே இன்றளவும் கேள்வி பட்டதில்லை.

ரயில் பயணம் என்றால் நம்மில் பலருக்கு மிகவும் பிடித்த ஒன்று.

எனக்கும் சின்ன வயதில் இருந்தே ரயில் பயணத்தின்மீது ஒரு தீராத மோகம் என்று சொன்னால் அது மிகை அல்ல.

பல ஊர்களில் பல நாடுகளில் பலவிதமான ரயில்  பயணங்களில் பங்குகொண்டிருந்தாலும் சமீபத்தில்  நான் மேற்கொண்ட ஒரு ரயில் பயணத்தில் சந்தித்த ஒரு நபருடனான  அனுபவத்தை உங்களோடு பகிர்ந்துகொள்வதில் மகிழ்ச்சி  அடைகிறேன்.

இத்தாலியின் வெனிஸ் நகரத்தில் இருந்து சுமார் 270 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் உலக புகழ்மிக்க, நவநாகரீகத்தின் தலை நகராக விளங்கும் மிலான் சென்று சில நாட்கள் தங்கும்படி அதி நவீன தொடரியில் (train) பயணித்துகொண்டிருந்தேன்.

Image result for padova train station


அந்த தொடரி வெனிஸில் இருந்து புறப்பட்ட சில நிமிடங்களில் ஒரு முக்கிய ஸ்டேஷனில் நின்றது.

அந்த நிறுத்தத்தில் சில பயணிகள் ஏறினார்கள்.  

அவர்களில் சுமார் 30 வயது மதிக்கத்தக்க ஒரு பெண், அமர்ந்திருந்த அனைத்து பயணிகளின் மேசைமீதும் (நான்குபேருக்கும் ஒரு மேசை இருக்கும்) அச்சடிக்கப்பட்ட துண்டு பிரசுரங்களை வைத்துவிட்டு நேராக நடந்து சென்றுவிட்டார்.

Image result for of a modern train in Italy

என்ன செய்தி என அறிந்துகொள்ளும் ஆவலில் அதை எடுத்தேன்.

ஆங்கிலத்தில் அச்சடிக்கப்பட்டிருந்த அந்த வாசகத்தின் தமிழாக்கம்::

"நான் ஒரு வீடு இல்லாத ஏழை, வேலை இல்லை,  வயது முதிர்ந்த தாயை கவனிக்கவேண்டிய பொறுப்பும் இருக்கின்றது. என்னாலும் எந்த வேலையையும் செய்யமுடியாதபடிக்கு உடல் உபாதைகள் ஆட்கொண்டிருக்கின்றது,  தயவாக பொருளுதவி செய்யுங்கள்". 

படித்து முடித்தபின்னர் அருகில் இருந்த சக பயணிகளை கவனித்தேன், அவர்களில் யாருமே அந்த துண்டு சீட்டை கையில் கூட எடுக்கவில்லை, கொஞ்சம் கூட கண்டுகொள்ளவே இல்லை.

அவரிகளில் பெரும்பாலோர் அந்த ஜிக்கு புக்கு பயணத்தின்போதும் Bookக்கும் கையுமாக இருந்தனர்.

சிறிது நேரம் கழித்து அந்த பெண் திரும்பி வந்து மேசைகள் மீது வைத்துவிட்டு போய்   இருந்த துண்டு சீட்டுகளை சேகரித்தவண்ணம் வந்துகொண்டிருந்தார்.

கையில் அந்த துண்டு சீட்டுடன் இருந்த என்னை பார்த்ததும் என்னருகில் வந்து நின்றுகொண்டு , பரிதாபமாக முகத்தை வைத்துக்கொண்டு கைகளை நீட்டி உதவி கேட்டார்.

அப்போதுதான் எனக்கு எதிரில் அமர்ந்திருந்தவர் சைகை   மூலம் எதுவும் கொடுக்காதீர்கள் , என்றும்  மேசைமீது நான் கழற்றி வைத்திருந்த என்னுடைய பிராடா  கூலிங்கிளாஸ்  மீது கவனம் செலுத்தும்படி எச்சரிப்பது போன்றும்   சமிக்ஞய் செய்தார்.

நானும் அதை உணர்ந்து, கூலிங்கிளாஸை ஒரு கையில் பிடித்துக்கொண்டு அந்த பெண்ணிடம் அவர் வைத்து சென்ற அந்த துண்டு சீட்டை மட்டும் கொடுத்தேன்.

அந்த பெண் அந்த சீட்டை என்னிடமிருந்து வெடுக்கென்று பிடுங்கி கொண்டு ஏதேதோ சொல்லிக்கொண்டே(திட்டிக்கொண்டே) அந்த இடம் விட்டு நகர்ந்து   சென்றார்.

Image result for train route from venice to milan

சிறிது நேரம் கழித்து ரயில் புறப்படும் நேரத்தில் பிளாட் பாரத்தில் நடந்து செல்லும் பயணிகளை கவனிக்கும்போது , சற்று நேரத்திற்கு முன் பரிதாப தோரணையில் யாசகம் கேட்ட அந்த பெண்மணி தனது தோழிபோன்ற பெண்ணுடன் சேர்ந்து சிரித்துக்கொண்டு துள்ளல் நடையுடன் நடந்து செல்வதை பார்த்த எனக்கு ஆச்சரியமாக இருந்தது.

மேலும், பிளாட் பாரத்தில் நடந்து செல்லும்போது அவர் அணிந்திருந்த மேலாடை(பிளேசர்) கருப்பு கண்ணாடி, வைத்திருந்த டாம்பீகமான கை பை , கைபேசி  போன்றவை அவர் ஒரு வசதிமிக்க நவ நாகரீக பெண் போன்று காட்சி அளித்தது.

இவரா சற்று நேரத்திற்கு முன் ரயிலில் உதவிகேட்டு வந்தது என சந்தேகிக்கும் படியாக  அவரது மிடுக்கான தோற்றமும் குதூகலிக்கும் பேச்சும் சிரிப்பும் எனக்கு ஆச்சரியத்தை கொடுத்தது.

நம்ம ஊரில்தான் விதவிதமான வகைகளில் ஏமாற்றுவேலைகள் நடக்கும் என்றிருந்தால் இந்த மேலை நாட்டிலும் இப்படி நடக்கிறதே என நினைத்துக்கொண்டே, புறப்படும் ரயிலில் இருந்தவண்ணம் அந்த ஸ்டேஷனின் பெயர்பலகையை பார்த்தேன்.

அந்த ஸ்டேஷனின் பெயர் "படோவா".- PADOVA.

நம்மில் யாரேனும் தவறோ, சுட்டித்தனமோ ஏமாற்று வேலைகளையோ செய்தால் அவர்களை "படவா" என சொல்வது உண்டல்லவா? அந்த வரிசையில் இந்த ஏமாற்று வேலையை செய்த அந்த பெண் ஏறி இறங்கிய அந்த ஸ்டேஷனின் பெயருக்கு சற்று ஏறக்குறைய  சரியாக பொருந்தும்படியாக அமைந்த அந்த பெண்ணின் செயலைக்கண்டதும் எனக்கு இந்த தலைப்பு தான் தோன்றியது.

படவா சரி  எதற்கு  கோபி

"கோபி(யர்)" என்றால் பெண்(கள்)  தானே, அதனால்தான் இந்த தலைப்பு - "படவா கோபி".  

தொடரி பயணத்தின் தொடக்கமே இப்படி என்றல் போகப்போக என்னெல்லாம் தொடருமோ  என்று நினைத்தபடி பயணத்தை தொடர்ந்தேன், நீங்களும் தொடருங்கள்.

நன்றி.

மீண்டும் ச(சி)ந்திப்போம்.

கோ

10 கருத்துகள்:

 1. அந்த இடத்தில் நானாக இருந்தால் கையில் இருப்பதையெல்லாம் கொடுத்து விட்டு ஏமாந்து இருப்பேன்

  (பாஸ்போர்ட் உள்'படவா' என்று கேட்காதீர்)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நண்பரே,

   உங்கள் வருகையும் சொல்லாடலும்(உள் "படவா") மகிழ்வளிக்கின்றது.

   கோ

   நீக்கு
 2. தலைப்பு அருமை!! நிச்சயமாக சினிமா செய்தி இல்லை என்று தெரியும்...

  இங்கும் இப்படித்தானே நிகழ்கிறது...அங்கு என்பதுதான் ஆச்சரியமாக இருக்கிறது. படவா கோபி உங்கள் அர்த்தத்தை மிகவும் ரசித்துச் சிரித்தோம்...ஊரின் பெயரும் பொருத்தமாகத்தான் இருக்கிறது இல்லையா கோ

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நீங்கள் ரசித்து மகிழ்ந்ததை நானும் படித்து மகிழ்ந்தேன்.

   கோ

   நீக்கு
 3. i recollectsuch incidents did happen a couple of years in chennai and in other parts of tamilnadu....

  பதிலளிநீக்கு
 4. எங்கும் ஏமாற்றுக்காரர்கள்... இங்கே ஏமாற்றுக்காரி!

  நல்லதொரு அனுபவம் தான் உங்களுக்கு!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வெங்கட்,

   ஒருவேளை இந்த பழக்கம் நம்ம ஊரில் இருந்து குடியேறியதாக இருக்குமோ?

   வருகைக்கு மிக்க நன்றி.

   கோ

   நீக்கு
 5. இந்தியாவில்தான் இது போன்று ஏமாற்றுபவர்கள் நினைத்தால், இத்தாலியிலுமா:)
  ---

  "கோபி(யர்)" என்றால் பெண்(கள்) தானே, அதனால்தான் இந்த தலைப்பு - "படவா கோபி".///

  அஹாஹா தலைப்பும்; பதிவும் அருமை! அருமை!


  --

  நலமா சார்?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹலோ மகேஷ்,

   நீண்ட நாட்களுக்கு பின் உமது பின்னூட்டம் பார்த்து மகிழ்கின்றேன்.

   என்ன பண்றது எப்படி இருந்த உலகம் இப்போ இப்படி ஆயிடுச்சி.

   பதிவினை ரசித்தமைக்கு நன்றிகள்.

   நலம்தானே --நானும் நலம்தான்.

   கோ

   நீக்கு