பின்பற்றுபவர்கள்

சனி, 5 மார்ச், 2016

அந்த சிலமணி நேரம் ??!! --5

லைசென்ஸ் -சஸ்பென்ஸ்-"நான்" சென்சு!!

நண்பர்களே,

முன் பதிவை படிக்க .. அந்த சிலமணி நேரம்--4

டைரியின் ஒவ்வொரு பக்கமும் அதிர்ச்சிகளும் ,பயங்கரங்களும், மனித சிந்தனைக்கு அப்பாற்பட்டவைகளின் தொகுப்பாக இருந்ததை கண்டு காவல்துறை அதிர்ந்து போனது.


மேலும், உளவியல், மற்றும் மன நல மருத்துவர்களும் ஆய்வாளர்களும் இந்த வினோத டைரி குறிப்பின் உண்மைத்தன்மையை உறுதிசெய்தனர்.

இப்படிகூட நடக்குமா, இப்படியும் மனிதர்கள் வாழ்கின்றார்களா எனும் பல வினோத வினாக்கள் எழாமல் இல்லை.

இருந்தாலும் அவரது உடலை சவபெட்டியில் வைத்து காரை ஓட்டி வந்தவர் யார்?  அதுவும் இறந்தவரின் தந்தை அடக்கம் செய்யபட்டிருக்கும் கல்லறை தோட்டத்திற்கு சரியாக வந்திருப்பதால் அவருக்கு மிகவும் நெருக்கமானவர்கள்தான் கொண்டு வந்திருக்க முடியும், எனினும் காரில் எவரேனும், இருந்ததற்கான எந்த சுவடும் இல்லாமல் போனது, அவர்கள் கண்டெடுத்த டைரி குறிப்புகளின் செய்தியை  முழுக்க நம்பும்படியான சூழ் நிலைக்கு தள்ளப்பட்டனர்.

அந்த டைரி குறிப்புகளின் சாராம்சம் என்ன?

அவருக்கும் சில அமானுஷ்ய சக்திகளுக்கும் ஆவி உலகத்திற்கும் தொடர்பு இருந்திருப்பதற்கான சில ஆதாரங்களும், அதில் அவருக்கு இருந்த ஈடுபாடும் கூடு விட்டு கூடு பாய்தலில் இருந்த  அசைக்க முடியாத நம்பிக்கையின் வெளிப்பாடும் அந்த குறிப்புகள் மூலம் வெளிபடுத்தபட்டிருந்தது.

அதன் அடிப்படியிலும் மேற்சொன்ன அத்தனை விஷயங்களையும் கூட்டி கழித்து பார்த்ததிலும் காவல்துறை வந்த முடிவுதான் நாட்டு மக்களை ஆச்சரியப்பட வைத்தன.

என்னதான் அறிவியல், விஞ்ஞானம், பகுத்தறிவு போன்றவற்றில் மனிதன் முன்னேறினாலும் இதுபோன்ற அமானுஷ்யங்கள் ஆங்காங்கே நடப்பதை அவனால் நம்பவும் முடியவில்லை  நம்பாமல் இருக்கவும் முடிவதில்லை.

எதிர்பாராத அந்த முடிவை கேட்ட நாட்டு மக்கள் அனைவரும் வியப்பில் ஆழ்ந்துபோக, நடுங்கும் மைனஸ் 3 டிகிரி  குளிரிலும் எனக்கு உடம்பெல்லாம் வியர்த்துபோக நடுக்கத்துடன் விழித்துக்கொண்டு விளக்கை போட்டு பரணியில் இருந்த fanஐ எடுத்து இயக்கி  மீண்டும் புரண்டு படுத்து தூங்க முயற்சிக்க, முயற்சி தோற்றுபோய் , திகில் தோற்று வித்த பயத்தில்   தூக்கம் கலைந்துபோனது.

என்ன முடிவு?

காரை ஒட்டியது இறந்தவரின் ஆவி என்ற முடிவுதான் அது.


மேலதிக தகவல்:

சில நாட்களுக்கு முன் என்னுடைய ஓட்டுனர் உரிமத்தை - Driving Licence எங்கேயோ தொலைத்துவிட்ட கவலையில், நாளைமுதல் ஓட்டுனர் உரிமம் இல்லாமல் எப்படி காரை ஓட்டபோகிறோம் என்று நினைத்துகொண்டு, தூக்கம் வராத நிலையில், சுவீடனை சார்ந்த ஜான் மோரோஸ் - John Moroz என்பவர் எழுதிய "அடுத்தது என்ன?" - What's next? - மரணத்திற்குபின் நடப்பதென்ன என்ற ஆராய்ச்சி புத்தகத்தை படித்துவிட்டு உறங்க சென்ற எனக்கு, காட்சிகளாக விரிந்ததை , அப்படியே மிகைபடுத்தாமல் (??!!) விவரித்து சொல்லி இருக்கிறேன்.

பின் குறிப்பு - : என்னுடைய ஓட்டுனர் உரிமம் தொலைந்துவிட்டது என்பதை தவிர, ( மனுஷன்னா கொஞ்சமாவது உண்மையாய்  இருக்கனுமில்லையா?)  இந்த பதிவின் ஆரம்பம் முதல், படித்ததாக சொன்ன புத்தகத்தின் பெயர் அதன் ஆசிரியர் பெயர்வரை எல்லாமே நான்  ஓட்டிய - சக்கரமில்லா சொப்பன சொகுசு கார்தான் என்பதை சொல்லவும் வேண்டுமோ?

நன்றி.

மீண்டும் ச(சி)ந்திப்போம்

கோ

6 கருத்துகள்:

  1. இது உட்டான்ஸ் என்று நேற்றுக் கருத்திட்ட உடன் தெரிந்துவிட்டது. பின்னர் எங்கள் தள பதிவு, பதிவரின்மரணச் செய்தி என்று மறந்து போனது. எப்படித் தெரிந்தது? ஓட்டுநர் இல்லாமல் வண்டி ஓடியது எப்படி? எங்களுக்கு அமானுஷ்ய சக்தியில் நம்பிக்கை இல்லை. அதனால் தான் ஆட்டோமேட்டட் காரா என்று கேட்டிருந்தோம். லண்டனில் இருக்கும் உறவினரிடம் கேட்டும் விட்டோம். அவர் அப்படி எதுவும் நடக்கவில்லை என்று சொல்லிவிட்டார். முதல் பகுதி படித்ததுமே தெரிந்துவிட்டது. இருந்தாலும் உங்கள் சுவாரஸ்ய நடையை மிகவும் ரசித்து வாசித்தோம்...நடக்காத ஒன்றை நடப்பது போல் எழுதும் உத்தியை. உங்களுக்கு அது நன்றாகவே வருகின்றது கோ!!!! பாராட்டுகள். வாழ்த்துகள்!!! இது மனம் திறந்த உண்மையான பாராட்டு!!!

    அருமை. மிகவும் ரசித்தோம் கோ

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் பதிவினை ரசித்ததற்கும் மிக்க நன்றி.

      கோ

      நீக்கு
  2. சரி அந்த ஆவியிடமே உங்கள் ஓட்டுநர் உரிமம் எங்கிருக்கிறது என்று கேட்டுத் தெரிந்து கொண்டிருக்கலாமே! அதைவிடச் சிறந்த ஒன்று அந்த ஆவியையே உங்கள் ஓட்டுநராக வைத்துக் கொள்ளலாம்!!! ஆவிக்கு உரிமம் வேண்டாமே!!!ஹிஹிஹிஹி....உங்களிடம் உரிமம் இல்லை என்றாலும் போக்குவரத்துக் காவல் துறையினர் உங்களுக்கு "ஆவி/ராஜ (கோ) மரியாதை" கொடுத்து ஓட்டுவதற்கு அனுமதி அளித்துவிடுவார்கள்...இது எப்புடீய்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆவியிடமே கேட்டு தெரிந்துகொண்டிருக்கலாம்தான், ஆனால் உங்களை போன்று எனக்கு ஆவி பாஷை தெரியாதே.

      கோ

      நீக்கு
  3. எனக்கு தெரியும் இது சொப்பன சொகுசு கார் தான் என்று,, இருந்தாலும் இது கதையல்ல கதையல்ல என்றதால்,,,,

    ஒரு ஒட்டுநர் உரிமத்திற்கு இவ்வளவு,,,,,,

    இருந்தாலும் கதை இல்ல சொப்பனம் நல்லா இருக்கு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்களுக்கு தெரியாது என்று சொல்லி இருந்தால்தான் ஆச்சரியம். நீங்கள் முற்றும் அறிந்த முனிவர் சாரி... முனைவர் அல்லவா?

      கோ

      நீக்கு