பின்பற்றுபவர்கள்

வெள்ளி, 2 ஜனவரி, 2015

கடவு சீட்டும் கலையான முகமும்.


நண்பர்களே,

சமீபத்தில், வங்கியில் ஒரு ஒப்பந்த பத்திரத்தில், வேலை செய்யும் நிறுவனத்தின் சார்பாக, கையொப்பமிட நேர்ந்தது.


என்னுடைய கையொப்பத்தை  என் பாஸ்போர்டில் உள்ள கையொப்பத்துடன்  சரி செய்து பார்பதற்காகவும்,அதன் பிரதியை ஒப்பந்த படிவத்தோடு இணைபதற்காகவும், பாஸ்போர்டை கொடுக்கும்படி சொன்னார்கள்.

நானும் தயாராக கொண்டு சென்ற என் பாஸ்போர்டை நீட்டினேன்.

அதை  எடுத்துகொண்டு உள்ளே  படி எடுக்கும் இயந்திரம் இருந்த பகுதிக்கு  சென்றார் அந்த அலுவலர்.

என்ன நினைத்தாரோ தெரியவில்லை, உடனடியாக என்னிடம் திரும்பி வந்து , இது உங்க பாஸ்போர்ட் தானே? என கேட்டார்.

நானும் " ஆமாம்  இது என்னுடையதுதான்  ஏன் கேட்கின்றீர்கள் ?"என்றேன்

அவர் சொன்னார் "இந்த போட்டோவில்  உள்ள உருவம் உங்களைபோல இல்லையே?" என்றார்.

இது எடுத்து ஒன்பது ஆண்டுகள் ஆகிவிட்டன, மனிதன்  அவனுக்கு இருக்கும் ஆயிரத்தெட்டு பிரச்சினைகளால்  ஆறு மாசத்துக்கு ஒருமுறை உரு மாறிக்கொண்டே தான் இருப்பான் அப்படியானால் இந்த ஒன்பது வருடத்தில்.....

அதுவும் சிலர் சில வருடங்களுக்கு பின் தன்னுடைய  சிகை அலங்காரம், மீசை, தாடி போன்றவற்றின் ஸ்டையிலைமாற்றியிருப்பார்கள்.

 இது சத்தியமா நான் தான் என கற்பூரம் இல்லாததால் வெறுமனே  அவரிடம் சத்தியம் செய்து   அவரை நம்ப வைத்து   எல்லா வேலைகளையும் முடித்துகொண்டு அலுவலகம் திரும்பினேன்.

இங்கே பெரியவர்களுக்கு பத்தாண்டுகளுக்கு ஒருமுறையும், பதினைந்து  வயதுக்கு உட்பட்டவர்களுக்கு ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறையும் பாஸ்போர்ட் புதுபிக்கப்பட வேண்டும்.

இரவு வீட்டில் தூங்க போவதற்கு முன், பாஸ்போர்ட்டை உரிய இடத்தில் வைப்பதற்காக சட்டை பையிலிருந்து வெளியில் எடுத்து அதில்  உள்ள என் போட்டோவையும்  என் இப்போதைய உருவத்தையும்  பார்த்து கொஞ்சம் சிரித்துகொண்டு(ஒரேடியாக சிரிக்கும்படி இல்லை!!! நம்புங்கள்) பாஸ்போர்ட்டை பத்திரபடுத்திவிட்டு உறங்கபோனேன் .

தூக்கம் வர கொஞ்சம் நேரமானது இடைப்பட்ட நேரத்தில், காலையில் வங்கியில்  நடந்த அந்த நிகழ்ச்சி மனதில் ஓடிக்கொண்டிருந்தது, நாம் தான் எவ்வளவு மாறியிருக்கின்றோம்.



இதை படிக்கும் நண்பர்கள் உங்களின் பத்து வருட பழைய புகைப்படம் இருந்தால் அதையும் உங்களது தற்போதையா உருவத்தையும் பாருங்கள், கொஞ்சம் சிரிப்பு வரும், சிலருக்கு சில மலரும் நினைவுகள் கூட வரக்கூடும்

அப்படி எனக்கு நடந்த ஒரு மலரும் நினைவினை நாளை சொல்கின்றேன், இப்போ கொஞ்சம் தூங்கபோகிறேன்.

நாளை மீண்டும் (சி)ந்திப்போம்


நன்றி

.கோ

4 கருத்துகள்:

  1. நல்ல " மலரும் நினைவுகள் "பதிவு...

    சென்ற மாதம் தான் நானும் என் கடவு சீட்டுகளை எடுத்து பார்த்தேன். முதல் பாஸ்போர்ட் 15 வயதில் எடுத்தது. தலையில் கூந்தலே பின்னி விடலாம்.. வயிற்றில் 16 pack . கடைசி கடவுசீட்டில்.. தலையில் ரெட்டை சடை போடும் அளவுதான் இருக்கின்றனது ( அதாவது இருகின்றதே என்று சந்தோஷ படுங்கள் என்று சில நண்பர்கள் சொல்வது கேட்கின்றது). வயிற்றில் 16 மறைந்து போய் தற்போது ஒரு ஒரு pack .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கு நன்றி விசு.

      16 பேக் உனக்கு இருந்தது இந்த உலகுக்கு தெரியாமலே போயிருக்கும், நல்லவேளை பதிவு செய்துவிட்டீர்.

      கோ

      நீக்கு