பின்பற்றுபவர்கள்

செவ்வாய், 13 ஜனவரி, 2015

கல்யாண பரிசு - மாலை கச்சேரி

கல்யாண பரிசு தொடர்கிறது....

முதலில் இருந்து வாசிக்க  இங்கே .. கல்யாண பரிசு


"இல்லங்க இங்கே தான் இருக்கும் பாருங்க  ஒரு தினத்தந்தி பேப்பரில்  சுற்றி அந்த சீல் ஸ்டிக்கர்  ஒட்டி  இருக்கும் பாருங்க"


"...  அதுவா சார்....?."

"அத காலையிலே மார்த்தாண்டம் சார் வாங்கினு போனாரு"

"மார்த்தாண்டம் ஏன் அத வாங்கினார்நான் தான் இதை என்னையும் மேலாளரையும் தவிர வேறு யாரிடமும் கொடுக்கக்கூடாதுன்னு கண்டிப்பாக  சொல்லி இருந்தேனே".

எனக்கு தெரியாது சார்எனக்கு முன்னால் டூட்டி பார்த்த செக்யூரிட்டி , இத சார் கேட்டா கொடுக்கணும்னு மட்டும் தான் சொன்னாரு ஆனா அது என்ன எந்த சார் கிட்ட கொடுக்கணும்னு சொல்லலேஎன்றார்.

மேலும்,"காலையில மார்த்தாண்டம் சார் வந்து கிப்ட் எங்கே இருக்குனு கேட்டாரு நான் உள்ளே பார்த்தப்போ அங்கே இருந்த அந்த பார்சலை காட்டி இதுதான் இருக்கு சார் வேற எதுவும் இல்லன்னு சொல்ல , அவரும்  அத வாங்கிக்கொண்டு வேகமாக போய்விட்டார்". என்றார்.

எனக்கு கடுமையான கோபம் அந்த இரண்டு செக்யூரிட்டிகள்மேல் மட்டுமல்லாமல்மார்த்தாண்டம் மேலும்.

(நிறுவனத்தில் எந்த விற்பனை அலுவலர்  அதிகம் பணம் வசூலிக்கின்றார்கள் என்பதைபொருத்து அந்த மாதத்திற்கான கழிவு நிர்ணயிக்கப்படும்.)

கோபத்துடனும்கொஞ்சம் பதட்டத்துடனும் மேலாளரிடம் வந்து தயங்கி தயங்கி விஷயத்தை  சொல்ல   அவரு அவர் பங்குக்கு காச்ச்சு மூச்சு என்று மூச்சு விடாமல் கத்திவிட்டுகோபத்தில் "மார்த்தாண்டம் எங்கிருக்கிறார் உடனே தொடர்புகொண்டு அந்த டைரி எங்கேனு கேளுங்க , இன்று மாலை ஐந்து மணி குரியர்ல தலைமை அலுவலகம் அனுப்பவேண்டிய காசோலைகளும் வரை ஓலைகளும் அதில் இருக்கின்றனநேற்றே தலைமை அலுவலகத்துக்கு பண விவரங்களை தெரிவித்துவிட்டேன்சீக்கிரம் போய் எங்கேனு பாருங்கஎன உரத்த குரலில் அவர் என்னிடம் கூறநான் அவர் அறையைவிட்டு வெளியில் வந்தேன்.

மேலாளரும் கோபமாக வெளியில் சென்றுவிட்டார்.

நான் வெளியில்  வருவதற்குள்   எங்கள் அலுவலக ரிசப்ப்ஷனிஸ்ட் மார்த்தாண்டம் சென்றிருக்கும் ஊரிலுள்ள டீலர் ஷோ ரூமுக்கு தொலைபேசியில் தொடர்புகொண்டு மார்த்தாண்டம் இருக்கின்றாரா என கேட்டிருக்கின்றார் ஆனால் அவர் வேறு ஒரு டீலரை விசிட் பன்னபோவதாக பேசிகொண்டிருந்தார் என்ற தகவல்  கிடைத்ததை அடுத்து அந்த ஊர் டீலருக்கு போன் செய்தும் பலனில்லை.

இப்படியாக பல டீலர் ஷோரூம்களுக்கு போன் செய்து ஓய்ந்து போன  நேரத்தில் அலுவலக தொலைபேசி மணி அடித்தது.

தொடர்பில் வந்தவர் மார்த்தாண்டம்.

(நானும் அவரும் நெருங்கிய நண்பர்கள் என்பது ஒரு உபரி தகவல்.)

"சார் மார்த்தாண்டம் லைன்ல வந்திருக்கார்ரிசப்ஷனிஸ்ட் சொல்லஓடிபோய் போனை எடுத்து,

யோவ் எங்கயா அந்த டைரி ?"

"எந்த டைரிஆமாம் என்ன விஷயம் போன் பண்ணி என்னை தேடினதா சொன்னாங்க  , நானும் உடனே கூப்பிட்டேன் ஆனா போனே எங்கேஜ்டா இருந்துச்சி.?"

"மார்த்தாண்டம்விளையாடாதீங்ககாத்தால கல்யாணத்துக்கு போறதுக்கு முன்னால செக்க்யூரிகிட்டே......

"ஆமாம் என்னய்யா இவ்வளோ பெரிய அலுவலகத்திலிருந்து திருமண பரிசு கொடுக்கும்போது அத கொஞ்சம் டீசண்ட்டா பேக் பண்ணி இருக்க கூடாதா?..........

அதெல்லாம் ரொம்ப டீசன்ட்டாதான்   பேக்பண்ணி இருந்தோம்அத பத்தி இப்போ ...

"என்னையா டீசன்ட்டு......

யோவ் அதெல்லாம் இருக்கட்டும் காலையில செக்யூரிகிட்ட இருந்து  வாங்கின அந்த டைரி  இப்போ எங்கே"

"ஏன்யா அதான் சொல்றேன்ல  நான் எந்த டைரியையும் பார்க்கலன்னு.. சும்மா நொய் நொய்னு.. .."

"மார்த்தாண்டம் சீரியஸ்னஸ் தெரியாம நீங்க விளையாடின்னு இருக்கீங்க அதுல லட்ச கணுக்குல செக்கும் டி டி யும் இருக்கு இன்னும் ஒரு மணிநேரத்தில  கொரியர்ல  ஹெட் ஆபீஸ் அனுப்பனும் கொஞ்சம் தயவு செய்து அந்த டைரி எங்கேனு  சொல்லுங்க"

யோவ் நீதான் எங்கிட்ட விளையாடின்னு இருக்கேநான் காலையில எந்த டைரியையும் வாங்கல , நீங்க கேவலமா ஒரு நியூஸ் பேப்பர்ல பார்சல் பண்ணி  வச்சிருந்த அந்த  வெட்டிங் கிப்டஅதுவும் நாம எல்லோரும் காசுபோட்டு வாங்கின கிப்ட்ல மேனஜேர் பேருமட்டும் எழுதியிருந்த   அந்த பார்சலை தான் நான் காலையில வாங்கினேன்.

யோவ் அத என்ன பண்ண"

என்ன பண்றதுஅவ்வளவு காலையில நான்  எங்கேயும் போய் வேற கிப்ட் பேப்பர் வாங்க முடியாதுன்னு அதுல இருந்த மேனேஜர் பெயர அடித்துவிட்டு நம்ம நிறுவன ஊழியர்கள் சார்பாக என எழுதி  கொஞ்சம் சங்கோஜத்தோடு கல்யாண பொண்ணுகிட்ட கொடுத்துட்டு நான் போயிட்டேன்"

அட பாவிஉனக்கு கொஞ்சமாவது அறிவு இருக்குதாயாயாரவது கல்யாண பரிசபோய் பழைய பேப்பர்ல சுத்துவாங்களா"?

அதான்யா நானும் கேக்கறேன் எனக்கு எப்படி இருந்திருக்கும்ன்னு யோசிச்சி பாருஇத்தனைக்கும்போட்டோவிலும் வீடியோவிலும் கூட அத வச்சினே போஸ் கொடுக்க வேண்டி இருந்தது...."

ஒரு பக்கம் எனக்கு வயிறு குலுங்க குலுங்க சிரிப்புஒருபக்கம் அந்த டைரிய நினைத்து பதற்றம்.

 கொஞ்சம் சிரிப்பை அடக்கிக்கொண்டு, " மார்த்தாண்டம் நீ என்ன பண்ணிட்டு போயிருக்கிற தெரியுமா?, அது பரிசு பொருள் இல்லையாநம்ம மேனேஜரின் டைரிஅதுலதான் நேற்று வசூலித்த எல்லாம் இருக்கு அத போய் நீ கிப்டுன்னு எடுத்துனு போய் கல்யாணத்தில கொடுத்திருக்கேகொஞ்சமாவது யோசிக்க வேண்டாமா?"

அடுத்த முனையில் மார்தாண்டமும் பலமாக சிரித்துக்கொண்டு , அதான்யா நானும் யோசிச்சேன்நம்ம 'கோஇந்த மாதிரி கேவலமா பார்சல் பண்ணி இருக்க மாட்டாரேஅதுவும் அந்த கிப்டு எதோ புத்தகம் மாதிரி இருக்கேன்னு நினைத்தேன்பிறகு ஒருவேளை கோல்ட் அணிகலன் இருக்கும் பெட்டியாக இருக்குமோனு நானே முடிவுக்கு வந்துதான் கொண்டுபோய் கொடுத்தேன்என்றார்.

கொரியர் வர இன்னும் அறை மணி நேரம் இருந்ததுபோனை துண்டித்துவிட்டுஹீரோ ஹோண்டாவை முடுக்கி அடுத்த ஐந்தாவது நிமிடம் மண்டபம் அடைந்தேன்.

அந்த நேரத்தில்டீலரின் பெரிய மருமகன்எல்லா பரிசுபொருட்கள் சீர் வரிசைகளை லாரியில் ஏற்றிகொண்டிருந்தார்.

எங்களை பார்த்ததும்,புன் சிரிப்போடு வாங்க,வாங்க என்றார்.

அவருக்கு தெரியாதுமார்த்தாண்டம் காலையில் கொடுத்து சென்றதை திருப்பி வாங்கத்தான் வந்திருக்கின்றோம் என்று.

தனியாக அவரை அழைத்து ரொம்ப சங்கடத்துடன்நடந்ததை கூறி கொஞ்சம் உதவும்படி வேண்டிக்கொண்டேன்.

பாவம்அவர் லாரியில் ஏறிஒவ்வொரு பொருளாக எடுத்து காட்டி இதுவாஇதுவாஎன கேட்டு ஏறக்குறையா எல்லா பரிசு பொருட்களையும் காண்பித்துவிட்டார்ஆனால்"அந்தபரிசுப்பொருள் மட்டும் கண்ணில் படவில்லை.

பிறகு சொன்னார் நீங்கள் வேண்டுமானால் மேலே வந்து பாருங்களேன் என்று.
.
 அதுவும் நல்ல யோசனைதான் , எனக்கு அந்த பொருளின் அங்க அடையாளங்கள் தெரிந்திருந்ததால்எளிதில் கண்டுபிடித்துவிடலாம்ஆனால் அது இங்கே இருக்க வேண்டுமே.

ஒரு ஐந்து நிமிட தேடலுக்கு பிறகு மூலையில் இருந்த  ஒரு கோணிப்பையில் கட்டபட்டிருந் மூட்டையை பிரித்து கைகளை விட்டு தடவி பார்த்து கொஞ்சம் சொரசொரப்பு கொஞ்சம் மேடுபள்ளம் போன்ற உணர்வுகளை தொட்டுணர்ந்து கடவுளை வேண்டிக்கொண்டே வெளியில் எடுத்தேன்.

ஆமாம் அதே தான் , அதே தினத்தந்தி பழைய பேப்பர்தான்.

ஆத்மார்த்த நன்றியை அவருக்கு சொல்லிவிட்டு உடனே அலுவலகம் வந்துஅவசர அவசரமாக காசோலைகளையும்வரை ஓலைகளையும் போட்டோ  காப்பி (செராக்ஸ்எடுத்துகொண்டுகவரிங் லெட்டெர் டைப் செய்து அவற்றை  கவரில் போட்டு அட்ரஸ் எழுதும் சமயம் கொரியர் ஆளும் வந்தார்பின்னாலேயே மேனேஜரும் வந்தார்.

வந்தவர் அவரின் டைரியை அவர் மேசைமேல் பார்த்ததும் எங்கே இருந்ததுசெக்கெல்லாம் எங்கே என கேட்டார்.

செக் இருந்த உறையையும் செக்கின் பிரதிகளையும் கவரிங் கடிதத்தின் நகலையும் காண்பித்துஉங்கள் டைரி இங்கே தான் செக்யூரிட்டி  டிராவில் இருந்தது என சமாளித்து அந்த பதற்றத்துக்கு  முற்றுபுள்ளி வைத்தோம்.

அடுத்த நாள் மார்த்தாண்டம் அலுவலகம் நுழையும் போதே இடிபோல சிரித்துகொண்டு வந்ததையும்ஒரு வாரம் கழித்து  நடந்தவற்றை விலாவரியாக விலா  வலிக்க சிரித்துக்கொண்டே மேனேஜரிடம்கூறியதையும் 

சில ஆண்டுகளுக்கு பின்னர் பாண்டிச்சேரியில் பிரஞ்சு குடிமகளை திருமணம் செய்து கொண்ட மார்த்தாண்டம் திருமணதிற்கு , பரிசுபொருளாக  ஒரு புதிய டைரியில் அவர் பெயரில் எழுதப்பட்ட காசோலையை வைத்து தினத்தந்தி பேப்பரில் சுற்றி செக்யூரிட்டி  சீல் பேப்பரில் ஒட்டி அதை வண்ண காகிதங்களால் பார்சல் செய்து நண்பர்களாக சேர்ந்து கொடுத்ததையும்கொடுத்து அதை மணமேடையிலேயே பிரிக்க வைத்து அந்த காட்சியை புகைப்படம் மற்றும் வீடியோ எடுக்க வைத்ததையும்  அலுவலகத்தில் நடந்த கூத்தையும் அதனால் மார்த்தாண்டம் எங்களிடம் அனுபவித்த கச்சேரியையும்   பிரான்சில் வாழும் மார்தாண்டம்  இன்றும் நினைவு கூர்ந்து சிரிப்பார்.


இது நடந்து எத்தனையோ ஆண்டுகளாகியும் இன்னமும் எங்களது உள்ளமெனும் டைரி குறிப்பில் தெளிவாக தென்படுகிறது.

பிரான்சில் அவரை மார்தான் என்று அழைகின்றார்களாம்.

நன்றி.

மீண்டும் (சி)ந்திப்போம்


கோ

6 கருத்துகள்:

  1. ஹஹாஹ்ஹ் செம கச்சேரிதான் போல.....அதான் னாங்க நினைச்சதுதான் அந்த டைரி கல்யாணப்பரிசாகச் சென்றிருக்கும் என்பது......நல்ல காமெடி...அவர் அந்தப் பரிசை பற்றி வேறு யாரிடமும் உறுதிப்படுத்திக் கொள்ளாமல் சென்றிருக்கின்றாரே.....

    நல்ல அனுபவ விவரணம்....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பிற்கினிய நண்பர்களே,

      உங்கள் யூகம் என்றுமே தவறியதில்லை ஒன்றை தவிர(???!!!)

      வருகைக்கும், வாழ்த்துக்கும் மிக்க நன்றி.

      நட்புடன்

      கோ

      நீக்கு
  2. இப்படி தான் நடந்து இருக்கும் என்று எப்படியோ காலையிலேயே (சென்ற பதிவிலேயே) யூகித்தேன். நல்ல பதிவு, தொடர்ந்து எழுதுங்கள் !

    பதிலளிநீக்கு
  3. நண்பா,

    வருகைக்கும், வாழ்த்துக்கும் மிக்க நன்றி.

    நட்புடன்

    கோ

    பதிலளிநீக்கு
  4. யாரப்பா நீ,,,,,,,,,,,,
    சொல்,
    அருமை.

    பதிலளிநீக்கு
  5. நான் யாரென்று தெரிந்துகொள்ள.....http://koilpillaiyin.blogspot.co.uk/2015/01/blog-post_22.html படித்துவிட்டு வாருங்கள்.

    கோ

    பதிலளிநீக்கு