சில நேரங்களில் நம்மில் சிலர் அவனுக்கென்னப்பா ராஜா வீட்டு கன்னுக்குட்டி என சொல்லவதை கேட்டிருப்போம். வேறு சிலர் இந்த பிறப்புக்கு ஒரு பணக்காரன் வீட்டு நாயாகவோ அல்லது பூனையாகவோ பிறந்திருக்கலாம் என சலித்துகொள்வதை கேட்டிருப்போம்.
நண்பரோடு தொலைபேசியில் அளவலாவிக்கொண்டிருந்தேன். அப்போது வேறொரு நண்பரின் நலம் குறித்து விசாரிக்கையில் , அவர் கடந்த சில நாட்களாக விரதம் மேற்கொண்டிருப்பதாக தகவல் அறிந்தேன்.