பின்பற்றுபவர்கள்

புதன், 30 ஏப்ரல், 2025

தரணியெங்கும் தமிழ்ப் புத்தாண்டு -2

பண்ணிசைத்துப்   பறை சாற்று  ..

நண்பர்களே,

கொண்டாட்டம் தொடர்கிறது..........

முந்தைய பதிவை வாசிக்க............. தரணியெங்கும் தமிழ்ப் புத்தாண்டு வாசிக்கவும்.

வரவேற்பிற்கு பிறகு, நிகழ்ச்சி தொகுப்பாளினி அடுத்த நிகழ்ச்சி என்ன என்பதை சொல்லி அதற்கான பங்கேற்பாளர்களை மேடைக்கு அழைக்கும் முன், நடக்க போகும் நிகழ்ச்சியின் மையப்பொருளை குறித்த விளக்கம் கூறி பார்வையாளர்களின் உற்சாகத்தையும் ஆவலையும் கூட்டிவிட்டார் என்றே  சொல்லவேண்டும்.

செவ்வாய், 29 ஏப்ரல், 2025

தரணியெங்கும் தமிழ்ப் புத்தாண்டு.

 வாசம்! தேசம்!! சுவாசம்!!! 


நண்பர்களே,

நாம்  நம்முடைய பாரம்பரியமான விழாக்களை, பண்டிகைகளை  தமிழ் நாட்டில் அல்லது மற்ற மாநிலங்களில் அந்தந்த குறிப்பிட்ட சுபயோக சுபதினத்தில் அந்தந்த கொண்டாட்டங்களின் பரிபூரண வழிமுறைகளோடும் , முழுமையான தாத்பரியங்களோடும், சடங்கு   சம்பிரதாயங்களோடும் கொண்டாடி மகிழ்வதைப்போல  வெளிநாடுகளில் வசிக்கும் நம்மவர்கள் கொண்டாடுவது என்பது சாத்தியமல்ல.