பின்பற்றுபவர்கள்

ஞாயிறு, 22 மே, 2022

கிளாஸ்(ஸோட)கோ!!!

கண்ணுக்கு குளிர்ச்சி !!

நன்பர்களே,

ஸ்காட்லாந்த்து குறித்த எமது முந்தைய பதிவுகளை வாசிக்க மறந்தவர்கள்  கீழ் காணும் லிங்க்கை க்ளிக் செய்து வாசித்துவிட்டு தொடரவும்.

தண்டவாளம் ஏறிய வண்டவாளம் ! (koilpillaiyin.blogspot.com)

 ஏறி இறங்கி பார்த்தது. (koilpillaiyin.blogspot.com)

அன்று மாலை தங்குமிடம் திரும்பி சற்று இளைப்பாறிவிட்டு , மீண்டும் வெளியில் செல்ல தயாரானேன்.

தங்கி இருந்த ஓட்டல் நகர மையம் என்பதால் கடை தெருக்கள், மால்கள் ,வணிக வளாகங்கள், திரை அரங்குகள், கேளிக்கை விடுதிகள், சிற்றுண்டி சாலைகளுக்கு பஞ்சமே இல்லை.

நள்ளிரவை தாண்டியும் பரபரப்பாகவும் துடிப்புடன் இயங்கிக்கொண்டிருக்கும் நகரத்தை  கால் நடையாகவே சுற்றி அடுத்த நாள் சுற்றுலா வாகனத்தில் செல்ல திட்டமிட்டிருந்ததால் அதற்கான புறப்பாடு நேரம் , புறப்படும் இடம் போன்றவற்றை , தகவல் சேவை மையத்திலிருந்து அறிந்துகொண்டு அதற்கான கையேடுகளை சேகரித்துக்கொண்டு, அப்படியே இரவு நேர நகரத்து ஜெக ஜோதிகளை ரசித்தவண்ணம், நேரத்தை கடத்தினேன்.

இந்த நகரம் ஸ்காட்லாந்திலேயே  அதிக அளவு மக்கள் தொகை கொண்ட  நகரமாகவும்   ஒட்டுமொத்த United Kingdom லேயே மூன்றாவது அதிக மக்கள் தொகை கொண்ட நகரமாகவும் விளங்குகின்றது.

இங்கு வாழும் மக்களை (கொச்சை மொழியில்) க்ளாஸ்வேஜியன்(Glaswegian ) என்பதன் சுருக்கமாக வீஜீ(WEEGIE) என்று அழைக்கின்றனர். 

ஐரோப்பாவின் கலாச்சார நகரம் என்று அழைக்கபடும் இந்த நகரத்தில் அமைந்துள்ள மாநகராட்சி நூலகம், ஒட்டு மொத்த ஐரோப்பாவிலேயே மிக பெரிய, மக்கள் பயன்பாட்டிலுள்ள, சுமார் 1.5 மில்லியன் புத்தகங்களை கொண்ட  நூலகமாக கருதப்படுகிறது அதன் பெயர்  மிச்சேல்(Mitchelle library)  நூலகம்.


அரண்மனைபோல் காட்சி அளிக்கும் மிச்சேல் நூலகம்.

அதே போல ஐரோப்பாவிலுள்ள மிக பழமையும் மிகப்பெரிய நூலகங்களில் ஒன்றாக கருதப்படும் நூலகம்,  கிளாஸ்கோ பல்கலை கழக நூலகம், துவங்கப்பட்ட வருடம் கி. பி 1475, இப்போதிருக்கும் 12 மாடிகளைக்கொண்ட  கட்டிட வடிவமைப்பு 1968  மற்றும் 1980, 1990 களில்     திருத்தி கட்டப்பட்டவையாகும்.


12 தளங்களை கொண்ட பல்கலைக்கழக நூலகம்.

இந்த நூலகம் மற்றும் இதன்  கிளை நூலகங்களிலுள்ள அச்சு வடிவலுள்ள மொத்த புத்தகங்களின்   எண்ணிக்கை 20 லட்சத்து 50 ஆயிரம்.

மேற்கூறிய இரண்டு நூலகங்களை அடுத்த நாள்   காணும் பாக்கியம் பெற்றமை உள்ளபடியே ஒரு சிறப்பு வாய்ப்புதான்.

மற்றும் இரவு நேரத்தில் வண்ண ஒளியூட்டப்பட்டிருக்கும் சாலைகள், கட்டிடங்கள், பாலங்கள், நீரோடைகள், சாலை ஓரத்து மரம் செடி கொடிகள், பூங்காக்கள், ரயில் வண்டி நிலையங்கள், உணவு விடுதிகள், இசை  மற்றும் நாடக அரங்குகள் என பல்வேறு காட்சிப்பொருட்கள் நம் கண்ணுக்கு மட்டுமல்ல இதயத்திற்கும் இதம் சேர்க்கும் ஜெகஜோதி காட்சிகளை காண கண் இரண்டு போதாது.



இரவு நேரத்து ஆட்டம் பாட்டம் கொண்டாட்டங்கள் இவ்வூரின்  சிறப்பு. இசை , நடனம் , பல்வேறுபட்ட உணவு, பானங்கள்  போன்றவை கிளாஸ்கோவின் மற்றுமொரு பெருஞ்சிறப்பு .


இரவு தாண்டி  மற்றும் விடிய விடிய நடைபெறும் இது போன்ற ஆட்டம் பாட்டங்கள் விருந்து வேடிக்கைகள், வண்ண விளக்குகள் பலதரப்பட்ட ஆடை  அலங்காரங்களோடு கூடிய  மக்களின்  மகிழ்ச்சி  நடமாட்டங்கள்   , பார்க்கும் நமக்கும் மகிழ்வை உண்டுபண்ணுகிறது.


நான் தங்கி இருந்த விடுதி அமைந்திருக்கும் சாலை - Buchanan Street 


கூலிங் க்ளாஸ் இல்லாமலேயே கண்ணுக்கு குளிர்ச்சியூட்டும் காட்சிகள் மண்டிகிடந்தாலும், (பின்னிரவு நேரமானாலும்) கருப்பு கண்ணாடி அணிந்துகொள்வதில்   ஒரு கூடுதல் சவுகரியம் இருக்கத்தான் செய்கின்றது.

ஊரு பேரிலேயே சூசகமான  அறிவுரை இருக்கின்றதே,"கிளாஸ்(ஸோட) கோ".

ஒன்று (கூல் ட்ரிங்க்ஸ்!!) அருந்தும்  கிளாஸ் , ஸ்காட்லாந்துனா   சும்மாவா? மற்றொன்று  கூலிங் க்ளாஸ். 

எனக்கு அதிக சக்தியுடன் ஒளியை பீய்ச்சும்  வண்ண விளக்குகளால்  ஏற்படும் பாதிப்பை தவிர்க்க மட்டுமே கிளாஸ் தேவைப்பட்டது என்பது கூடுதல் தகவல். 

புரிந்தவர்கள் புரிந்துகொள்ளுங்கள், புரியாதவர்கள் புரிந்தவர்களிடம் கேட்டுதெரிந்துகொள்ளுங்கள்.

நன்றி,

மீண்டும் ச(சி)ந்திப்போம்
 
கோ.


4 கருத்துகள்:

  1. ஊரின் பெயர் விளக்கம் புன்னகைக்க வைக்கிறது. விவரம் யாரிடம் கேட்பது என்று தெரியவில்லை! கீதா உதவுவார்!

    பதிலளிநீக்கு
  2. ஊரு பேரிலேயே சூசகமான அறிவுரை இருக்கின்றதே,"கிளாஸ்(ஸோட) கோ".//

    ஹாஹாஹாஹா....பெயரிலேயே 'கோ' வுக்குப் பிடித்த கூலிங்க் க்ளாஸ்!!

    புரிந்தது புரிந்தது.

    கடைசி டயலாக் எங்கேயோ கேட்டாப்ல இருக்குதே...ஹான் விவேக் டயலாக்!!!!!!!

    கீதா

    பதிலளிநீக்கு
  3. அழகான இடம், கலகலப்பான ஊர் என்று தெரிகிறது. இரவுக் கொண்டாட்டங்கள் பல நகரங்களிலும் இப்போது உண்டு இல்லையா? இங்குமே இருக்கிறது என்று நினைக்கிறேன்.

    பிரமிக்க வைத்தவை அந்த இரு நூலகங்களும். பிரம்மாண்டம்.

    அது நதியா ஏரியா? அழகு சேர்க்கிறது

    படங்கள் எல்லாமே நன்றாக அதுவும் இரவுப் படங்கள் நன்றாக இருக்கின்றன. நூலகப் படங்களும், கடைசிப் படமும் மிக அழகு ஆனால் விரித்துப் பார்க்க முடியவில்லை மிகவும் சிறியதாக இருக்கின்றன. கொஞ்சம் பெரிதாகப் போட்டிருக்கலாமே!!!

    ரசித்து வாசித்தேன்

    கீதா

    பதிலளிநீக்கு