கிணறு எங்கே??
நண்பர்களே,
முதலில் இருந்து வாசிக்க ஞான தங்கமே...
பள்ளி கூடத்தில் யார் யார் மிதி வண்டிகளில் வருகிறார்கள், எந்த வண்டி யாருடையது..பெல்லை தவிர மற்ற எல்லா இடங்களிலும் இருந்து சத்தம் வரும் வண்டி யாருடையது, இந்த பெல் சத்தம் யாருடைய வண்டிக்கு சொந்தமானது போன்ற அத்தனையையும் அத்துப்படியானதால், ஐந்தாண்டுகள் எந்த தடையோ தடுமாற்றமோ இன்றி நாட்கள் நகர்ந்தன.
அடுத்து கல்லூரி மிதி வண்டி நிறுத்தத்திலும், சேர்ந்த சில நாட்களுக்குள் , யார் யார் என்னென்ன வாகனம், எங்கு நிறுத்துவார்கள் - நிறம் - மணம் - குணம் - சத்தம்... போன்ற அத்தனையும் புத்திக்குள் புகுந்ததினால் மீண்டும் ஐந்தாண்டுகள் எந்த குழப்பமும் இல்லாமல் நாட்களின் சக்கரங்கள் பழுதின்றி சுழன்றன.
அதன் பிறகு இந்தியாவில் சில ஆண்டுகள் வண்டி ஓட்டியபின் - இதை குப்பை கொட்டியபின் என்றும் வாசிக்கலாம். அதை தொடர்ந்து இன்றுவரை வெளிநாடுகளில் வாழ்க்கை தொடர் பயணத்தில் பலவிதமான நவீன வாகன நிறுத்தங்களின் நடைமுறைகள் , விதி முறைகள், வழி(வாய்க்கால்)முறைகள் போன்றவை விரல் நுனியில் குடியுரிமை பெற்றுவிட்டன.
அவ்வரிசையில் தற்போது வசித்துவரும் நாட்டின் பிரதான நகரத்தின் மையத்தில் அமைந்திருந்த , திரை அரங்குகள், உணவு விடுதிகள், வணிக வளாகங்கன் , உடற் பயிற்சி கூடங்கள் என அனைத்தும் ஒரே கூரையின் கீழ் அமைந்திருக்கும் பிரமாண்ட வளாகத்தில் உள்ள சுமார் 2500 வாகனங்கள் நிறுத்தக்கூடிய பல மாடி கார் நிறுத்தத்திற்குள்ஒரு சனிக்கிழமை மாலை செல்ல வேண்டி இருந்தது.
வார இறுதி விடுமுறைநாள் என்பதால் , வளாகம் செல்ல பல வாகனங்கள் எனக்கு முன் காத்திருந்தன.
முகப்பில் இருந்த எலெக்ட்ரானிக் எந்திரங்கள், உள்ளே வரும் ஒவ்வொரு வாகனத்தின் பதிவு எண்களை புகை படம் எடுத்துக்கொண்டு வாகனத்தின் பதிவு எண், நுழையும்நேரம் , நுழைவு வாசல் எண் போன்றவற்றை அச்சடித்து வெளியில் ஒரு அட்டையை நீட்டும். அந்த அட்டையை நாம் எடுத்தவுடன், ரயில் பாதையின் லெவல் கிராஸிங்கில் இருக்கும் நீண்ட தடுப்பு கேட் போலுள்ள பைபர் தடுப்பு மேலே தூக்கி வழிவிடும்.
என் முறை வந்ததும் அட்டையை எடுத்துக்கொண்டு வளாகம் நுழைந்து பல நிமிட , பல சுற்றுக்கள் கீழிருந்து மேலாக சுற்றி ஒரு வழியாக ஒரு இடம் கிடைத்து அதில் வாகனத்தை நிறுத்திவிட்டு, கவனமாக பூட்டிவிட்டு மேல் இரண்டு மூன்று மாடிகள் லிப்ட் மூலம் பயணித்து வணிக வளாகம் வந்துவிட்டேன்.
அங்கிருந்து அடுத்த நாள் கொண்டாட இருக்கும் ஒருவரின் பிறந்த நாள் பரிசு பொருளொன்றும் சிலபல துணி மணிகளையும் வாங்கிக்கொண்டு அப்படியே அங்கிருந்த ஜெக ஜோதிகளை ( திண்டுக்கல் தனபாலிடம் விளக்கம் கேட்டு தெரிந்துகொள்ளுங்கள்) கண்டு களித்துவிட்டு , கடைகள் மூட , இன்னும் நாற்பத்தைந்து நிமிடங்களே உள்ள நிலையில் வாகன நிறுத்தம் இடத்திற்கு வந்து சேர்ந்தேன்.
வரிசையாய் நிறுத்திவைக்கப்பட்டிருந்த பணம் செலுத்தும் இயந்திரத்தில் என்னுடைய வண்டிக்கான நுழைவு சீட்டை நுழைத்து அதற்குண்டான கட்டணத்தை செலுத்திவிட்டு, என் வாகனத்தை நிறுத்திவிட்டுபோன தளத்திற்கு வந்து பார்க்க அங்கே..... என் வாகனம் இல்லை.
இதுவரை என் அனுபவத்தில் என்னுடைய வாகனம் இப்படி காணாமல் போனதில்லை. இந்த வாகனம் நிறுத்தும் வளாகம் இருபத்தி நான்கு மணி நேரம் இயங்க கூடிய , கண்காணிப்பு கேமராக்கள் நிறைந்த , மேலும் எல்லா தளங்களிலும் பிரத்தியேக காவல் மற்றும் உதவி அதிகாரிகள் நிறைந்த பாதுகாப்பு வளாகம்.
அப்படி இருந்தும் என் வாகனம் காணாமல் போனது எனக்கு பேரதிர்ச்சியாக இருந்தது.
ஜெர்மனியின் புகழ் பெற்ற நிறுவன தயாரிப்பின் இரண்டாம் வரிசை (2 series) சொகுசு கார், பிரத்தியேகமாக ஆர்டர் கொடுத்து தனித்துவம் (personalized) இழைத்து வாங்கிய கார்.
வெளியில், விலை உயர்ந்த, கார் திருட்டு ஆங்காங்கே நடப்பது அறிந்தே இந்த பாதுகாப்பான இடத்தில் நிறுத்தி சென்றேன் இங்கும் இப்படியா... அது எப்படி?
இப்படி காணாமல் போனது குறித்து மிகுந்த கவலை அடைந்து செய்வதறியாது திகைத்து நின்றேன்... இல்லை அங்கிருந்த பெஞ்சில் உட்கார்ந்தேன்.
அடுத்து என்ன செய்வது.....
யோசிக்க கொஞ்சம் அவகாசம் தேவை என்பதால் மேற்கொண்டு நடந்தது என்ன என்பதை நாளை சொல்கிறேன்.
அதுவரை.... கொஞ்சம் .. ..பொறுமை..ப்ளீஸ் ....
நன்றி.
மீண்டும் ச(சி)ந்திப்போம்.
கோ.
ஐய்யோ என்ன இப்படி ட்விஸ்ட் மேல ட்விஸ்ட் வெச்சு...
பதிலளிநீக்குமுழுசா சொல்லி முடிக்காமலே பதிவை முடிச்சு இருக்குரீங்கலே சார்.
உங்கமாதிரி கார் தொலைத்தவுங்க உட்கார bench போட்டிருப்பாய்ங்கலோ என்னவ்ஓ:)
***
ஆமாம் இப்போ எந்த நாட்டில் சார்?
***
அப்படியே அங்கிருந்த ஜெக ஜோதிகளை கண்டு களித்துவிட்டு ,///
அதுக்கு மெல என்ன பன்ன முடியும்.
வீட்டுக்கு கூட்டிட்டு வந்துதான் அழகு பார்க்கதான் முடியுமா:(((
ஐய்யோ என்ன இப்படி ட்விஸ்ட் மேல ட்விஸ்ட் வெச்சு...
பதிலளிநீக்குமுழுசா சொல்லி முடிக்காமலே பதிவை முடிச்சு இருக்குரீங்கலே சார்.
உங்கமாதிரி கார் தொலைத்தவுங்க உட்கார bench போட்டிருப்பாய்ங்கலோ என்னவ்ஓ:)
***
ஆமாம் இப்போ எந்த நாட்டில் சார்?
***
அப்படியே அங்கிருந்த ஜெக ஜோதிகளை கண்டு களித்துவிட்டு ,///
அதுக்கு மெல என்ன பன்ன முடியும்.
வீட்டுக்கு கூட்டிட்டு வந்துதான் அழகு பார்க்கதான் முடியுமா:(((
மகேஷ்,
நீக்குநான் வேணாம்னு நினைச்சாலும் உன் நினைவு வந்து பதிவுல ட்விஸ்ட் வைக்க சொல்லுது.
வருகைக்கு மிக்க நன்றி மகேஷ்.
கோ
அடடா!! ஏதோ நினைத்து வந்தால் இப்படி சோகமான நிகழ்வாகிவிட்டதே...
பதிலளிநீக்குவோல்க்ஸ் வேகன்? பென்ஸ்? போர்ஷ்? பிஎம்டபிள்யு? ஔடி? எதுவாக இருந்தாலும் கிடைச்சிருக்கும்னு தெரியுது....
அதனால பரபரப்பு இல்லை!! ஹா ஹா ஹா ஹா
துளசிதரன், கீதா
அன்பிற்கினிய நண்பர்களே,
நீக்குவருகைக்கும் சோகத்தில் நீங்கள் ஏற்கும் பங்கிற்கும் மிக்க நன்றிகள்.
எதுவானாலும் கிடைக்குமென்ற தங்கள் நம்பிக்கையூட்டும் வார்த்தைகளுக்கும் மிக்க நன்றிகள்.
கிடைத்ததும் சொல்லி அனுப்புகிறேன்.
கோ
ஏன் எங்கள் கமென்ட்ஸ் எதுவும் இங்கு பப்ளிஷ் ஆகலை?
பதிலளிநீக்குகீதா
அன்பிற்கினிய நண்பர்களே,
நீக்குஅதான் இப்போ பப்லிஷ் ஆயிடுச்சில்ல... அப்புறம் ஏன் நொய்... நொய் ....நொய்யின்னு....
என்றும் நட்புடன்.
கோ.