இதமான இனிய வாழ்வை தருக!!
நண்பர்களே,
டிசம்பருக்கு அடுத்து வரும் முதல் மாதத்தின் முதல் நாள் ஆங்கில வருடப்பிறப்பு என்பது தெரிந்ததே.
இது வருடா வருடம் வந்தாலும் சலிப்பதில்லை இதன் மவுசு குறைவதில்லை.
புத்தாண்டை வரவேற்பதும் குதூகுல மகிழ்ச்சி கொண்டாட்டங்களில் பங்கேற்பதும் சிறப்புதான்.
ஆன்மீக நம்பிக்கையாளர்கள் தங்கள் நம்பிக்கையின் அடிப்படையில் ஆலய வழிபாடு செய்தும், குல தெய்வ பூசைகள் செய்தும் இந்த புதிய நாளில் அடி எடுத்து வைப்பார்கள்.
மற்றவர்கள், தங்கள் பெற்றோர்களை வணங்கி ஆசிபெற்று இந்த நாளை துவங்குவார்கள்.
புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கென்றே புதிய ஆடைகள் அணிவதிலும், புதிய அணிகலன்களை அணிவதிலும் சிறப்பான உணவு தயாரித்து நண்பர்கள் உறவினர்களுடன் பகிர்ந்து உண்பதிலும் தங்கள் மகிழ்ச்சியினை வெளிப்படுத்துவார்கள்.
இந்த நாளில் பலரும் தங்களால் இயன்ற தர்ம காரியங்களை நம்மை விட வறியவர்கள், ஏழைகள், விதவைகள், அனாதைகள்,மாற்று திறனாளிகள் மன நிலை பாதிக்கப்பட்டவர்கள் போன்றோருக்கு செய்து அதில் மகிழ்வார்கள்.
வேறு சிலர், தியானம் என்ற பேரில், அன்றைய நாள் முழுவதும் யாரிடமும் பேசாமல், யாரையும் பார்க்காமல் தங்களை தனிமை படுத்திக்கொவார்கள்.
ஒருவிதத்தில் அது அவருக்கு நிம்மதியையும் மன நிறைவையும் தனிமையில் கடந்த வருடத்தில் தமக்கோ அல்லது தமது குடும்பத்திற்கோ, உறவுகளுக்கோ, நண்பர்களுக்கோ நிகழ்ந்த பலதரப்பட்ட நிகழ்வுகளை மீள் நினைவு கூறவும், அதன் காரண காரியங்களை அலசி, வரும் நாட்களில் இதுபோன்ற தருணங்களில் எப்படி முன்னெச்சரிக்கையாக நடந்துகொள்ளவேண்டும், அதற்கு தம்மை எப்படி தயார் படுத்திக்கொள்ளவேண்டும் என்று ஆழமாக சிந்திக்கவும் அந்த தனிமையை பயன்படுத்துவார்கள்.
வேறு சிலர் நல்ல கருத்துக்கள் கொண்ட சமூக , சமய நூல்களை படிப்பதிலும் இந்த நாளை பயன்படுத்துவார்கள்.
இளைஞர்கள், இந்த நாளில் தங்கள் நண்பர்களோடு விருந்து , திரைப்படம், சுற்றுலா என மகிழ்ந்திருப்பார்கள்.
மேற் சொன்ன அத்தனையும் எதோ ஒரு வகையில் இந்த புத்தாண்டை மகிழ்சசிகரமாக பிரயோஜனமான வகையில் மேற்கொள்வார்கள்.
அதே சமயத்தில், சில (பொறுப்பற்ற) இளைஞர்கள் அளவுக்கு அதிகமாக குடித்துவிட்டு, சாலையில் எதிர்ப்படும் அனைவரையும் தகாத முறையில் தொட்டும் தொந்தரவு செய்தும் அருவருப்பான வார்த்தைகளை சொல்லியும் , மோட்டார் சைக்கிளில் குட்டி கரணம் அடித்தும் , பேரிரைச்சலை ஏற்படுத்தியும் இந்த நாளை அனுசரிப்பது முற்றிலும் ஏற்புடையதாகாது.
எந்த பண்டிகை, அல்லது கொண்டாட்டமானாலும், மற்றவரை எதிர்மறையாக பாதிக்காத வகையில் அமைதியாக கொண்டாடுவது அனைவருக்கும் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தும்.
அளவிற்கு மீறினால்.......எதுவும் நன்மை பயக்காது என்பதை நினைவில்கொண்டு , சுற்று சூழல் விதிகளுக்கு கட்டுப்பட்டு இந்த புத்தாண்டை மகிழ்ச்சியாக கொண்டாடுவோம்.
புத்தாண்டை வரவேற்கும் இத்தருணத்தில் பழைய ஆண்டிற்கு நன்றி சொல்லி வழி அனுப்பி வைப்பதோடு நம் பழைய துர்சிந்தனைகள், பழக்கங்களுக்கும் விடைகொடுத்து வழி அனுப்பிவிட்டு புதிய சிந்தனைகள் நல்ல வழக்கங்கள் நம்மை வந்தடைய வழி சமைத்து வரவேற்போம்.
வரும் 2019 புத்தாண்டை வலதுகாலையோ அல்லது இடது காலையோ எடுத்து வைத்து வா என வரவேற்பதற்கு பதில் எந்த காலானாலும் பரவாயில்லை , இந்த நாள் மட்டுமின்றி இந்த ஆண்டு முழுவதும் நன்மைபயக்கும் இடரலில்லா ஆண்டாக வருக இதமான இனிய வாழ்வை தருக என வாழ்த்தி வரவேற்போம்.
அனைவருக்கும் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.
மீண்டும் ச(சி)ந்திப்போம்.
கோ
இனிய புத்தாண்டு வாழ்த்துகள் கோ!!
பதிலளிநீக்குரொம்ப நாளாகிவிட்டதே! ஏற்கனவே பதிவுகள் இல்ல பல மாதங்களாக...அப்ப இனி அடுத்தவருடம் தான் பதிவுகள் வருமோ?!!!!!!!
கீதா
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
பதிலளிநீக்குhai sir
பதிலளிநீக்குவருடத்தின் முதல் நாலான இன்று தங்கலின் பதிவை பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி.
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.
மனம் நிறைந்த புத்தாண்டு வாழ்த்துகள்.
பதிலளிநீக்கு