பின்பற்றுபவர்கள்

வெள்ளி, 30 டிசம்பர், 2016

காயமும் மாயமும்!!!!

 தீர்க்கதரிசனம்  ?

நண்பர்களே,

இந்த ஆண்டு  நிகழ்ந்த பேரிழப்பின் வடுவும் வலியும்  ஆறாத மனநிலையில் விழாக்கள், கொண்டாட்டங்களில் அத்தனை ஆர்வமில்லாமல் இருந்தேன்.

அதனால் அலுவலகத்திலோ மற்ற பொது இடங்களிலோ நடந்த எந்த மகிழ்ச்சிகரமான நிகழ்வுகளிலோகூட கலந்துகொள்ளும் விருப்பம் இல்லாமல் இருந்ததை உணர்ந்த நண்பர்களின் வற்புறுத்துதலின் பேரில் , நண்பர் ஒருவரின் வீட்டில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் விருந்திற்கு சென்றிருந்தேன்.

துக்க வீட்டிற்கு செல்லும்போது துக்கம் அனுசரிக்கவேண்டும் என்பதும் மகிழ்ச்சியான தருணங்களை கொண்டாடும் வீட்டிற்கு மகிழ்சியாகவும் செல்லவேண்டும் என்ற என் அன்னையின் போதனைக்கேற்ப அவர்களோடு மகிழ்சியாக இருக்க  முடிந்தவரை முயற்சி செய்தேன்.

எனினும் அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பதுபோல் என்னுடைய அகத்தின் சோக நிழல் என் முகத்தில் படர்ந்திருப்பதை உணர்ந்த நண்பர்என்னுடைய மன நிலைமையை மாற்றும் பொருட்டு எனக்கு பிடித்தமான ஒரு பிரபலத்தை குறித்து பேச ஆரம்பித்து அதில் என்னுடைய பங்கையும் சேர்க்கும்பொருட்டு அவரது நினைவை குறித்த சில செய்திகளை கேட்கவும் பகிரவும் வைத்தனர்.

அப்படி எனக்கு மிகவும் பிடித்தவர்களுள் ஒருவரான காலம் சென்ற தமிழகத்தின் முன்னாள் முதல்வரும் புரட்சி எனவும் அடைமொழிக்கு சொந்தக்காரராகவும் தமிழகத்தின் தலையாய அரசியல் கட்சிகளுள் பிரதான  கட்சி தலைவராக திகழ்ந்தவரும், இதே டிசம்பர் மாதத்தின் ஒரு கருப்பு தினத்தன்று , தமிழகத்தை மட்டுமல்லாது தமிழ் கூறும் நல்லுலகத்து மாந்தர்கள் அனைவரையும் தீரா துயரத்திலும் மீளா கண்ணீரிலும் ஆழ்த்தி சென்ற  தனிப்பிறவியான பொன் மன செம்மல் டாக்டர் எம் ஜி ஆர் அவர்களை குறித்த நினைவு பேச்சுக்கள் தான் அவை.

அப்படி பேசிக்கொண்டிருக்கையில் அவரது திரைப்பட பாடல்களும் அவற்றுள் 90 சதவீத பாட்டுக்கள் அவரது பிற்கால வாழ்க்கையிலும் பரிணாம வளர்ச்சியிலும் , அடுத்தடுத்த பரிமாணங்களிலும் எப்படி ஒத்துபோய் இருந்தன என்பதை குறித்தும் , இத்தனை தீர்க்க தரிசனமாக வகையில் அவரால் எப்படி பல ஆண்டுகளுக்கு முன்னரே சிந்தித்து அதற்கேற்ப பாடல் வரிகளை அமைக்க வைத்தார் எனும் ஆச்சரியமான செயல் குறித்து பேசிக்கொண்டும் சில பாடல்களை உதாரணம் காட்டியும் பேசிக்கொண்டிருந்தோம்.

அவ்வகையில் நண்பர் சொன்ன ஒரு சில பாடல்கள் மட்டும் அவரது வாழ்க்கையில் எந்த தீர்க்க தரிசனமாக பிரதிபலிப்பையும் ஏற்படுத்தவில்லை என கூறினார்.

அப்படி அவர் கூறிய அந்த பாடல்களில் இந்த ஒருபாடலும் அடக்கம்

நீங்களே கேட்டு ஒரு முடிவிற்கு வாருங்கள் இதில் ஏதேனும் தீர்க்கதரிசன பிரதிபலிப்போ சாயலோ இருக்கின்றதா  இல்லையா என.
நன்றி

மீண்டும் ச(சி)ந்திப்போம்

கோ

2 கருத்துகள்:

  1. கன்னத்தில் என்னடி காயம்.... நல்ல பாடல்.

    கடைசியில் கன்னத்தில் காயம்!

    பதிலளிநீக்கு